விளையாட்டு வினையாகலாமா ? ? ?

ன்றைக்கு படித்த ஒரு செய்தி ..ஹ்ரித்திக் ரொஷன் நடித்து வெளிவந்த Dhoom-II படத்தை பார்த்து Rohit [6th std], 13 வயது பைய்யன் வீட்டிலெ காசு திருடி (13,000/-) ஹ்ரித்திக் மாதிரி dress ம் கிட்டதட்ட படத்துல வருகிற மாதிரி Baterry openrated பைக் வாங்கி இருக்கான்.Highway ல வேகமா போகணும்ன்னு முயர்ச்சி செஞ்சுருக்கான்..நல்ல வேளை highway Police பாற்த்து Station க்கு கூட்டிட்டு பொயிட்டாங்க.இவன் சிருபிள்ளைத்தனமா ஏதாவது பண்ணி highway ல ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா பெத்தவங்க எப்படி பதறிப்போவாங்க.
முழு விவரம் இங்கே படிங்க.

நீங்க கேக்கிறது புரியுது..என்ன இப்பொ மட்டும் தான் பசங்க வீட்டுல காசு திருடராங்களான்னு.. கொஞ்சம் பொறுங்க. ஓரு கதை படிச்சாலோ – அல்லது சினிமா பார்த்ததுனாலயோ எந்த பிள்ளையும் மொத்தமா கெட்டுப் பொயிடமாட்டாங்க.அதாவது Rohit உதாரணமாய் வைத்து சொன்னால்.. நேத்து படம் பார்த்துட்டு வந்து – இன்னிக்கி அந்த பய்யன் இப்படி ஒரு காரியத்தை கண்டிப்பா பண்ணியிருக்க மாட்டான்–பண்ணி இருக்கவும் முடியாது.

ஹ்ரித்திக்கின் Motor bike சாஹசங்களும் போலீஸ் கண்ணில் மண் தூவுவதும் அவனை ரொம்ப கவர்ந்ததாக சொல்லி தானும் அவ்வாறே செய்ய முயற்ச்சி செஞ்சுருக்கான்.ஒரு கட்டத்தில் நிழல்-சம்பவங்களுக்கும் நிஜ- சம்பவங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அவன் உணர மறந்துவிட்டான். 6std பய்யன் கிட்டெ எவ்வளவு முன்யொசனையும் தொலைநோக்கு பாற்வையும் எதிர்பார்க்கிறது.

தவறு யார் மேல.. Dhoom-II படம் எடுத்தவங்களா?? படம் பார்த்து.. ” ஹ்ரித்திக்கு எவ்வளவு பேரு-புகழ்-பாராட்டு..எல்லாம் இந்த மாத்திரி சாஹசங்கள் செஞ்சதுநால தானே..நானும் இப்படி செய்தால் என்னையும் எல்லாரும் ஒரு மதிப்போட கவனிப்பாங்க”” ..அப்படி நினைத்த Rohit ஆ
இல்லை வீட்டுல எப்பொ பய்யன் சினிமால வருகிர Hero போல நடை-உடை-பாவனை எல்லாம் பழக ஆரம்பிச்சப்பொ.. அதை கனிவா அணுகி வித்தியாசத்தை உணர்த்தாத பெற்றோர்ரா..இதுல யார் மேல குறை சொல்ல…பாவம் பெத்தவங்க.. அவங்களும் சொல்லாமலா இருப்பாங்க..

Shaktimaan ன்னு ஒரு தொடர் வந்த காலத்துல Shaktimaan போல பறக்க ஆசைப்பட்டு 10th floor லெ இருந்து ஒரு பய்யன் Car க்கு பயன்படுத்தபடும் Plastic coverஐ முதுகில் கட்டிகொண்டு குதித்தது இன்னும் நினைவிருக்கலாம்.

சின்ன பசங்க பண்ணர இந்த மாதிரி குறும்புகள் எல்லாமே பெரும்பாலும் விபரீதத்துல தான் முடியுது. ஆனா அதை உணர்கிற வயசொ அல்லது பக்குவமோ அவங்க கிட்டே இருக்கரதில்லை.இப்படி இருக்க இதை தடுக்க எனக்கு ஒரே ஒரு யொசனை தான் தோணுது.

இது எல்லாமே ஒரு Hero Worship னால நடக்கிற அசம்பாவிதங்க்ள். அதனால இதுக்கு தீர்வும் அதே Hero வால் தான் செய்யமுடியும். இந்த மாதிரி சாஹச படங்கள் செய்யும் Hero க்கள் படம் ஆரம்பிக்கும் முன்னே மற்றும் படம் முடிந்த பிறகும் ஒரு 2 min சின்ன பசங்க கிட்டே இந்த சாஹசங்கள் எல்லம் Done with wires and some camera Trick ன்னு பேசுகிற மாதிரி Vedio Clip வைச்சா, பசங்களும் நம்ம Hero வே சொல்லிட்டாரு இப்படி எல்லாம் பண்ண கூடாதுன்னு , அப்படின்னு ஒழுங்கா நடந்துக்குவாங்க இல்லையா

விளையாட்டு வினையாகாம இருந்தா செரி…

8 Replies to “விளையாட்டு வினையாகலாமா ? ? ?”

  1. நீங்க சொல்வது போலெல்லாம் நடிகர்களும் திரைப்படம் எடுப்பவர்களும் சமூக அக்கறையோடு இருப்பதாக தெரியவில்லை.
    ஏதாவது சட்டம் கொண்டுவந்து
    சிகரெட் குடித்தால் கீழே
    எச்சரிக்கை போடச்செய்தது போல்
    செய்தால் தான் உண்டு.
    ஏனென்றால் அமீர்கான் மற்றும் ஷாருக்கான் போன்றவர்கள் கோலா பானத்திற்கு விளம்பரமாக வந்து
    நான் குடிக்கிறேன்,அதில் என்ன இருக்குன்னு சொன்னாலும் என்கிறார்கள்.

  2. வாங்க லக்ஷ்மி

    நீங்க சொல்வது ரொம்ப சரி.. சிகரெட் குடித்தால் கீழே எச்சரிக்கை போடச்செய்தது போல்.. இந்த மாதிரி Action movies க்கும்…ஒரு 2 நிமிட Vedio clip வைக்கணும்ன்னு சட்டம் தான் கொண்டுவரணும்.அப்படி வந்தால் எத்தனை எத்தனை அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்

  3. சின்ன புள்ளீங்கோன்னா அப்பிடிதான்.. பொம்பள புள்ளயா இருந்தா பார்பி பொம்ம, பவர் பஃப் கேர்ள்ஸூ அப்படின்னும்,
    பசங்களா இருந்தா ஸ்பைடர் மேன்ல ஆரம்பிச்சு சூப்பர் ஸ்டாரு மாதிரி ஸ்டைல் காட்டற வெரிக்கும்..

    பெத்தவங்கதான் எது இன்னான்றத புள்ளைங்களுக்கு புரிய வெக்கோணும்.. அவங்க பொறுப்பு இல்லாம இருந்தாதான் இப்பிடி ஆவும்.

  4. வாங்க பிளேடு.

    ///////////////////////////////////
    பெத்தவங்கதான் எது இன்னான்றத புள்ளைங்களுக்கு புரிய வெக்கோணும்.. அவங்க பொறுப்பு இல்லாம இருந்தாதான் இப்பிடி ஆவும்.
    ////////////////////////////////

    நீங்க சொல்லைகிறது ரொம்ப செரி…பெத்தவங்க தான் புரியவைக்கணும்.. ஆனா.. இது வாலிப-வயசு.. பெத்தவங்களை எப்படி எல்லாம் எதிர்த்து பேசலாம் .. என்ன எல்லாம் சொன்னா பெத்தவங்க திட்டமாட்டாங்க.. அப்படி எல்லாம் யொசிக்கிர பருவம்.இப்பொ உங்க வீட்டுல கூட… உங்க நைனா சொன்னா எல்லாவிஷயமும் நீங்க கேட்டு ந்டன்துகிட்டீங்களா…?..ஆனா அதே விஷயத்தை உங்க Favourite uncle-aunty அல்லது வேறுயாரவது சொல்லி…டக்ன்னு சமத்து புள்ளையாட்டம் கேக்கலை..? எல்லாம் ஒரு யூகம் தான்..பெத்தவங்க ஆயிரம் தடவை சொல்லி கேக்காதவங்க.. சூப்பர்ச்டார் ஒரு தடவை சொன்னா கண்டிப்பா கேப்பாங்க என்பது என்னொட கணிப்பு. நமக்கு அசம்பாவிதங்கள் நடக்காம தவிர்த்தா போதுமே.. யார் சொன்னா என்ன

  5. I think its maturity and they need to grow up. Media, movies and all other things are just for fun. You cannot take it personal.
    If they do it, it just out of mere fascination or lack of knowledge.

  6. Yes priya..
    its defenitly the lack of maturity.
    But the maturity to understand that reel is not for real only comes only when things get out of hand.How sad:-(

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *