Cell Phone வைச்சுக்க என்ன கஷ்டம் இருக்க போகுதுன்னு தானே யோசிக்கரீங்க..ஆம்பளைங்க எல்லாம் வசதியா Pocketல Vibrate modeல வைச்சு..கூட்டத்துல Phone மணி அடிச்சா..அது அவங்களுடைய Phone தானா இல்லையான்னு சலனப்படாம தெரிஞ்சுப்பாங்க..ஆனா நமக்கு அப்படி இல்லையே..
Pouch வைச்ச Hand bag உள்ளவங்க..பரவாயில்லை.. வசதி தான்..சாதாரண Hand Bag கா இருந்தா.. ஒரு மணி அடிச்சா.. பல கைகள் Handbag கூட ஒரு யுத்தமே நடத்தும்.. கடைசீல.. யாருடைய Phone ணோ அவங்க.. Public Announcement பண்ணுவாங்க..”ஹீ..ஹீ..என்னுது தான்..” அப்பொ தான் கலவரம் அடங்கின மாதிரி இருக்கும்.
தமிழ் நாட்டு கலாச்சார உடை புடவைதான்…மறுக்கலை.. ஆனா கல்லூரி – வேலைக்கு போகும் பெண்களுக்கு வசதி Salwar kameez தான் என்பதையும் மறுக்க முடியாது.அதனால Handbag கூட யுத்தம் பண்ணுவதை avoid பண்ண என் Salwar Kameez க்கு Pocket வெச்சா எப்படி இருக்கும்ன்னு 2003 ல try பண்ணினேன்..இப்பொ எந்த வித யுத்தமும் இல்லாம நிம்மதியா இருக்கேன். Daily wear & Formal Wear Salwar kameezக்கு எல்லாம் இப்பொ Pocket இருக்கு
- இது ஒரு Straight pocket..அதாவது கைய்யை கோணா-மாணா ன்னு திருப்பி கஷ்டப்படவேண்டியது இல்லை
- The opening of the pocket must be atlest 2″ greater than the width of your palm அப்பொ தான் ஜாஸ்தி Elbow-space useபண்ணாமல், அக்கம்-பக்கத்துல இருக்கிறவங்களை முழங்கையால குத்தாம Pocket ல் இருந்து Phone – Keys எடுக்கமுடியும்
- Pocket is placed below the curve of the hips.அதநால் Drees அழகு கெடுவதுக்கு வாய்ப்பே இல்லை
- முக்கியமா.. Trial க்கு ஒரு Kameez (top) க்கு Pocket வைக்கலாம்ன்னு தீர்மானம் பண்ணியாச்சுன்னா…ரொம்ப-பழைய புடவை அல்லது மலிவு விலை (100/- to 150/-)க்கு துணி வாங்கி try பண்ணுங்க….
ஒரு முன்ஜாக்ருதை தான்
பலருக்கும் பயன்படக்கூடும்…
மிக உபயோகமான பதிவு. இதை தேசிபண்டிட்-ல் இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2006/12/29/womennmobile/“
ப்ரமாதம்.
சேலை அணியும் மாதருக்குப் பயன்பட தேவை இன்னொரு பதிவு.:-)
Welcome dubukku,,
thanks for recommending this post to desipundit
🙂
Welcome Simhan
well.. we too need to upgrade our dress ..dont we..?
//we too need to upgrade our dress ..dont we..?//
குமரன் அல்லது நல்லின்னு நினைக்கிறேன்.. பாக்கெட் சாரீஸ் அறிமுகப்படுத்தியிருக்காங்க. விளம்பரம் பார்த்தீங்களா? ஆனா இதெல்லாம் சரிப்படாது. எப்பவுமே பாக்கெட் பர்ஃபெக்டா ஒரே இடத்தில் வர்ற மாதிரி கட்டமுடியுமா? பட்டுப்புடவையோட அழகைக் கெடுக்குதுன்னு நினைக்கிறேன்!
சேது
Pocket Saree விளம்பரத்தை நானும் பார்தேன்.அதுலெ இருக்கிர ப்ரிச்சனைய்யே ..Pocket position நடைமுறைக்கு ஒத்துவராதது தான்..இந்திய பெண்கள் எல்லோருக்கும் Pocket Saree யில் இருக்கும் pocket சீராக வரும்ன்னு உத்திரவாதம் சொல்ல முடியாது..இது மட்டும் இல்லை..Upcomming Generation சேலைய்யை விழாக்களுக்கு மட்டுமே தான் கட்டுறாங்க…இதை நான் குறையா சொல்லலை..தினசரி அலுவல்களுக்கு சேலை சிரமம் தான்..
upcomming Generation பெரும்பாலும்..அப்பொ-அப்பொ Readymade Dress,வாங்கினாலும்.. Dress Material வாங்கி தைக்கிறவங்க தான் நிறைய..
கடந்த 3 வருஷமா நான் இந்த Pocket Salwaar kameez தான் உபயோக படுத்தரேன்..அவசர தேவைக்கு சில்லறை.. etfc..etc போட்டுக்க வசதியா இருக்கு… Bus Conductor, Autorikshaw க்கு எல்லாம் சட்டுனு எடுத்துகொடுக்க முடியுது
சயின்டிபிக் அமேரிக்கன் இதழில் படித்தேன். ஐந்து வருடங்களில் பல் மருத்துவரால் பல்லிலும் E N T specialistஆல் காதினுள்ளிலும் பொருத்தத்தகுந்த செல்போண்கள் வந்துவிடும் என்று.
ராம்..
இந்த ஏற்ப்பாடு..நீங்க சொல்லும் காலம் வரும்வரைக்கும்..:-)ஒரு Makeshift arrangement மாதிரி
reminds me of my school uniform – we had pockets stitched along the kameez’s side seam too, not for cell phone purposes – no such like more than a decade or so back, see!
now i hear there’s sarees with pockets too – vazhga!
Welcome Desigril
Yes.. i too remember having pockets in my peniform.. but once we leave schooll.. we tend to dismiss many of the School-like-activities as childish.. without even thinking that there could be a more sophisticated and useful reason behind the things they made us do at the school…