வீட்டிலிருந்தே வேலையா?.. சம்பாத்தியம் சாத்தியமா ?… நீங்களே சொல்லுங்க !!

நவராத்திரி கொலு / சுண்டல், தீபாவளின்னு வீட்டுக்கு வெள்ளையடிக்கிற விஷயம்னு நினைச்சிட்டீங்களா… இல்லவே இல்லை, இது விஷயமே வேறே!!! கடந்த சில மாத(ங்கள்) வரை நான் “தொடுவானம் நம் உள்ளத்தில்” ங்கிர முகவரியிலே எழுதிட்டிருந்தேன். அப்போ இணையத்தில் வேலைவாய்பு – இணையதள சஹாயி (Virtual Assistant) ஐ பத்தி தொடர்பதிவு போட்டிருந்தேன்.
தொடர் பதிவின் சாராம்சம்

  1. Virtual Assistant ( பாகம் 1)–அறிமுகம்
  2. Virtual Assistant (பாகம் 2) – VA என்றால் யார் ??
  3. Virtual Assistant ( பாகம் 3) – துறை அல்ல திறமை
  4. Virtual Assistant (பாகம் 4.1) – VA Profile
  5. Virtual Assistant (பாகம் 4.2) – VA Profile
  6. Virtual Assistant (பாகம் 5) – VA வலைத்தளங்கள்
  7. Virtual Assistant (பாகம் 6 ) – பைசா , காசு, டப்பு

இந்த பதிவிலே எழுதியிருக்கிறதெல்லாம் எவ்வளவு தூரத்துக்கு உண்மை? இப்படியும் வேலை செய்ய முடியுமா? இணையத்திலே காசு சம்பாத்திக்கறேன்னு காலை வச்சவனெல்லாம் , காசை தொலச்சிட்டு வந்த கதை தான் ஏராளம், இதிலே இப்படியும் சாத்தியமா?.. அப்படீன்னு மனசுக்குள்ளேயே சொல்லி, பதிவை படிச்சவங்க தான் ஏராளம். … ஹ்ம்ம்… அவங்களை சொல்லியும் குத்தமில்லை. … காலம் அப்படி இருக்கு.
அப்படீன்னா.. இப்போ என்ன புதுசா சொல்லவறீங்க தீபா? .. ன்னு தானே கேக்கறீங்க. “கண்டேன் சீதையை” ன்னு ஹனுமார் ரத்தினச்சுருக்கமா சொன்ன மாதிரி சொல்லணும்ன்னா…. “சம்பாத்தியம் சாத்தியம்” ன்னு தான் சொல்லணும். (..”ஆமா… விளம்பரம் பண்ண்ர கம்பனிக்கரனும் இதையே தான் சொல்லறான்…” . ).. உங்க மைண்ட்-வாய்ஸ்…என் காதுலேயும் விழுதுங்கோ!!!
நான் இந்த தொட்ர்பதிவுகளை எழுதினது ஜூன் 2008 லே. அப்போ பிளாகர் இனாமா குடுத்த முகவரியிலே எழுதி வந்தேன். இன்னிக்கு தேதி என்ன.. அக்டோபர் 2010. தள முகவரியை பாருங்க.. எனக்கே எனக்கு சொந்தமான முகவரி. ஆது மட்டுமா.. தள வடிவமைப்பு, தள நிர்வாகம் எல்லாமே இப்போ என்னுடையது. இதுக்கெல்லாம் கணிசமான ஒரு தொகை செலவாச்சு (.. எவ்வளவுன்னு சொல்லமாட்டேன்… ;-)…) ஆனா எதையுமே கைக்காசு போட்டு செய்யலைன்னு மட்டும் சொல்லுவேன். இது எப்படி சாத்தியமாச்சு??… உங்ககிட்டே பகிர்ந்துகிட்ட அதே Virtual Assistance முறையை நானும் கடைபிடிச்சேன்.
பட்டப்படிப்பு முடிக்கிற வரை எனக்கு வீட்டு ஜன்னலுக்கும், கம்ப்யூட்டர் ஜன்னலுக்கும் வித்தியாசம் தெரியாது. APTECH லே 2 வருஷம் டிப்ளமா பண்ணினேன். அதுக்கப்புறம் கூகிள் தான் எனக்கு வாத்தியார். என்னாலேயே Virtual Assistance ( இப்போ நான் Freelace Consultant ங்கோ ) மூலமா இந்த பதிவை சாத்தியமாக்க முடியும்ன்னா… கண்டிப்பா… உங்க ஒவ்வொருத்தராலையும் முடியும்…எனக்கு 3 வருஷம் ஆச்சு, உங்களுக்கு இன்னமும் சீக்கிரமாக்கூட நடக்கல்லாம்..
நான் தொடர்ந்து பதிவெழுதரதில்லைன்னாலும்… பதிவுலகில் என்ன நடக்குதுன்னு ஓரளவுக்கு பாத்துட்டுதான் இருக்கேன். ஒவ்வொருத்தரும் என்ன அருமையா எழுத்றீங்க… எவ்வளவு வகை வகையா / கோற்வையா கருத்தை சொல்லறீங்க…. இதெல்லாம்.. நாங்க self satisfaction க்கு பண்ணறோம். பணம் சம்பாதிக்கணும்ன்னு குறியெல்லாம் இல்லை…. ன்னு பீலா விடாதீங்க…. உங்களுக்கு பிடிச்சதையே செய்ய – நீங்க நிர்ணயிக்கிற நேரத்திலே செய்ய காசு குடுக்கறேன்னு சொன்னா.. வேண்டாம்ன்னு சொல்லுவீங்களா… … ( எவன் காசு குடுக்கறான்..ன்னு என்னை கேக்காதீங்க… அந்த தர்மப்பிரபுவை நீங்க தான் சிரமப்பட்டு கண்டுபிடிக்கணும்)
Find the Work you love,
You never have to work a day in your life.

எறும்பூர கல்லும் தேயும்.. மனம் தளராமா தொடர்ந்து குறைஞ்சபட்சம் 1 வருஷம் முயற்சி பண்ணி பாருங்க. கண்டிப்பா நீங்களும் இதை மாதிரி பதிவெழுதுவீங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆல் தி பெஸ்ட்
டிஸ்கி :
என்னோட எல்லா பிளாகையும் இந்த முகவரியோட இணைச்சுட்டேன். வாரம் ஒரு பதிவாவது எழுதணும்னு ஆசை ( hosting க்கு காசு குடுக்கறேனே… அதை வசூல் பண்ண வேண்டாமா..)

13 Replies to “வீட்டிலிருந்தே வேலையா?.. சம்பாத்தியம் சாத்தியமா ?… நீங்களே சொல்லுங்க !!”

  1. சூப்பரு…..வாழ்த்துக்கள் 😉
    இப்பதான் தேட ஆரம்பிச்சிருக்கேன். விரைவில் கிடைச்சிடுமுன்னு நினைக்கிறேன் எனக்கும் ஒரு இடம் ;))
    \\\வாரம் ஒரு பதிவாவது எழுதணும்னு ஆசை ( hosting க்கு காசு குடுக்கறேனே… அதை வசூல் பண்ண வேண்டாமா..)\\\
    முதலாளிம்மாகிட்டிங்க ;)))

  2. மீண்டும் ஒரு முறை சாகவாசமாக படிச்சி தெரிஞ்சுக்கனும்.

  3. வணக்கம் கோபிநாத்.
    பாராட்டுக்கு நன்றி
    புது விட்டுக்கு வந்திருக்கீங்க, டபுள் டாங்க்ஸ்
    //இப்பதான் தேட ஆரம்பிச்சிருக்கேன். விரைவில் கிடைச்சிடுமுன்னு நினைக்கிறேன் //
    முதல் மாதம் கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.
    அதுக்கப்புறம் ” மார்கெட் நிலவரம் ” ஓரளவுக்கு நமக்கே புரிய ஆரம்பிச்சிடும்.
    Then, its just a matter of time
    All the best
    /முதலாளிம்மாகிட்டிங்க//
    ஹீ ஹீ

  4. வணக்கம் குமார்,
    ஒண்ணும அவசரம் இல்லே, நிதானமா படிங்க

  5. அருமையான தொடர் போலயே! வாழ்த்துகள்ங்க. தொடரை தெரிந்தவர்களுக்கெல்லாம் அறிமுகம் செய்கிறேன்.
    நன்றிங்க 🙂

  6. வாழ்த்துக்கள் தீபா!
    மற்றவரும் தன்னம்பிக்கை பெறும் விதமாக பெற்ற வெற்றியினை பகிர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
    தங்கள் தளத்தின் வடிவமைப்பும் பிரமாதமாக உள்ளது.

  7. வாங்க ஆதவன்.
    நன்றி… மத்தவங்களுக்கும் சொல்லறேன்னு சொந்துக்கு டபுள் தாங்க்ஸ்.
    என்னாலானதை செய்யறேன்.

  8. நன்றி ராமலக்ஷ்மி.
    ஐடியா தான் என்னுது.. இதை பண்ணவங்க.. என்னை மாதிரியே இன்னொரு Virtual Assistant.
    🙂

  9. முழுமையாக உங்கள் சுயகுறிப்புகளை பார்த்த போது நீங்களும் எழுதிக் கொண்டிருப்பது தெரிந்தது. நல்வாழ்த்துகள்.

  10. வாங்க @ஜோதி @இர்ஷாத்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *