தமிழ் எனது தாய் மொழி என்பதில் எந்த சன்தேகமும் வெண்டாம்
ஆனல் எனது பதிவை படித்து..நீஙள் அப்படி சன்தெகபட்டால்..உங்கள் தவறு இல்லை.எனது 4-ஆம் வகுப்பில் தான் நான் தமிழ் கற்றுக்கொண்டென்.
எங்கள் முன்னொர்கள் கெரள-நாட்டுக்கு குடியேரிவிட்ட காரணதால் பள்ளியில் தமிழ் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கவில்லை.ஆனால் வீட்டில் எப்பொழுதாவது தமிழ் பத்த்ரிக்கைகள் (விகடன் , கல்கி , குமுதம்) நூலகத்திலிருந்து தருவிப்பார்கள். அப்படி இருக்கும் காலத்தில் எனது பாட்டி அந்த பத்த்ரிக்கைகளில் வரும் சிருகதைகள் விடுமுறைகளில் மட்டும் படித்து காட்டுவார்கள்.
எனது 4-ஆம் வகுப்பில் தமிழ்நாடு வந்தோம். அதுவரை எனக்கு ஆங்கிலம் (முதல்-மொழி) , ஹிந்தி (இரண்டாம்-மொழி), மலயாளம் (மூன்றாம்-மொழி) மட்டுமே தெரியும்.ஆப்பொழுது பள்ளியில் தமிழ் படிக்கவெண்டிய கட்டாயம், ஏன்-என்றால் மூன்றாம் மொழியின் தேற்வு 6-ஆம் வகுப்பில் தான்அனுமதிக்கபட்டது. ஆக நான் தமிழில் “”அ ஆ இ ஈ .. “” கற்றுகொண்டதே 4-ஆம் வகுப்பில் தான்.இரண்டு வருடம் தான் தமிழ் பயின்றேன்..ஏனென்றால் வீட்டில் உள்ளவர்க்களுக்கு தமிழ்-படிக்க மட்டுமே தெரியும். ..இலக்கணம்.. வீட்டுப்பாடம் .. எல்லம் சொல்லிதர சிரமமாக இருந்தது. 6-ஆம் வகுப்பிலிருந்து தமிழில் இருந்து சம்ச்க்ருதற்க்கு மாற்றிகொண்டேன். எனது பாட்டி சம்ச்க்ருததில் பாண்டித்யம் உள்ளவர்.
பிறகு எனது தந்தையின் வேலை காரணமாக வட-இந்தியா சென்றுவிட்டோம்.
ஆனால்…2 வருட பயிர்ச்சியின் காரணத்தால் தமிழ் பத்த்ரிக்கைகள் படிக்கலானேன்.
நூலகத்திலிருந்து எடுத்து வரும் பத்ரிக்கைகளில் நகைச்சுவை-துணுக்கு …சிருகதை… தொடர்கதை… என படி-படியாக படித்துவந்தேன்.
அந்த தருவாயில் தான் என்னை திரு.கல்கியின் பொன்னியின் செல்வன் வெகுவாக கவர்ந்தது
நான் தமிழில் படித்த முதல் NOVEL வும் அதுவே.