கூட்டணியால் வளந்த கலை… நிழர்ப்படக் கலை இன்று உலக நிழற்படக்கலை தினம் ( World Photography Day)

ம்ம புகைப்படகலை நடுவர்கள் ஆகஸ்ட் மாத போட்டிக்கான முடிவை அறிவிச்சதை எல்லாரும் பார்த்திருபீங்க.. இதை விட ஒரு நல்ல தருணம் இந்த முடிவை அறிவிக்க அவங்க தேற்ந்தெடுத்திருக்க முடியாது.. ஏன்னா இது… புகைப்பட வாாாாாரம்….ஏன்னா…. இன்னைக்கி தான் உலக நிழற்பட நாள் (World Photography day — Aug 19)…

இதுக்கு காரணம் புகைப்பட கலையை நடைமுறை வாழ்க்கையின் அம்சமாக்கிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Louis – Jacques-Mande Dagurre ஆவார்.

Degurre ஒரு ஓவியர்… அவர் Opera க்கெல்லாம் பின்னணி-ஓவியங்கள் வரைபவர். படங்களின் நடுவே ஒளி ஊடுருவிச் செல்வதை பார்த்து ரொம்பவும் பிரமித்து போனார்.. அந்த நொடியில் படங்கள் ரொம்பவும் அழகாகவும் வித்தாயசமாகவும் காணப்பட்டதை உணர்ந்தார். அந்த க்ஷணத்தை எப்படியாவது பத்திரப்ப்டுத்த வேண்டும்.. அதுக்கு என்ன வழின்னு தேட ஆரம்பித்தார்…

கிட்டதட்ட இதே காலகட்டத்தில் தான் ( 1825-1830) Joseph Nicéphore Niépce ம் (புகைப்படகலை… ன்னு இப்பொ நாம சொல்லறோமே. …அதை குறித்து ) ரொம்ப தீவிரமா ஆராச்சி செய்து வந்தார்… இந்த கலைக்கு அவர் குடுத்த பெயர் heliography … அதாவது “sun writing”… Degurre & Niépce .. கூட்டணி (1829) தான் புகைப்பட கலையின் ஆத்திச்சூடியையே நமக்கு தந்தது…

இது ஒரு வித்தியாசமான கூட்டணி… Degurre .. ஒரு ஓவியர்… Niépce புத்தகங்கள் – செய்த்தித்தாள் அச்சிடுபவர்… ஒருத்தருக்கு நிறம்-ஒளி-நிழல் போன்ற விஷயத்தில் பாண்டித்தியமென்றால்… இன்னொருவருக்கு கெமிகல்-கலவை-தன்மை-அச்சிடும் முறை ( படத்தை பிரிண்ட் பண்ணணுமில்லே!!!)… இதிலெல்லாம் உஸ்தாத்… ரெண்டு பேருக்கும் ஒரே ஆரவம்… திருப்புமுனை சாதனைகள் எதிர்பார்க்க கூடியது தானே….

ஆரம்ப காலத்திலே அவங்களுக்கும் ரொம்பவும் சவாலா அமைஞ்ச விஷயம்… exposure time … Niépce .. அவருடைய முதல் படத்துக்கு 8 மணி நேரம் exposure time குடுத்தார்ன்னா… நம்ப முடியுதா… ? ? ?இதனாலே… அவரால் கட்டிடம்-மரம் தான் படம் புடிக்க முடிஞ்சுது.. மனுஷங்களை படம்பிடிக்க முடியலை…. 8 மணி நேரம் எவன் போஸ் குடுப்பான்…

ஒரு கடைவீதியை படம் எடுத்தார்… அங்கே இருக்கும் கட்டிடம் – மின்கம்பம் இதெல்லலாம படத்திலே இருந்தது… மனுஷங்க இல்லை.முதல் permanent photograph ஐ எடுத்தவரும் இவர் தான்..பக்கதிலே இருப்பது 1826 ல் அவர் எடுத்த ஒரு புகைப்படம் ்

Degurre & Niépce .. கூட்டணக்கு பின் Degurre முதன்முதலில் ஒரு மனிதனை வெற்றிகரமாக படமமெடுத்தார். இதுக்கு அவர் எடுத்துகுட்ட exposure time 30 நிமிஷம் ன்னு சொல்லறாங்க…படத்தை க்ளிக்கி பாருங்க… ஒரு உருவம் தெளிவா தெரியும்.. ரொம்ப உயரத்திலிருந்து எடுத்த மாதிரி இருக்கு படம்

இவர் தான் Daguerreotype. ன்னு படமெடுக்கும்்மும் முறையை தந்தவர்…. அந்த காலத்திலே இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது… இன்னிக்கும் photo printing & developing பண்ணரவங்க ( விஷ
யம் தெரிஞ்சவங்க) கிட்டே கேட்டு பாருங்க… பக்கம்-பக்கமா சொல்லுவாங்க

ரெண்டு பேரும்.. உன் – டெக்னிக் பெரிசா… இல்லை என் – லெக்னிக் பெரிசான்னெல்லாம் சண்டைபோடாமல்… அவங்க – அவங்க research findings ஐ பகிந்துகிட்டதால் தான் இன்னிக்கி நம்மாலெயும் ஏதோ மத்தவங்களுக்கு காட்டுகிரமாதிரி – போட்டிகு அனுப்புர மாதிரி படங்கள் எல்லலாம எடுக்க முடியுது

இது வெறும் ஆரம்ப காலம் தான்.. அப்புறம் படிப்படியா… pin-hole camera லிருந்து முன்னேறி… Film Camera... அப்புறம் இன்னிக்கி digital camera ன்னு பலபேர் புகைப்பட துறையிலே ஆர்வமா இருக்காங்க… சிலபேருக்கு இது வெறும் பொழுதுபோக்கு…( சில பேருக்கு உண்மையிலேயே… இந்த கலை மேல் ஆர்வம்… ஆனால் பல பேருக்கு…நானும் தான்… பிலிம் தான் இல்லையே…. பிரிண்ட் போடுற காசு மிச்சம்..ங்கிர வசதி.. அதனால ஆரவம்)… இன்னும் சில பேருக்கு புகைப்பட கலை & கேமரா தான் அன்னதாதா…. இவங்களை நாம என்னைக்குமே கிண்டல் பண்ண கூடாது…

ஸோ… எல்லா புகைப்பட ஆர்வலர்களுக்கும் இந்த நாள் நினைவில் வச்சிருக்கவேண்டியதில்லையா.. அத்னால் தான் இந்த பதிவு.. எல்லாருக்கும் HAPPY WORLD PHOTOGRAPHY DAY.. க்ளிக்-க்ளிக்-க்ளிக்…:D

9 Replies to “கூட்டணியால் வளந்த கலை… நிழர்ப்படக் கலை இன்று உலக நிழற்படக்கலை தினம் ( World Photography Day)”

  1. வாழ்த்துக்கள் தீபா நல்லா விவராமா எழுதி இருக்கீங்க சுவாரசியமா இருந்தது..8 மணி நேரம் உக்கார்ந்து இருக்கறது கஷ்டம் தான்..ந்ல்ல கதையா இருக்கே..அப்பறமும் 30 நிமிஷமுன் தான்..

    இப்பநாம எத்தனை ஈஸியா அப்படியே ஓடிக்கிட்டிருக்கற வண்டியிலிருந்து எல்லாம் எடுக்கறோம்..எத்தனை யோசிச்சு அவங்க கண்டுபிடிச்சிருக்காங்க..

  2. ///ந்ல்ல கதையா இருக்கே////
    கதையா…யக்கோவ்… இது நிஜம்.. சர்டிபிகேட் எல்லாமும் இருக்கு… wikipedia லின்கை பாருங்க

  3. //எல்லாருக்கும் HAPPY WORLD PHOTOGRAPHY DAY.. க்ளிக்-க்ளிக்-க்ளிக்… //

    உங்களுக்கும் என் ‘ஃபோடாக்ரஃபி டேய்’ வாழ்த்துக்கள்!

    சரி, சரி. க்ளிக்-க்ளிக்-க்ளிக்…ன்னு நீங்கள் க்ளிக்கிய படம் எங்கேய்?

  4. Prince
    நன்றி
    //க்ளிக்கிய படம் எங்கேய்?///
    அதோ.. அங்கே ஈஈஈ ன்னு பல்லைகாட்டிகிட்டு இருக்கே… அதே தான்

  5. நல்லா இருக்கு…பின்னூட்டப் பெட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *