தண்ணி பிரச்சனை இல்லாத ஊரே கிடயாது, அப்படின்னு நான் தைரியமாக சொல்லுவேன். என்ன ஒரெ-ஒரு வித்த்யாசம், சில இடத்துல தண்ணி ஜாஸ்தி ஆனதுநால பிரச்சனை (இது மட்டும் இரண்டு வகையான தண்ணீருக்கும் பொருந்தும்)- இன்னும் சில இடத்துல குறைவு அல்லது மிக-மிக குறைந்த அளவிலெ இருக்கரதால் பிரச்சனை.அட..ஓடாதீங்க..நான் அரசியல் பேசல..
எங்க வீட்டு தேவைக்கெல்லாம் போர்வெல் தண்ணி தான். குடிக்க-சமைக்க எல்லாம் 2 நாளைக்கு ஒரு முறை நேரம்-காலம் இல்லாம கண்ட நேரத்துக்கும் நம்ம அரசாங்கத்தின் மிக மிக உயர்ந்த அதிகாரியின் (அதாங்க.. இப்பெல்லாம் தண்ணி திறந்து விடர அந்த புண்யவான்) மனசுக்கு தோணினாப்பொல குழாலெ தண்ணி வரும். தண்ணி வர ஆரம்பிச்சு ஒருமணி நேரத்துலெயே நின்னிடுச்சுன்னா அவருக்கு அவசர வேலை இருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும். அட்டவணைப்படி நேத்தே நமக்கு வரவேண்டிய தண்ணி 2-நாள் ஆகியும் வரலைன்னா, ஓண்ணு நம்ம area-க்காரர் யாரோ அவரை நல்லா கடுப்பேத்திட்டார் – அதான் மனுஷன் பழி வாங்கரான் ( சி.சி. ..வாங்கரார்….ம்…மரியாதை முக்கியமா இவருக்கு).. இல்லை ஒருவேளை மத்த சில அலுவலகத்துல நடக்கிர மதிரி water-tank ” சாவிய hand-over பண்ணாம குடும்பத்தோட டா-டா பொயிட்டார். ஆனா சில நாள் (அதாவது வருஷத்துல தோராயமா 2-3 நாள்) 4-5 மணிநேரம் எல்லம்கூட தண்ணி வந்துகிடே இருக்கும்.அன்னிக்கி எத்தனை உள்ளங்கள் அவரை வாழ்த்தும் தெரியுமா..அந்த புண்ணியமே அவரோட ௭ தலைமுறையை காப்பாத்தும்.
ஆக இப்படி கிடைக்கற தண்ணீரை சமைக்க ஒரு drum-ல புடிச்சாலும் குடிக்க special-ஆ 4 பாத்திரம் இருக்கு. சும்மா தும்மினாலே டாக்டர் பயமுடுத்தறாங்க. அதனால அந்த தண்ணீர் காயிச்சரத்துக்குன்னே வார்த்த பாத்திரத்துல புடிச்சு – காய்ச்சி – ஆறவச்சு அப்புரம் பில்டர்ல விட்டு.. அப்புறம்தாங்க நாம குடிக்கணும்.அதுக்குள்ள மனுஷன் தோண்டை-தண்ணி வத்தி கண்ணு முழி எல்லாம் பிதுங்கிடும்.
இதையெல்லாம் யோசிச்சு மாசகணக்கா பட்ஜட் போட்டு ஒருவழியா ஆகவாகார்ட் (aquagaurd) போடறதுன்னு முடிவு பண்ணிநோம்.Company காரங்க வந்து fix பண்ணி கொடுத்துட்டும் பொயிட்டாங்க. ஹப்பா…பூதாகாரமா தோட்டத்துல பாதி கிணறு மாதிரி இருந்த 4 தண்ணி காய்ச்சர பாத்திரமும், பிலிடரும் kitchen slab-லெ இருந்து இறக்கி வைச்சா.. kitchen பெருமூச்சு விடற மாதிரி ஒரு பிரமை.
நம்ம mentality தான் தெரியுமே.. எதையுமே சுலபமா தூக்கி-எறிய மனசு வராதே..இன்னிக்கி தேவை இல்லைன்னா என்ன.. யாரு கண்டா எப்பொ இதோட தேவை வரும்.. அப்படின்னு கட்டிகாக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். கொஞ்சம் உங்க வீட்டு பரண் மேலயும் பாருங்க..(எனக்கு ஒரு suppourtக்கு தான்).ஆக பரண்ல Only Limited Vacancy
தண்ணி-காய்ச்சர பாத்திரம் பெரிசா இருந்ததால.. குட்டி-குட்டி பாத்திரம் எல்லாம் ஸ்வாஹா பண்ணி பரண்ல ஏறிடுச்சு.ஆனா பிலிடர் மட்டும்.. இடிச்ச-புள்ளியாட்டம் எங்களையே மொறைச்சு “”எந்த மூலைல என்ன தள்ளலாம்ன்னு சதி-திட்டமா போடரீங்க.. விடமாட்டேன்..புதுசா ஒருத்தன் வந்துட்டான்னு என்னை ஓரம்கட்ட பாக்கரீங்களா..?..நானும் ஒரு கை பாக்கரேன்..எப்படி சுமுகமா இருகீங்க.”” அப்படீன்னு சொல்லர மாதிரியே இருந்துது.
அது விட்ட சாபமோ என்னமோ..2 நாள் தான் பசங்க எல்லாரும்..ஆக்வாகார்ட்ல தண்ணி பிடிக்கரேன்னு..பாட்டில்லெ தண்ணி இருந்தாகூட அதை கொட்டிட்டு காலி பாட்டிலோட வந்தாங்க . மூணாவது நாள் பாத்தா..ஆக்வாகார்டுக்கு பாட்டில் அர்ச்சனை…(எல்லாம் காலி பாட்டில் தான்).நூல் போலதான் ஆக்வாகார்ட் தண்ணிய கக்கும். அதை வச்ச கண்ணு வாங்காம பாட்டில்லெ பிடிக்கணும். ( அட தண்ணிய வீணாக்ககூடாதில்லெ..)இப்படி எல்லாதுலையும் தண்ணி பிடிச்சு திரும்பி பார்த்தா விட்டலாச்சார்யா படம் போல புதுசா 3-4 காலி பாட்டில் நம்ம சங்கத்துல சேர்ந்திருக்கும்…<
br />
ம்ம்..ம்.. பிலிடர்- நாள் ( அதாங்க .. அந்த நாள் ஞாபகம்) கருப்பு-வெள்ளை சினிமா மாதிரி ஞாபகம் வந்தது. அப்பெல்லாம் காலை -மாலை மட்டும் பிலிடர்லெ தண்ணி விட்டா போதும். வேணுங்கரவங்க அது குழாய்லெருந்து டம்பலெர்லெ எடுத்து குடிப்பாங்க..பிலிடர் என்கிட்டே ..””பாத்தியா… எல்லாம் நான் விட்ட சாபம் தான்.. என்னை ஓரம்கட்டலாம்னு நினைச்சீங்க இல்லே…இப்போ அனுபவீங்க””..அப்படீன்னு சொல்லரமாதிரி இருந்துது. பிலிடர் கிட்டே மானசீகமா மன்னிப்பு கேட்டேன்..மணி அடிச்சாப்போல சாபத்திர்க்கு விமோசனமும் பிலிடரே காட்டிகொடுத்தது
பிலிடர்லெ 2 பாத்திரம் இருக்கும். மேலே உள்ள பாத்திரத்துலெ தண்ணி விட்டா.. கீழே உள்ள பாத்திரத்துலெ சுத்தமான நீர் சேகரிக்கப்படும். அதுலதாங்க குழாய் இருக்கு. நான் அந்த குழாய் இருக்கர பாத்திரத்தை ஆக்வாகார்ட் கீழெ வச்சு சாப-விமோசனம் பெற்றேன்