ஜவ்வரிசி உப்புமா

ரொம்பவே எளிதான சிற்றுண்டி..செய்து பார்த்து சொல்லுங்க

ஜவ்வரிசி -1 கப் ஜவ்வரிசிய்யை நன்றாக கழுவி–கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடித்து விடவும். அப்படியே 2-3 மணி நேரம் ஊற விடவும். ரொம்பவும் dry யாக இருந்தால்..கொஞம் நீர் தெளிக்கவும்.Only sprinkle water.Take care not to immerse it in water
வேர்க்கடலை-1 பிடி (எண்ணை விடாமல் வறுத்தது) Dry roasted peanuts with their skin removed
பச்சைமிளகாய் -5 medium sized

இஞ்சி – சிறிதளவு
கொத்தமல்லி இலை :- விருப்பம் போல்
எலுமிச்சம் பழம் :- 1
நீர் இல்லாமல் நன்றாக துடைத்த மிக்ஸியில் வேர்க்கடலை + பச்சைமிளகாய் + இஞ்சி + உப்பு ..சேர்த்து “ஓரு” நிமிடம் மட்டும் அரைக்கவும் (நீர் சேற்க்க கூடாது).
இந்த அரைத்த கலவைய்யை ஊறி இருக்கும் ஜவ்வரிசியுடன் கலந்து 5 min வைக்கவும்
வாணலியில்:-
நெய் + ஜீரகம் + மஞ்சள்ப்பொடி(சிறிது) + அரைத்த வேர்க்கடலையுடன் கலந்து வைத்துள்ள ஜவ்வரிசி..
இவைகளை..நன்றாக 5 min வதக்கவும்…,
கொத்தமல்லி தூவி பரிமாறவும் …
விருப்பபட்டால் lime juice கலந்துகொள்ளலாம் for best results,.. you can allow the ஜவ்வரிசி to soak overnight.by sprinkling one handful of water only

8 Replies to “ஜவ்வரிசி உப்புமா”

  1. இதக் கன்னடத்துக்காரங்க சாபூதானா கிச்சடின்னு சொல்றாங்க. விழுக்கு விழுக்குன்னு ஒரு மாதிரி திங்குறதுக்கும் நல்லாயிருக்கும்.

  2. NR
    ஜவ்வரிச்சிக்கு கொஞ்சம் தண்ணீர் அதிகமானாலும்..அது ஒரே பிசக்-பிசக் தான்..
    the trick is in soaking in the right amount of water .Hope you like it
    Deepa

  3. வாங்க ராகவன்.
    ஒரு வருஷமா பல permutation combination பண்ணி..Orissa ல இருக்கிர என் நாத்தனார் தான் இந்த குறிப்பை தந்தது மட்டுமில்லாமல் செஞ்சும் காட்டிநாங்க….ஆக.. நாத்தநாருக்கு நன்றி

  4. இது மராத்தியரின் விரத உணவு.இதற்கு,தொட்டுக்கொள்ள வேற்க்டலை சட்னி நன்றாக் இருக்கும்.
    மிகவும் சுலபம்.
    பொடித்த வேற்கடலை-1 கப்
    தயிர்-தேவையான அளவு
    வெறும் மிளகாய் தூள்-1 tsp
    உப்பு-தேவையான அளவு

    அணைத்தயும் ஒன்றாக் கலக்கவும்.சட்னி ரெடி

  5. வாங்க மீனா..
    அடடா..instant சட்டினி குறிப்புக்கு நன்றி..வருகிற சனிக்கிழமை ஜவ்வரிசி உப்புமா & வேர்க்கடலை சட்டினி தான் காலை சிற்றுண்டி..

    ஐய்யா..வாங்க…அம்மா..வாங்க.. உப்புமா கத்துகிட்டீங்கன்னா..மீனாக்கா சட்டினி இலவசமா சொல்லிதறாங்க.. செஞ்சு பாருங்க..சப்பிட்டு இங்கெ வந்து மறக்காம சொல்லுங்க

  6. do not mistake me but my wife made this and gave it to me for breakfast, packed in a tiffin box which i carried to office. I forgot to eat it. When I opened it at 12 noon it was so solidified that i could hardly swallow it. I dont know whether the mistake was in the dish or in the preparation. The next day (sunday) i mixed boiled vegetables with it added some water and chilly, ginger etc and made it into flattened balls. I fried it into cutlets. They were delightful

  7. Ram..
    It takes a while to get the correct consitencey..
    May be i think the sago (javvarisi) had more water in such a case it should be allowed to soak for a longer time..
    Never mind.. it took me one whole year to perfect this..
    :))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *