சனி-ஞாயிரு எல்லாம் நல்லா ஊர் சுத்தி , இன்னிக்கி எழுந்திருச்சதே லேட்டு. வீட்டுல பெரியவங்க … அப்படி ஏற-இறங்க ஒரு பார்வை பார்த்து…ஏதொ சொல்லவராங்க.. ஆனா ஒன்னும் சொல்லலை… (இப்பொவே லேட்டு.. இனி இது வேறயா…தப்பிச்சேன்டா சாமி )
காலைல குளு-குளு பொட்டிய (அதாங்க Fridge) திறந்து பார்த்தா 2-வாடிப்போன காரட்,8-சுருங்கி போன பீன்ஸ் , பாதி-கொடமிள்காய் இவ்வளவு தான் இருக்கு. இப்பொ தான் ஒறச்சுது ஏன் அப்படி பாத்தாங்கன்னு..செ..Lunch box Ready பண்ண ஒருவிதமா சம்மாளிக்கலாம்னு காரட்டையும், பீன்ஸெயும் வேகவச்சு , மிச்சம் இருக்கற கொடமிள்காய் கூட சேர்த்து வதக்கரப்பொ , எப்பவோ துருவி வைச்ச தேங்கா நினைவுக்கு வர அதொட 4 பச்சமிளகாய் அரச்சு , உப்பயும் போட்டு , வதக்கின காய்கறி கூட சாதமும் சேர்த்து வாய்ல வச்சா.. காரம் சும்மா ஜிவ்வு நு ஏறுது.
கஷ்டகாலம்ன்னு வந்தா..பட்ட கால்லெயே படும்ன்னு சொல்லற மாதிரி..
…காரம் ஒருபக்கம் – சமயல் சொதப்பிடுத்தே நம்மவருக்கு மத்யான சாப்பாடு இப்படி ஆயிடுச்செங்கற வருத்தம் இன்னொருபக்கம் தாக்க..கண்ணு முந்நாடி இருந்தது.. ,காபி குடிக்கலாம்ன்னு எடுத்துவச்ச சக்கரை தான் (ஆமாங்க… நான் இன்னும் காபி கூட குடிக்கலை).ஏதோ ஒரு தைரியத்துல 2-ஸ்பூண் சக்கரைய அதோட கலந்து… Lunch box pack பண்ணி கொடுத்தாச்சு.
காரம் ஜாஸ்தி ஆயிடுச்சே ன்னு உப்பு போட- அதை சம்மாளிக்க கொஞ்சம் சாதம் சேர்க்க.. ஆகமொத்ததுல கலந்தது நிறைய ஆயிடுச்சு.செரி.. நாம சொதப்பினதை நாமதான் சாப்பிடணும்.. பெரியவங்களுக்கு வேற சமச்சு வச்சேன்.நான் பரிமார வருவதுக்கு முன்னாடி அவங்களே அந்த சொதப்பல்-சாதம் பொட்டுகிட்டாங்க. பிள்ளையாரப்பா..ன்னு நான் நிக்க..எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி..””இந்த Mixed Rice ரொம்ப நல்லா இருக்கே.. ஏன் இதை இத்தனை நாள் பண்ணலை..வெங்காயம் இல்லாம உனக்கு Mixed Rice இவ்வளவு நல்லா பண்ணவரும்னு சொன்னதே இல்லயே..இனிமே அடிக்கடி இதை பண்ணு.. ரொம்ப நல்லா இருக்கு”” அப்படின்னு சொல்லி, எனக்கு ஒரே புகழ்மாலை தான்.
இப்பொவே இதை மறக்காம என்னொட Recipie book ல எழுதி வச்சுகணும். இல்லைநா எப்படி பண்ணினேன்ங்கரதை நானே மறந்துடுவேன்
சாயங்காலம் அவரை கூட்டிகிட்டு பிள்ளையார் கொயிலுக்கு பொய் தேங்காய் வடல் போடணும்
எல்லாரும் மறக்காம வந்துருங்கப்பா.. தேங்காய் பொறுக்க. சாமி பிரஸாதம்–மாட்டேன்னு சொல்லகூடாது..ஓகேவா
நீங்களும் ஏதோ 1-2 விஷயத்துல சொதப்பியிருப்பீங்களே..சும்மா சொல்லுங்க.. என்ன ஆச்சு.?.?.?
என்ன NR..ஷ ஒழுங்கா எழுதி இருக்கேனா?
மிகச்சரியாக எழுதியிருக்கிறாய். ஷ சரியாக எழுதியிருக்கிறாயா என்று ஆராயும் மும்மரத்தில் பதிவை படிக்க முயலவில்லை. பதிவை படித்துவிட்டு மீண்டும் எழுதுகிறேன்.
🙂
அமெரிக்காவில் ‘பொங்கலோ பொங்கல்’ என்று சர்க்கரைப் பொங்கலைத் தனியாக கிண்டி நான் பாடுபட்டதை நினைவூட்டுகிறீர்கள் :-D)
வாங்க பாலா
ரொம்ப சரி நீங்க சொல்வது.
.Rib tickling comedy..எனக்கு அப்படி தான் இருந்தது முதல் முறை படிக்கும்போது.
//கொயிலுக்கு பொய் தேங்காய் வடல் போடணும்
எல்லாரும் மறக்காம வந்துருங்கப்பா.. தேங்காய் பொறுக்க. சாமி பிரஸாதம்–மாட்டேன்னு சொல்லகூடாது..ஓகேவா//
தீபா, நல்லாவே ஹாஸ்யம் எழுதறேங்க, கொஞ்சம் தமிழ்லயும் கவனம் வெச்சா, துளசி அக்கா ஸ்டைல்ல கலக்கலாம்! வாழ்த்துக்கள்!
வாங்க சந்திரசேகரன்
நான் என்னனு சொல்ல… கொஞ்சம் இங்கேயும் படிச்சு பாருங்க.. அப்பொ தெரியும் என் தமிழ் ஏன் இந்த லக்ஷணத்துல இருக்குன்னு…
தொடுவான்ம் தான் எனக்கு Exam paper இதை படிக்கறவங்க எல்லாரும் Examiners அதநால..இங்கே வந்து – என் பதிவை (கஷ்டபட்டு) படிச்சு – பண்ணின Spelling and Gramatical mistakes முடிஞ்ச அளவுக்கு சுட்டிக்காட்டி சொந்நீங்கன்னா உடனே திருத்தி republish பண்ணறேன்.