பிளாகர்லெ எல்லாரும் என்ன பண்ணுவாங்க .. பிளாக் தான் பண்ணுவாங்க.. ஏதாவது சொல்லணும்ன்னா Comments லெ பின்னூடம் போட்டால் ஆச்சு.. அப்படிதானே ..செரி.. ஒருவேளை பதிவுக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தை குறித்து கருத்து தெரிவிக்கணும்ன்னா என்ன பண்ண…மின்-அஞ்சல் அனுப்பலாம்..ஆனால் சில விஷயங்கள் “”இதுக்கு போய் மின்-அஞ்சல் அனுப்பவா.(சோம்பலா இருக்கே. :-w .)…சும்மா கேட்டா தேவலை”” அப்படின்னு இருக்கும்.. —. அந்த மாதிரி விஷயங்களை குறித்து கருத்து தெரிவிக்க தான் Shout box ஐ நான் உபயொக படுத்தியிருக்கேன்….கொஞ்சம் அப்படி வலது-கை பக்கமா பாருங்க… “சும்மா ஜாலி” ங்கிர தலைபுக்கு கீழே … சர்னா-பேசியிருக்காக::டேவிட்-பேசியிருக்காக:: மற்றும் நம் பிளாகர் நண்பர்கள் எல்லரும் என்கூட பேசியிருக்காக….இது மாதிரி நீங்களும் உங்கள் நண்பர்கள் வட்டத்திலே பேசலாமே.. செய்யவேண்டியது ரொம்ப சிம்பிள்..
- நான் CBox வழங்கும் shout Box உபயொகபடுத்தியுள்ளேன்
- CBox தளத்த்ல் உங்களை பதிவு செய்துகொள்ளவும்…Go for Basic (Free) Version
- அங்கு உங்கள் விருப்பத்திர்க்கு ஏற்றால் போல் தேற்ந்தெடுத்து மாற்றி அமைத்துகொள்ளவும்
பிறகு Quick -Setup பொய் Code ஐ Notepad ல் பத்திரபடுத்தி கொள்ளவும்
இனிமேல் என்ன.. சும்மா ஜாலியா உங்க பிளாகிலேயே அரட்டை அடிக்கலாம்.. இதை உபயோகபடுத்தி சந்தோஷமா இருந்தீங்கன்னா.. பின்னூடம் போட்டிட்டு பொங்க.. உங்க பிளாகிலெ இந்த பதிவுக்கு சுட்டி குடுத்தீங்கன்னா நானும் கொஞ்சம் குஷியா இருப்பேன் 8->
நான் முன்னமே நிரந்தர சுட்டி கொடுத்துட்டேன். அடுத்து என் ப்ளாக்கர பற்றிய பதிவுலையும் சேர்த்துட்டேன். (ஆனா… இந்த மேட்டர் ரொம்ப பழசும்மா)
Thank you barathi…
Can you give me the link.. so that i can backlink to you
———-தனி மடல்———-
http://balabharathi.blogspot.com/2007/01/new-blogger.html
நீங்களும் ரசிக்கலாம் பகுதியில் நிரந்தர லிங்க்!
அரட்டைதானுங்க…அறட்டை இல்லை…!!!!!
தீபா,
இந்த அரட்டைக்கான பக்கப்பட்டியைப் பல நாள் முன்பே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல, பல பதிவர்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இரண்டு பிரச்சனைகள் காரணமாக இதன் பயன்பாடு குறையத் தொடங்கி, இப்போது காணாமலே போய்விட்டது:
1. மட்டுறுத்தல் இல்லாத இந்தப் பக்கப் பெட்டியில், யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதிப் போட்டுவிட்டுப் போய்க் கொண்டிருந்தனர். சில அநாகரிக வாக்கியங்களும் வந்தன. அவற்றைப் பின்னர் பார்த்து மட்டுறுத்திக் கொண்டிருந்தோம். எல்லாரும் பார்த்து முடித்த பின்னர் அழிப்பதில் பலன் இருக்கவில்லை.
2. என்னுடையது மற்றும் சிலருடைய வார்ப்புருவில் இந்த அரட்டைப் பெட்டியின் நிரலி சில ஒழுங்கீனங்களைத் தோற்றுவித்தது. பாதி பக்கம் தெரியாமலே நின்று போகும். முழுதாக லோட் ஆகாது.
அது போன்ற பிரச்சனைகளுக்குப் பின் இந்த அரட்டைப் பெட்டியை நீக்கிவிட்டோம்.
அலுவலகத்தில் எந்த சாட் பெட்டியும் வேலை செய்யாதெனில், இந்தப் பக்கப் பெட்டி ஒரு வரம் தான். ஆனாலும் இது ஒரு public chat room. பெட்டியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, ஒரு நண்பருக்கு சொன்னது இது: “இதுல அரட்டை அடிக்கிறது, கூட்டமான பஸ்ல பேசுறது மாதிரி. கூட்டத்துல யாராவது நம்மைக் கவனிச்சாலும் கவனிக்கலாம். நல்ல சத்தத்துல யாரும் கண்டுக்காம போகவும் வாய்ப்பிருக்கு. ” :)))
[நீங்கள் சொல்லி இருப்பவை தவிர, அனானி பின்னூட்டங்கள் அனுமதிக்காத உங்களுடையது போன்ற பதிவுகளில், ப்ளாக்கர் கணக்கில்லாத நண்பர்கள் பின்னூட்டம் சொல்லவும் இந்தப் பெட்டி பயன்படும் 🙂 ]
போன்ஸ்
Shout box இவ்வளாவு வில்லங்கம் இருக்கும்ன்னு எனக்கு தெரியாம போச்சு..இப்போ நான் என்ன பண்ண.. இந்த பதிவை அழிச்சுடட்டா 🙁
இருக்கட்டுமுங்க.. பிரச்சனைகளையும் சேர்த்தே சொல்லணும்ங்கிற ஐடியாதான் 🙂 வேற ஒண்ணுமில்ல
இதுவரைக்கும் என்கூட அரட்டை-பொட்டி மூலமா பேசினவங்க எல்லாருமே நல்லபடியா தான் இருக்காங்க.. Basic civic Sense இருக்கும்ங்கற நம்பிக்கை தான்