"தமிழன்" என்று ஒரு சொல்

பொதுவாக “தமிழ்” என்று சொன்னால் நமக்கு “மொழி” என்று தான் தோன்றும்..தவறில்லை.
நானும் அப்படித் தான் நினைத்தேன். அண்மயில் தான் அறிந்தேன்-உணர்ந்தேன்..”தமிழ்” மொழி மட்டுமல்லாது “உணற்வு”ம் கூட. இதை எனக்கு உணற்த்திய திரு.இராம்தாஸ் க்கு நன்றி. தோழரே..தங்களது எண்ண-பதிவு என்னை சற்று ஸ்தம்பித்து பிறகு சிந்திக்கவும். வைத்தது.

பல ஆயிரங்காலங்காலங்களாக நாமனைவரும் பேசி எழுதி படித்து உணர்ண்து களிக்கும் தமிழெனும் அமுதை தனதென்று அபகரித்து நம்போன்ற இனபலரை ஆரியரென்றும் பார்ப்பனரென்றும் இகழ்ன்து .. .. ..



வருந்தாதீர் தொழரே..நம்மைப் போல் அந்தணர்கள் பலபேர் உள்ளார்கள். தமிழ்-பெற்றோறுக்கு பிறந்து, தமிழை தாய்மொழியாககொண்டு ஆனால் உலகத்தாரால் மட்டுமல்லாது நம்-இனத்தார் (சக-தமிழர்கள்) மற்றும் நம்-நாட்டாராலும் “தமிழன்” என்று அங்கீகரிக்கப்படாதவர்கள் நாம் (இது எனது கருத்து மட்டுமே).காரணத்தோடு தான் சொல்கிறேன் பொறுமையுடன் படியுங்கள்.

நாம் பொழப்பை தேடி அசலூர் (தமிழ்நாட்டை விட்டு வெளியே) சென்றால் , நம்மை மதராஸி என்று தான் சொல்வார்கள். இது தென்-இந்திய மாவட்டங்களை சேர்ந்த அனைவர்க்கும் பொருந்தும்.இது அவர்களது அறியாமையா அல்லது அறிய விருப்பமில்லயின்மையா என்று ஆராய்ச்சி செய்யும் மனம் இப்பொது இல்லை. வெளிநாட்டில் இப்படி இருக்க தமிழ்நாட்டில் அந்தணர்கள் / பிராமணர்களை “பார்ப்பரன் -பாப்பாத்தி” என்று (ஏளனமாக) பொதுவாக “”பலர்”” சொல்வார்கள். இம்மாதிரி கசப்பான அனுபவங்கள் எனக்கும் பல உண்டு தொழரே..தனிமயில் வருந்தாதீர் அது உடல்நலத்திற்க்கும் மனநலத்திற்க்கும் நல்லதல்ல.

இத்தகைய அனுபவங்களும் , நான் படித்து அறிந்த விஶயங்களும் எனக்கு ஒரே ஒரு எண்ணத்தை தான் வலியுறித்தின. தன்னை-தான் தமிழன் என்று பரைசாற்றுவோருக்கு மறதி கொஞம் இருக்கு. நாமும் அவற்களை போல் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் என்பதை மறந்து விதுகிரார்கள்..அய்யோ பாவம். “”””திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு “””” என்று தமிழிலே சொல்லியிருப்பதை அறிந்தும்-உணர்ந்தும் வெளி நாட்டில் வியற்வை சிந்தி சம்பாதித பணத்தை கொண்டு தமிழ்நாட்டில் வீடு-மனை வைத்து இன்றும் பலர் வாழ்கிரார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். வற்ணாச்ரம – தர்மங்களுடன் உடன்பாடு இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து…பள்ளி – பல்களைக்க்ழகம் – அலுவலகங்களில் முற்ப்படுத்தபட்ட இனத்தின் காரணமாக அல்ல திறமயின் காரணமாக தான் உயற்ந்து நிற்கிரோம் என்பதை மறந்து விடுகிரார்கள்.

அங்கீகாரம் என்பது எலோருக்கும் ஊக்கத்தை கொடுக்கும். சற்றே நிதானித்து யொசியுங்கள்.. அலுவலகத்தில் நீங்கள் செய்யும் பணிக்கு அங்கீகாரம் இல்லை என்றால் அங்கே மன-அமைதியுடன் பணிகளை தொடர முடியுமா? கல்லூரிக்கு பொய் வரும் பிள்ளைகளின் ஆர்வத்தயும் உழைப்பயும் நிராகரித்தால் (அங்கீகரிக்க மறந்தால்-மறுத்தால்)அவற்கள் மனம் எவ்வளவு சஞ்லப்படும்.சிருவயதில் நீங்கள் தீட்டிய ஒரு அழகான ஓவியத்தை வெறும் ஒரு பாற்வை மட்டுமே பார்த்து.. உங்களை விட மிக சிறியவர்களான தம்பி-தங்கை யின் கிறுக்கல்களை மிகையாக புகழ்ந்த போது கண்டிப்பக இன்றும் நினைவிற்க்கு வரும்.

அந்த நிலமையில் ஒரு பிள்ளைக்கு இருக்கும் ஆதங்கம் தான் இன்று எனக்கும் (திரு.இராம்தாஸ் மற்றும் எங்களை போல் பல்ர்) உள்ளது. பிற தமிழர்களை போல் எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான் – எங்களது தாய்மொழியும் தமிழ் தான். தமிழ் இலக்கணம்-இலக்கியத்தில் முறையான பயிர்ச்சி இல்லையென்றாலும் தமிழில் பேச-படிக்க-எழுத தெரிந்தவர்கள்
தான்.

ஆக தமிழர்களின் மத்தியிலே “தமிழன்” என்ற அங்கீகாரம் கிடைக்காததின் வெளிப்பாடு தான் இந்த(குமுறல்) பதிவு. யாரையும் குறை சொல்லியோ இழிவாக சொல்வதோ இதன் நோக்கம் அல்ல. இதனால் உங்கள் மனது எந்த விதத்திலாவது புண்பட்டிருந்தால் தயவுகூற்ந்து மன்னியுங்கள்.

தமிழுக்கே “செம்மொழி” என்ற அங்கீகாரம் உலகத்தாற்முன் இருக்க… நாங்கள் கோருவதில் முறைகேடு உண்டோ. . . . . . . . . .

7 Replies to “"தமிழன்" என்று ஒரு சொல்”

  1. நன்றி நண்பர் தீபாவிற்க்கு, என் உணர்வுகளை புரிந்துகொண்டமைக்கு. எவன் தமிழன்? இனிய தமிழ்நாட்டின் தலைநகரில் வாழ்ந்துகொண்டு, என்னேரமும் ஐம்புலன்களாலும் தமிழை உணர்ந்து உட்க்கொண்டு, வேட்டியணிந்து, மஞ்சள் துண்டு போர்த்தி கருப்புக்கண்ணாடியணிந்து மேடையேறி பதவிமோகத்தில் கால்நக்கி வாழ்த்திப்பேசும் தொண்டர்முன் திருக்குறளோதியும், இந்து மதத்தை இகழ்ந்தும் பேசி வாக்குப்பெறும் திராவிடன் தமிழனா? அல்லது நாடுவிட்டு நாயடிபட்டு அரியானாவிலும் மேகாலயத்திலும், அதிகாலை எழுந்து வாசல் தெளித்து மாக்கோலமிடும் பாப்பாத்தியும், பொங்கல் முந்நாள் ஓரடி நீளம் கரும்பிற்க்கும் ஒரு மஞ்சள் குருந்திற்க்கும், தன் சம்பாத்தியத்தின் பெருமொரு சதவிகிதத்தை செலவிட்டு தமிழ்ப்பண்பாட்டை காத்துப்பேண ஹல்தி தோ கன்னா தோ என்று அலையும் பார்ப்பனனும் தமிழரா? கருப்புக்கண்ணாடியர் அவதரித்த அதே திருவாரூரில் பிறந்து ஆரியக்கடவுளனான இராமர் துதிபாடிய தியாகராஜ பார்ப்பனன் பாடியது போல “நிஜமுன பல்கு மனஸா”. எவன் தமிழன்?

  2. காலம் காலமாக ஒருவர் மீது ஒருவர் குறை-குற்றம்(நீயா-நானா…) சொல்லிகொண்டு தான் இருக்கிரோம்.இதனால் உபத்ரவம் தானே ஒழிய பயன் ஏதும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. இரு-பாலர்களின் முன்னோர்களும் இதை தான் செய்தார்கள்…நாமும் அதை தொடர வேண்டுமா?…நம் பின்னால் வரும் தலைமுறைக்கு சொத்து-சேற்க்கவிட்டாலும் பாதகமில்லை…த்வேஶத்தை சொத்தாக கொடுக்க வேண்டாம். இனிமேலவாது பொதுப்படையாக இருக்கும் அபிப்ராயத்தை ஒதுக்கிவைத்து நாம் தனிப்பட்ட முறையில் அறிந்தவர்களை குறித்து நல்லவைகளை நினைப்பொம்-சொல்வோம். நிச்சயமாக இந்த பதிவை நல்ல முறையில் புரின்தும் – அறிந்தும் செயல்படுபவர்கள் இருக்கிரார்கள். என்ன… இந்த பதிவு அவர்கள் கண்ணில் இன்னும் படவில்லை.. கொஞ்ம் காலதாமதம் தான்…

  3. I am really sad to say that it is disheartening to note that same tamilians are being discriminated as “avalas” and others. But the discrimination was started by these Iyers and Iyengars who created the Varna system and labelled a few “low”.Power,Money hungry wolves did everything to keep up all these with them and continue to do so by oucasting them in their circle. My personal experience with all these so called upper caste people have been as of decietful cut throat bastards who will stoop down to any levels to make their ends meet. Until You change and show a psitive step there will be no stopping to all these acusations

  4. வாங்க Raja Raja Cholan
    Welcome..

    I understnad from your comments that you have had bad experinces regarding discrimination in the past..and i humbly acknowledge it.But can you deny that We have been facing similar discrimintaions too..?Just as i said in my previous comment
    காலம் காலமாக ஒருவர் மீது ஒருவர் குறை-குற்றம்(நீயா-நானா…) சொல்லிகொண்டு தான் இருக்கிரோம்.இரு-பாலர்களின் முன்னோர்களும் இதை தான் செய்தார்கள்…நாமும் அதை தொடர வேண்டுமா?..
    I am personally trying not to be discrimintative on the basis of birth and i can proudly say that i have overcome that..And i am requesting the same from all the readers of this post too.Istnit it too long that all of us have been dwellin in the past (esp sour moments) aand fail to move forward..?
    PS:- I have taken extra care not to add any kind of adjectives to people of any birth.IF u spot any such degredatory adjective do tell me.. i shall immediatly remove it. I belive its possible to hold a sane conversation with diffrence of opinions by avoiding degredatory adjectives
    Thank you
    Deepa

  5. This is Deepa’s blog so I refrain from replying to raja raja cholan in this post. I can though. As cholan has himself acknowledged I am a cut throat bastard. So it shouldnt be very tough for me to post a fitting reply. But away from Deepa’s blog. Another place another time.

  6. அன்பின் தீபா அவர்களே, உங்கள் மன உணர்வுகள் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.யாரோ செய்த வர்ணாஸ்ரம முறைக்கு எங்களை கேலிப்பொருளாகவும் பகையாளியாகவும் ஏன் பார்க்கிறார்கள் என்கிற உங்கள் ஆதங்கம் புரிந்துகொள்ளமுடிந்ததுதான். இதற்கு நீண்ட விளக்கம் அளிக்கவேண்டும், கிட்டதட்ட 2000 ஆயிரம் ஆண்டு வரலாறு 75 ஆண்டுகளுக்கு முன் தகர்க்கபட்டது தந்தை பெரியாரால். எங்கள் பக்கமும் பார்ப்பனர்கள் உண்டு. அவர்களை நாங்கள் எங்களில் ஒருவராய்த்தான் பார்க்கிறோம்.மனிதனை மனிதனாக மதிக்கும் யாரையும் நாங்கள் அல்லது நான் தவறாக எண்ணக்கூட மாட்டோம்.

    சனாதானத்தையும் வர்ணாஸ்ரமத்தையும் பின்பற்றுவோரிடம் அதை பின்பற்றாதவர்களும் அதனால் ஆண்டாண்டுகாலம் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினைதான் நீங்கள் குறிப்பிட்டுள்ளது. எனினும் இதுவெல்லாம் மறைந்து ஒரு சமத்துவம் மலரவேண்டும் என்பதுதான் என் போன்றவர்களின் எண்ணம்.

  7. tam brahms are the most hated.
    All over india they are being hated because they are a tamil.
    All over tamilnadu they are hated because they are brahmins!!

    Enna koduma saravanan idhu!! 🙁

    –Tamilnadu born confused brahmin –> TBCB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *