எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்… Soup சைவமா – அசைவமா?

ந்த சந்தேகம் Vijay TV பார்த்ததுக்கப்புறம் தான் வந்த்தது. நேற்று 24-Dec-2006, Vijay-Tv ல் “நீயா-நானா”..நிகழ்ச்சிய்யை பாதியிலிருந்து பார்த்தேனா….எனக்கு தலைப்பு correct ஆ ஞ்யாபகம் வரலை..கிட்ட-தட்ட இப்படி இருந்தது “நமது உணவு பழக்கங்களின் காரணமாக, சமுதாய-வெறுபாடு காண்கிறோமா?”

அதாவது அசைவம் சாபிடுகிறவங்க “எங்களுடைய உணவில் தான் Balanced diet (B-complex vitamins are found in abundance only in meat products) ” என்றும்…சைவம் சாப்பிடுகிரவங்க “எங்கள் உணவிலும் Balanced diet( spinach & etc for bcomplex vitamins) உண்டு .. அப்படின்னு என்னெனமோ சொல்லிகிட்டே பொனாங்க..

அதில் Hotel Industry ல் அனுபவம் உள்ள ஒரு நபர் (அசைவம் சாப்பிடுகிரவர்) சொன்னார்…..ஹோட்டலில் .. 3-Star; 5-star..any star அசைவம் சமைக்கும் தண்ணீரில் .. அதாவது..அசைவ உணவை வேகவைக்க பயன்படுத்தும் வென்னீரில் தான் Veg-soup பும் செய்கிரார்கள். அதனால்தான் Soupக்கு இருக்கும் தனிபட்ட வாசனை Veg-Soupல் வருகிறது.

இது உண்மையா..தயவு செய்து விஷயம் தெரிந்தவர்கள்– Hotel Industry & Catering Technology ல் அனுபவம் உள்ளவங்க “”உள்ளதை உள்ளபடி”..மறைக்காம சொல்லுங்க.

நான் ஒரு Eggitarian (ie..Vegitarian who eats egg only) எனக்கு அசைவம் சாப்பிடுகிரவங்க கிட்டே எந்த விரோதமும் இல்லை.. Zoology படித்த காரணமோ என்னமோ .. வேட்டுகிறது – அறுக்கிறது பாக்க அறுவெறுப்பு கிடையாது.. TV ல் அசைவ சமையல் பாத்து–அவங்க உபயோக படுத்துகிர Meat க்கு பதில் உருளைக்கிழங்கு போட்டு சமைச்சு இருக்கேன்… (Recipies எல்லாம் நல்லா தான் இருந்துது)..

அசைவம் சாப்பிடுகிற நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க. எல்லாரும் ஒண்ணா ஹோட்டல் போவோம்…அவங்க அசைவம் சாபிடுவாங்க.. நானும் – என்னைப்போல சிலரும் கிடைக்கிற சைவ-உணவு ( ஒண்ணும் இல்லைன்னா Soup குடிச்சிட்டு தயிர்-சாதம் சாப்பிட்டு கம்முன்னு இருப்போம்)

ஆக soupஐ தவிர்க்க முடியாது. எங்க வீட்டு பாட்டி ஒரு Strict vegitarian அவங்க Soup – IceCream விட்டா ஹொட்டலில் வேறெதுவும் சாப்பிடமாட்டாங்க… So..This is a Humble request to all my readers ஹோட்டலில் .. 3-Star; 5-star..any star அசைவம் சமைக்கும் தண்ணீரில் .. அதாவது..அசைவ உணவை வேகவைக்க பயன்படுத்தும் வென்னீரில் தான் Veg-soup பும் செய்கிரார்கள்.

இது உண்மையா இல்லையா…உங்களுக்கு தெரிஞ்சா மறைக்காம சொல்லுங்க.. முடிஞ்சா Hotel Industry & Catering Technology ல் அனுபவம் உள்ளவங்க கிட்டே சிரமம் பார்க்காம கேட்டு சொல்லுங்க..

ஹம்..ஹம்.. எங்க பெரிய-பாட்டி Great-Grandmother சொல்லுவாங்க….”அந்த காலத்துல வெளியூர் போனா..ஒரு Special Cooking kit எடுத்து போவாங்களாம்.. அந்த kit ல் ஒரு குட்டியூண்டு கும்முட்டி-ஆடுப்பு.. 2 பாத்திரம் (அரிசி & குழம்பு /ரசம் வைக்க) 3 கரண்டி (அரிசி & குழம்பு /ரசம் & தையிர்), கரி வைக்க ஒரு pouch எல்லாம் இருக்குமாம்.

என்னமாதிரி Eggitarians & Veggitarians க்கு இனிமே இந்த Cooking kit தேடவேண்டியது தானா..இனி இந்த மாதிரி புராதன-வஸ்து எல்லாம் எங்கேன்னு பொயி தேட..(..Even antique shops will not be having it… ஒருவேளை Museum ல் பொயி விசாரிச்சா கிடைக்குமோ…..

..பார்த்தீங்களா..இப்பொவே பெனாத்த ஆரம்பிச்சாசு…பெனாத்தி-பெனாத்தி நான் குத்தாலம் போகரத்து முன்னாடி…..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. Veg-Soup saivamaa- asaivamaa..

21 Replies to “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்… Soup சைவமா – அசைவமா?”

  1. “அதில் Hotel Industry ல் அனுபவம் உள்ள ஒரு நபர் (அசைவம் சாப்பிடுகிரவர்) சொன்னார்…..ஹோட்டலில் .. 3-Star; 5-star..any star அசைவம் சமைக்கும் தண்ணீரில் .. அதாவது..அசைவ உணவை வேகவைக்க பயன்படுத்தும் வென்னீரில் தான் Veg-soup பும் செய்கிரார்கள். அதனால்தான் Soupக்கு இருக்கும் தனிபட்ட வாசனை Veg-Soupல் வருகிறது.”
    I too have heard that. I am afraid it is true. Better to go to an all-vegetarian hotel and try to avoid hotels giving combined fare.

    Regards,
    Dondu N.Raghavan

  2. அமெரிக்காவில் தெரிந்தவரை சூப் செய்வதற்கு சிக்கன் ப்ராத்(chicken broth) பயன்படுத்துவார்கள். கேட்டுக்கொண்டால் வெஜ்-ப்ராத்தில் செய்வார்கள். அது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆகவே உணவகத்தில் கேட்டு (அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இருந்தால்)சாப்பிடவும். இல்லாவிட்டால் மெக்டோனால்டின் ஃபிரைஸை துறந்த மக்கள் மாதிரி சூப்பை துறக்கவேண்டும். சில சூப்பர் மார்க்கெட்டுகளில் வெஜ் ப்ராத் அல்லது வெஜ் ஸ்டாக் செய்ய கட்டிகள் வைத்திருப்பார்கள். அதை பயன்படுத்தி வீட்டிலேயே சூப் செய்து சாப்பிடலாம்.

  3. நன்றி டோண்டு
    …அப்போ All Veg hotel தான் போகணும்.. Family Get-to-gather க்கு செரி… Official gatherings ல என்ன பண்ண.. சஷ்டி–சப்தமி-ஏகாதசி…சொல்லி வெரும் Icecream diet ல இருக்க வேண்டியது தான்

  4. நாகு
    ரொம்ப நாளைக்கு முன்னாடியே Knoor Soup க்கு மாறியாச்சு..Soup விஷயமே.. இப்பொ தான் தெரிஞ்சுது..இனியும் இதுமாதிரி என்ன-என்னெல்லாம் இருக்கோ…ஆண்டவனுக்கே வெளிச்சம்

  5. சூப் அசைவமாக இருக்கக் கூடும் – உண்மை தான். “vegetable broth/stock” என்று கேட்டுக் கொண்டால் சில நல்ல உணவகங்கள் அதை வழங்கலாம். மற்ற உணவகங்களில், நான் பார்த்த வரையில், சர்வர், “இதோ கேட்டுட்டு வரேன்..” என்றவர் திரும்பி வந்து, “இல்லைங்க, அது வெஜிடேரியன் தான்” என்று துண்டை(hand-cloth?)ப் போட்டுத் தாண்டி மிதிப்பார். நல்ல, பெயர் பெற்ற உணவகங்களில் சைவ உணவுகளை நீங்கள் கேட்டுப் பெற முடியும்…

    Good luck!

  6. எது சைவம் எது அசைவம்? முட்டையும் அசைவம் தான். செடிகளிலிருந்து எடுக்கப்பட்ட உணவுவகைகள் தான் சைவம் என்றால் உப்பும் அசைவம். மிருகங்களிடம் இருந்து பெறும் உணவுவகைகள் அசைவம் என்றால் பால் அசைவம். வெண்ணை அசைவம். நெய் அசைவம். மோரும் தயிரும் அசைவம். ஆனால் மிருகங்களை வதைத்து சித்திரவதை செய்து பெறும் உணவுவகைகள் தான் அசைவம் என்றால் சூப் போன்ற உணவுகளும் அசைவம். நான் ஐந்து வருடங்கள் கொல்கத்தாவில் வாழ்ந்தபோது மீன் பொரித்த எண்ணையிலேயே அப்பளம் பொரித்துத்தருவார்கள். இது அசைவமா சைவமா? யோசித்தால் ஆபத்து. உண்டால் வாழ்வு

  7. நாகு சொல்வதுபோல் அமெரிக்காவில், chicken broth, meat broth, vegetable broth, இவற்றில் எந்த broth-இல் செய்யப்பட்டது என்று கேட்டுக்கொள்ளமுடியும்.

    //ரொம்ப நாளைக்கு முன்னாடியே Knoor Soup க்கு மாறியாச்சு//

    Knorr சூப்பில் என்ன பிரச்சினை தெரியுமா? மோனோசோடியம் க்ளூட்டமேட் (monosodium glutamate (MSG)) இருக்கலாம், அல்லது அதிக டிரான்ஸ் கொழுப்பு (trans fat) இருக்கலாம். லேபிளைப் பார்க்கவும். hydrogenated அல்லது partially hydrogenated எண்ணையில் செய்யப்பட்டிருந்தால் அதில் டிரான்ஸ் கொழுப்பு உள்ளது என்று பொருள். டிரான்ஸ் கொழுப்பு நல்லதல்ல.

    MSG அதிகமானால் உடலுக்குக் கேடு. மேகி நூடுல்ஸில் MSG இல்லை ஆனால் மற்ற பல நூடுல்ஸ்களில் உண்டு. நம்மூரில் சீன உணவில் அஜினோமோட்டோ ajinomoto என்று ஒன்று உபயோகிப்பார்களே, அது சாட்சாத் MSG-யே தான். தொலைக்காட்சியில் அதற்கு விளம்பரமெல்லாம் போடுகிறார்கள் தான், ஆனால் தப்பித்தவறியும் அஜினோமோட்டோ உபயோகிக்காதீர்கள்.

  8. வாங்க ராம்..

    நீங்க சொல்லுவது போல.. ரொம்ப எல்லாம் யோசிக்க கூடாது… அப்புறம்.. Literally and figuratively வாயு-பக்ஷணமும்…ஜலாஹாரமும் சாப்பிட்டு வாழவேண்டியது தான்

  9. வாங்க..சேது..
    ரொம்ப நாளாச்சு வந்து..

    Ajinomoto குறித்து முன்னயே தெரியும்..அதனால..பல Chineese food வீட்டுல பண்ணரது தான்.. என்ன மிஞ்சி போனா…காய்கரி எல்லாம் Thin-long-Slice ல் நறுக்கி… மொத்தமா.. Rice ல் கலந்து சாப்பிட்டா… Mixed-Rice or Fried Rice… இல்லைன்னா.. அந்த-அந்த vegetable Rice ன்னு சொல்லவேண்டியது தான்..

    MSG & Transfat எனக்கு புது தகவல்..நன்றி.இனிமே.. Soup, Home-made ன்னா மட்டும் தான்.. சித்திரமும் கைப்பழக்கம்-செந்தமிழும் நா (னா)..பழக்கம்(( Please correct this yourself and give me the correct spelling))..ன்னு சொல்லுவாங்க இல்லையா..அது மாதிரி.. Frequent ஆ பண்ணினா..வீட்டுல பண்ணுகிர Soup லெயும் Taste Improvement இருக்கும்..

  10. நான் சாப்பிட்ட சூப் எல்லாமே பொதுவாக வீட்டில் செய்தது தான். உதாரணத்துக்கு நாட்டுத்தக்காளியை முழுதாக வேகவைத்து, தோலுரித்து, இஞ்சி, வேகவைத்து தோலுரித்த ஒரு உருளைக்கிழங்கு, பச்சைமிளகாயுடன் விழுதாக அரைத்து, தண்ணிர் சேர்த்து கரைத்து, அடுப்பில் சிம்மில் 10-15 நிமிடம் காயவைத்து, கொத்துமல்லித்தழை, நெய்யில் வறுத்த ரொட்டித்துன்டுகள், பசும்வெண்ணை, (முக்கியமாக)உப்பு, மிளகுத்தூள் செர்த்து பருகினால், அருமையாக இருக்கும். இதேபோல மற்ற காய்கறிகளாலும் சூப் செய்யலாம்.

  11. //ரொம்ப நாளாச்சு வந்து//

    தமிழ்மணம் உதவிப்பக்கம் பார்த்து, மறுமொழி நிலவரம் தெரிய ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா அடிக்கடி வர சுலபமாயிருக்கும் 🙂

    டிரான்ஸ் கொழுப்பு பத்தி இப்ப தான் awareness வர ஆரம்பிச்சிருக்கு. ரெண்டொரு வருசம் முன்னாடி தான் அதைப் பத்தி கேள்விப்பட்டேன். இப்பல்லாம் எல்லா உணவுப் பொருட்களிலும் உள்ள லேபிள்களில், Nutrition Facts பட்டியலில் Fat, Saturated Fat, Unsaturated Fat, Poly-unsaturated Fat, Mono-unsaturated Fat இவற்றோட சேர்த்து, Trans Fat எவ்வளவுன்னும் போடணும்னு அமெரிக்காவில் சட்டம் கொண்டுவந்திருக்காங்க.

    //சித்திரமும் கைப்பழக்கம்-செந்தமிழும் நா (னா)..பழக்கம்(( Please correct this yourself and give me the correct spelling))//

    சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் 🙂

  12. ***********
    சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் 🙂
    ***************நன்றி..

    ***********
    தமிழ்மணம் உதவிப்பக்கம் பார்த்து, மறுமொழி நிலவரம் தெரிய ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா அடிக்கடி வர சுலபமாயிருக்கும் 🙂
    *************
    I think you are refering to showing the post in “Recently commented posts” section…Could you please guide me ..I get lost as soon as i enter the help section

  13. என்ன இவ்வளவு எல்லாம் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் தூள் கிளப்புககறீர்கள், தமிழ்மணம் மறுமொழியப் பட்டவை (Recently commented) பகுதியில் இடம் பெற bloggerஇல் comment moderationஐ அமல் படுத்த வேண்டியதுதான்.

  14. Comment Moderation enable
    பண்ணியாச்சு,.. அப்பொ என் புதிய பிளாக்கர் பார்த்துட்டு தான் வரீங்களா..

    இதை தமிழ் வாசகர்களுக்குகாக மொழியாக்கம் செய்ய சொல்லி கோரிக்கை வந்திருக்கு,,..

    துளசி-ரவி-ராம்தாஸ்.. மற்றும் பல பேர் கிட்டே குட்டு வாங்கி தான் என்னொட தமிழ் கொஞ்சம் படிக்கிற மாதிரி முன்னேறி இருக்கு..அதனால பிளாகர் குறித்து உள்ள பதிவுகளை தமிழாக்கம் செய்வது எனக்கு இப்பொதேக்கு கொஞ்சம் சிரமம் தான்..

    இப்பொவே நான் 3 பிளாக் நிர்வகிக்கிறேன்
    Perceptionsதொடுவானம் New Blogger Template
    எல்லத்துலெயும் அப்பொ அப்பொ பதிவுகள் போட்டு வருகிறென்..இன்னும் ஒன்று ஆரம்பிதால்.. அதுக்கு செரியான முக்கியத்துவம் குடுக்க முடியுமா தெரியவில்லை..
    ஒரு TEAM BLOG முயர்சிக்கணும் ன்னு இருக்கு..
    🙂
    உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரவது முன்வன்தாங்கன்னா சொல்லுங்க.. தமிழ் மட்டுமே தெரிந்த பதிவாளர்களும் பயன் பெறலாம்

  15. //Could you please guide me//

    யாரை உதவி கேட்கிறதுன்னே இல்லையா? 😀 நானே வலைப்பதிவு செய்யறதில்லை.. இதைப் பத்தியெல்லாம் எனக்கு அவ்வளவா தெரியாது. எனக்குத் தெரிஞ்சு: (1) மறுமொழி மட்டுறுத்தல் செய்யணும் (2) அதைத் தமிழ்மணத்துக்குத் தெரியப்படுத்தணும். இந்தப் பக்கம் உபயோகப்படுமான்னு பாருங்க:
    http://tamilblogging.blogspot.com

  16. //But the instructions are for classic blogger template..:-(//

    அப்படின்னா வலைப்பூவில் அனுபவம் உள்ளவங்க யாராவது தான் உதவணும். உங்க வலைப்பூ நண்பர்கள் வட்டத்தில் கேட்டுப்பாருங்களேன்.

  17. ஆமாம் சேது..போன்ஸ் கிட்டெ கேட்டேண்.. ஆவங்களும் உதவி பண்ணினாங்க…இன்னும் பண்ணிகிட்டே இருக்காங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *