வாஷிங்டனில் திருமணம்

..ஹா..ஹா…ஹாச்சூ..பிடி பிடி.. ஏன்டா ரெண்டு நிமிஷம் ஒழுங்கா ஸ்டூல் புடிக்க முடியாதா?.விளயாடரத்துக்கு அவள்ளவு அவசறம்..ம்ம்…
செரி..என் வேலை ஆச்சு..நீ கிளம்பு….
டடே என்னோட அடுத்த பதிவ படிக்க வந்துடீங்களா?..வாங்க..வாங்க.

அது ஒண்ணுமில்லைங்க.. கார்த்திகை தீபம் வருதில்ல.. பரண் மேலெருந்து சுத்தம் செய்யிரதுக்காக விளக்கு எடுத்தேன்..அதான் நீங்க கேட்ட ஹாச்ச்சு. எடுத்தது விளக்கு தான்.. ஆனா..ஜோதியாடம் கண்ணுல பட்டது நான் படிச்சு இல்லை வயிருவலிக்க சிரிச்சு ..அப்புறம்..தினசரி வாழ்க்கைல மறந்து போன திரு.சாவி (சா.விஸ்வநாதன்) எழுதிய “வாஷிங்டனில் திருமணம்”

அதை எழுதும் போது திரு.சாவி. அமேரிக்கா போய் வாஷிங்டன், ந்யூயார்க் எல்லம் நிஜமாவே போய் பார்த்தாரா எல்லாம் எனக்கு தெரியாது, ஆனா..மறுபடியும் இந்த புத்தகத்தை படிக்க-படிக்க..முதல்ல சிரிச்சதைவிட இன்னும் அத்திகமாவே நல்லா சத்தம்போட்டு சிரிச்சேன்..ராத்திரி 10 மணிக்கு. வீட்டுல இருக்கறவங்க எல்லாம் ஒருமாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்மில் பலபேர் இந்த புத்தகத்தில இருக்கற பெரும்பாலான இடங்களை பார்த்திருப்பொம்..Washington DC ,NewYork, Wisconsin Avenue, National Art Gallery..etc. இந்த புத்தகத்தை முழுசா ரசிக்க ஒரே வழி.. தனியா உக்காந்து..கண்ணு வார்த்தைகளை படிக்க-படிக்க… மனசுக்குளே.. அப்பிடியே அதை சினிமா படம் போல பார்க்கவும்.

முயர்ச்சி பண்ணுங்க..இவ்வளவும் செஞ்சதுகப்புறமும் உங்களுக்கு சிரிப்பு வரலைனா சொல்லுங்க.. நான் என் பேரை தீபா விலேருந்து பாதீ ன்னு மாத்தி வச்சுகிறேன்.
நான் ரொம்ப ரசித்த சில வரிகள்:-

கேதரின்-லோசனா நட்பு ” நாளொரு டிரஸ்ஸும்-பொழுதொரு பவுடரு”மாக வளர்ந்தது
லோரிட்ட சொல்கிராள் :- ஒரு டப்பா நிறைய டாஞ்சூர் “ரோட்-டஸ்ட்” கொண்டு வரணும்
மணப்பெண் தாலி கட்டி கொள்வதற்க்கு முன்னால் அவள் “ரூப்-ஸாரி” கட்டிகொள்கிறாள்
போடோமாக் நதியை குறித்து :- போடா மக்கு நதியா…
மஹாலிங்கம் – ஜம்புலிங்கம் மாதிரி அமேரிக்காவிலே ஆப்ரஹாம் லிங்கம் விசேஷ்ம் போலிருக்கு

இன்னும் பல இருக்கு.. பட்டியல் பொட்ணும்னா முழு கதையும் எழுதணும்.
>
சாவியின் வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்தது கொபுவின் சித்திரங்கள்.
இந்த கதை பிரசுரமான வருஷம் உங்கள் யாருக்காவது தெரிஞா கண்டிப்பா சொல்லுங்க..பதிவுல சேத்துக்கரேன்.

13 Replies to “வாஷிங்டனில் திருமணம்”

  1. அருமையான நகைச்சுவை நாவல் இல்லீங்க ‘வாஷிங்டன்னில் திருமணம்’, !!
    மீண்டும் அந்த நாவலை வாசிக்க தூண்டியது உங்கள் பதிவு.

  2. வாங்க திவ்யா
    அந்த புத்தகத்தை பரண்லெருந்து எடுத்ததுக்கப்புரம் நாலு தடவ படிச்சுட்டேன்.ஓவ்வொரு தடவயும் ஜோரா படிச்சு காட்டிநதுல வீடுல இருக்கறவங்களுக்கு மனப்பாடமே ஆயிடுச்சு

  3. விமரிசிக்காவிட்டாலும் அடிக்கடி “தொடுவானம் நம்முள்ளத்தில்” பதிவேட்டுக்கு வருவதுண்டு, பதிவுகளை படிப்பதுண்டு. தொடரட்டும் முன்னேற்றம். “ஷ” ஏன் இன்னும் எழுத வரவில்லை? தூய தமிழெழுத்தல்லாததாலோ?

  4. வாங்க NR
    “ஶ” எழுத வராம எல்லம் இல்லை. பரஹா-ல தட்டச்சு செய்யும்போது “ஶ” அருமையா என்னை பார்த்து சிரிக்கிரது.. ஆனா. வெட்டி-ஒட்டும்போது கோவிச்சுகிட்டு அஶ்டகோணலா மூஞ்சிய திருப்பரதே.. என்ன பண்ண..:-(

    ஷ–this charater was copy pasted from your comment.If this appears correctly, then Perhaps everytime i use ஷ i will have to copy paste from here.I hereby declare you my ஷ-supplier

  5. //மீண்டும் அந்த நாவலை வாசிக்க தூண்டியது உங்கள் பதிவு.//

    அதே.. அதே..

    சில வருடங்களுக்கு முன் நியூயார்க் சென்றபோது, இதற்காகவே வாஷிங்டன் சென்று போடோமாக் ஆறு, லிங்கன் மாளிகை எல்லாம் பார்த்தேன். ஆனால் படிக்கும்போது செய்யும் கற்பனைக்கு ஈடாகவில்லை.

    நன்றி
    கமல்
    http://www.varalaaru.com

  6. வாங்க கண்ணன்

    “போடோமாக் நதி” நான் ரொம்பவும் ரசிச்ச வாக்கியம்…– போடா மக்கு ந்தியும் இல்லை.. வாடா புத்திசாலி நதியும் இல்லை—.சிரிச்சு முடிச்சு அடுத்த sentence படிக்கவே முழுசா 5 நிமிஷம் ஆச்சு

  7. என் பதிமங்களில்;ஈழத்தில் படித்து மிக ரசித்த நாவல்!!
    அருமையான படைப்பு!!! எத்தனை முறையும் படிக்கலாம்.
    தங்கள் ஏனைய பதிவுகள் நேரம் கிட்டும் போது படித்துப் பின்னூட்டுவேன்.
    யோகன் பாரிஸ்

  8. வாங்க யோகன்

    ஆமாம்.. இந்த கதையை படிக்காத்தவர்களே இருக்க சாத்தியம் இல்லை.
    கண்டிப்பாக என் ஏனய பதிவுகளை படித்து உங்கள் கருத்தை தவறாமல் சொல்லுங்கள்

  9. Hi,
    Got your site from Blogdesam,your collection of articles are really excellent..

    Particularly, when i saw saying that jersey cityla iruththu varigga.i was shocked one minute,then got to know everything(HTML CODE).

    Anyway all the best..

  10. வாங்க உஷா..
    Blogdesam க்குதான் நன்றி சொல்லனும்.. அப்புறம்.. ..அது என்ன சொல்லரீங்க.HTML code….ஒண்ணுமே புரியவில்லை

  11. கலக்குங்க !!!

    ( இந்த வேர்டு வெரிபிகேஷனை எடுங்க…அப்போதான் நாங்க நிம்மதியா கமெண்ட் போடமுடியும்..)

  12. வாங்க ரவி
    வேர்டு வெரிபிகேஷனை எடுத்தாச்சு.. சந்தோஷமா?..நிம்மதியா கமென்ட் அடிங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *