எந்திரன் – அப்படி இப்படின்னு நாங்களும் பார்த்துட்டோம்லே

ஆக, அப்படி இப்படின்னு நாங்களும் எந்திரன் பார்த்துட்டோம்லே !!
வீட்டிலே சொன்னாங்க, எதுக்கும் இவ்வளவு நாளாச்சு, இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணினா, அடுத்த தீபாவளிக்கு சண்டிவியிலேயே பார்க்கலாம்ன்னு,.. ( குர்ர்ர்.. என்னா தைரியம் இப்படி சொல்ல.. கடல்தாண்டி இருக்கும்போது வந்த தசாவதாரத்தையே நா(ன்)ங்க விட்டுவைக்கலை, உள்ளுரிலேயே இருந்து, சூப்பர்ஸ்டார் படத்தை டிவியிலே பார்க்கிரதா ???.. நோ நோ.. நாட் பாசிபிள்.

கிட்டதட்ட முக்காலவாசி ஜனங்களும் எந்திரன் பார்திருப்பாங்க.. சோ, இது தான் சரியான டைம், கூட்ட நெரிசல் இல்லாம, பிளாக்லே டிக்கெட்டுக்கு போட்டி போடாம, தியேட்டர்லே காச்-மூச்ன்னு ரகளைபண்ணர கும்பலை தவிர்த்து, ஒழுங்கா வசனமெல்லாம் கேக்கலாம்ன்னு தீபாவளியன்னிக்கு எந்திரனை பார்க்க திட்டம்போட்டு 18 பேர் போனோம் (,... 18ம் ஒரே குடும்பம்ங்க... பிளாப்பான படத்தைக்கூக நாங்க எல்லாரும் சேர்ந்து பார்க்கப்போனாலே படம் ஹிட்டாயிடும்... அவ்வளவு பெரீரீரீரீய extended family.. ஹ்ம்ம்.... அதெல்லாம் எதுக்கு...)

எதிர்பார்த்தடியே டிக்கெட் கவுண்டர்லே ஈ-காக்கா இல்லை, டிக்கட் கெடச்சு படம் பார்க்க செட்டிலாயிட்டோம். படக்கதை எல்லாம் சொல்லமாட்டேன்.. ஆனா என்னோட கண்ணோடத்திலே மொத்த படத்தை 4 பங்கா பிரிச்சு பார்த்தா தான், சரியான justification of efforts ன்னு தோணுது. ஸோ.. இது என்னொட perspective.

  1. கற்பனைத்திறன்
  2. நம்பகத்தன்மை
  3. தொழில்நுட்பம்
  4. உழைப்பு
  5. கதை ( இதுக்கு ஏன் கடைசீ இடம்ன்னு அப்புறம் சொல்லறேன்)

கற்பனைத்திறன்:

நாம ஒவ்வொருத்தருக்கும் தனித்துவமான கற்பனாசக்தி இருக்கு.... முக்கால்வாசி நேரத்திலே இது white lies ன் உருவத்திலே எட்டிப்பார்க்கும்.... சரியான சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைஞ்சுட்டா..... இந்த கற்பனாசக்தியால ஒருவரை மிக நேற்தியான படைப்பாளியாக வெளிக்காட்டவும் முடியும்.

ஒருவிஷயத்தை (நமக்கு பிடிசாலும் பிடிக்கலைன்னாலும்) ஒத்துக்கிட்டே ஆகணும். கற்பனை என்பது உண்டு... அதில் சரி-தவறு இருக்க முடியாது. There is no right or wrong with imagination.. except that, it exists. எப்போ நம்மாலே இன்னொருத்தரின் "கற்பனை"க்கு விளக்கம் சொல்லமுடியுதோ... அப்போ நாம அதை ஏற்றுக்கொள்கிறொம் ன்னு சொல்லாமல் சொல்லறோம், மற்ற நேரத்திலே ( நமக்கு விளக்கம் குடுக்க முடியாம திணரும்போது) "இதெல்லாம் டூமச்" ன்னு சொல்லி நழுவறது/ கிண்டலடிக்கிறது / தரக்குறைவா பேசறது... ன்னு பல ரியாக்ஷண்

எந்திரனின் "சிட்டி" யும் இந்த வகையைதான் சேரும். கதையை விலக்கி, 'எந்திரன்'-சிட்டியின் Conception, Inception and Perception (இதுக்கு சரியான தமிழ் சொல் எனக்கு தெரியலை.. தெரிஞ்சவங்க சொல்லித்தாங்க) ஐ மட்டும் வச்சு பார்த்தா... இந்த கற்பனை எனக்கு ஒத்துக்கொள்ளக்கூடியதாகவே இருக்கு.

நம்பகத்தன்மை:

சிட்டி செய்யும் எல்லா அட்டஹாசமும் believable within the purview of science fiction ங்கிரது என்னொட அபிப்பராயம். ஒவ்வொரு formation concept ஐயும் ரசிச்சேன்...பென்சில் / ட்ரில்லிங் மெஷின் / பாம்பு / பெரீரீரீரீய மனிதன் மாதிரி ... Dining ன்னு போட்ட செக்ஷண்லே எல்லா சிட்டியும் தன்னதானே சார்ஜ் பண்ணிக்கிறது.... கரெண்ட் கட் சமயத்திலே கார் பாட்டிரியிலே சிட்டி(கள்) சார்ஜ் பண்ணிக்கிறது..

அதே நேரத்திலே பிட்ஜ்லேயிருந்து காரோட குதிச்சு, கண்டைனர் மேலே ஐஸ்-மேக்கப் கலையாம 'பயப்படறது".. மாதிரி சில பல இடங்கள் ஒத்துக்க முடியாது தான்... ஆனாலும்.. "தமிழ் சினிமாவுல இதெல்லாம் சகஜமப்பா" ன்னு கவுண்டர் பாணியிலே சொல்லர ரகத்திலே இதையெல்லாம் சேத்துக்கலாம். இதுக்கூட இல்லைன்ன... அப்புறம் தமிழ்சினிமான்னு எப்படி சொல்லறது.... என்னக்கறீங்க?

தொழில்நுட்பம்:

எந்திரனை – 'மார்டன் விட்டலாச்சார்யா' படம்ன்னு நிறையபேர் கேலியா சொல்லறாங்க, but I cant seem to get the joke here. விட்டலாச்சாரியா எடுத்த (பழைய) ஜகன்மோகினியை இன்னமும் சீன்-பை-சீன் விடாம ஆச்சர்யத்தோட பார்ப்பேன் (எனக்கு தெரியும் நீங்களும் பார்ப்பீங்கன்னு). இருக்கிரதை வச்சுத்தானே சார் காலம் தள்ள முடியும். விட்டலாச்சர்யா அவர் காலத்திலே இருந்த்தை ( && பட்ஜட்டுக்கு கட்டுபட்டு) ஜகன்மோகினி எடுத்தார்.. ஷன்கர்... இன்றைய தொழில்நுட்பத்தை வச்சு எந்திரன் எடுத்திருக்கார்... இதிலே... என்ங்க தப்பு.. என்ன கொலைக்குத்தமா பண்ணிட்டார்?

ஷன்கராலே தன்னோட கற்பனையை ( சிட்டி கதாபாத்திரம்) சரியான முறையிலே சன் பிக்ச்சர்ஸுக்கும், ரஜனிசாருக்கிடையும் பகிர்ந்துக்கிட்டார். They were able to share his vision ( unlike many of us who seems to disagree with everything he has to say/do). காசு போட்டா மட்டும் ஆச்சா... அது சரியான முறையிலே பயன்படுத்தப்படுதாங்கிர கவலை அவங்களுக்கும் இருக்காதா?? அப்படி இருக்க, இந்த மாதிரி தொழில்நுபத்திலே சிறந்த கலைஞ்ர்களை தேற்வு செய்து, intimidate ஆகாம, தேவை என்னதுங்கிரதை எடுத்து சொல்லி, நமக்கெல்லாம் ஒரு Complete Product தந்திருக்கார். அதுக்கு ஷங்கரை பாராட்டியே ஆகணும்.

உழைப்பு:

There is no substitute for hard work க்கு எந்திரனும் விதிவிலக்கல்ல. சண் டிவிலே எந்திரன் உருவான கதை காமிச்சாங்க.. பிரமிச்சு போயிட்டேன்...( சமயல் நிகழ்ச்சியெல்லாம் பார்க்கிர பழக்கம் எனக்கில்லை.. இந்த Gadget Guru / Boys and their toys/ mythbusters மாதிரி இருந்தா.. கண்கொட்டாம பார்ப்பேன்.. என்ன பண்ண.. ரெண்டு நட்டு லூஸு ன்னு வீட்டிலே சொல்லறாங்கப்பா ).. எத்தனை துறை... என்னென்ன திறமை.. இவங்க எல்லாரையும் ஒரே இலக்கை நோக்கி ஒரு சேர செய்படச்செய்யறது என்ன சாமான்ய விஷயமா... ( வீட்டு வேலை செய்யறவங்க கிட்டே 2 எக்ஸ்ட்ரா வேலை சொல்லி, வேலை வாங்கினவங்களுக்கு நான் சொல்லறது புரியும்.. என்ன சரிதானே)

கதை :

சொல்லாம வழி இல்லை... கதை ரொம்ப சுமார்.

எந்திர மனிதன் சிட்டியின் படைப்பை சொல்லியிருக்கிர முதல் பாதி அருமை. ஐ மீன்.... விஞ்ஞானி ( ஸ்பெல்லிங் சரியா ??) க்கு தோன்றும் ஐடியாஸ், அதை செய்ல்படுத்தும் விதம் எல்லாம் நல்லா இருக்கு. முக்கியமா.. சிட்டியை ஐஸ் "boyfriend இல்லை, Toyfriend " ன்னு அறிமுகப்படுத்தறதையும், மாரியம்மன் கோயில் சீன்லே "ஆத்தா மாதிரி" போஸ் குடுக்கரதையும் நான் ரொமப் ரசிச்சேன். அதாவது தனக்கும் பீலிங்க்ஸ் இருக்குங்கிரதை சிட்டி உணரும் இடம் வரை என்னகு பிடிச்சிருந்துது.

ஆனா, இண்டர்வலுக்கப்புறம் "உன் கேர்ள்பிரெண்ட் என்னக்கு வேணும்" ன்னு வில்லேஜ் வில்லன் மாதிரி சிட்டி ஹை-டெக்கா அடம் பிடிக்கரதை தான் ஜீரணிக்க முடியலை. "பீலிங்ஸ்"ன்னு வந்துட்டாலே procreation தான்னு சொல்லறா மாதிரி இருந்த்து... ஹ்ம்ம்.. எந்திர-ம்னிதன் சிட்டிக்கு எனென்ன சொய்ய முடியும்ங்கிரதை யோசிச்சு யோசிச்சே ஷங்கர் களைச்சுப்போயிட்டதா படுது. அதனால தானோ என்னமோ.. சிட்டியின் "திறமை"யை காட்ட Easy way out எடுத்துட்டரோன்னு எனக்குள்ளே ஒரு கேள்வி.... ????

Comments

  1. Reply

  2. Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*