வலைபதிவர்களுக்கிடையே நடக்கும் தற்க்கங்கள் பலதும் நான் தொடர்ந்து கவனிச்சுகிட்டு வறேன்..இந்த விவாதங்கள் பலதும் ஸ்வாரஸ்யமா – சிந்தனையை தூண்டக்கூடியதா – உண்மைய்யை ஒட்டி இருக்கும் 😐 விவாதத்தில் என் அபிப்பிறாயத்தையும் சொல்லணும்ன்னு நினைப்பேன்..பின்னூடம் கூட சில நெரத்திலெ தட்டச்சு செய்து..இன்னும்-என்ன Publsih ன்னு மட்டும் தான் குடுக்கணும்..( என் பழக்கம் என்னன்னா..முதல்லே நான் சொல்லவேண்டியதை comment box லெ type பண்ணி வச்சுப்பேன்..அப்புறம் தான் மத்தவங்க comments ஐ படிப்பேன்..so that I dont want my initial thought to be influenced by what others had said.. அப்புறம் தேவைபட்டா பின்னூடத்திலெ மாற்றங்கள் செய்வேன்).செரி publsih பண்ணருதுக்கு முன்னே.. எனக்கு முன்னாடி வந்து பின்னூடம் குடுத்தவங்க்ளோட அபிப்பராயம் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் ன்னு படிச்சா .. அட-சே .. What ever happend to good-old-fashoned dignity of expression ன்னு தொணிடும்..:(
நாமெல்லோரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டுவிட்டோம்ங்கிறதை எல்லாரும் ஒத்துபீங்கன்னு நம்பறென். எல்லோருக்கும் கருத்து-ஸுதந்திரம் , (Freedom of Thought) & Freedom of expression (please give me its Tamil equivalant) இருக்கு.. அத்னாலதானே .. கைய்க்கு-வந்ததை தட்டறோம் – வாய்க்கு-வந்ததை பேசறோம் …Each person is entitled to his / her opinion இல்லையா.. ஒரே விஷயத்தை 2 பேர் கிட்டே சொன்னா 3 அபிப்பிராயம் கிடைக்கும்.. இதுலெ எது செரிங்கிறது அவங்க-அவங்க கண்ணோட்டத்தை பொறுத்து இருக்கு..
விவாதத்தின் நோக்கம் என்ன?.. எது செரி – எது தவறு ன்னு முடிவு செய்வதா?. ஹூஹ்ம்…. “விவாதம்”ன்னாலே.. அதுக்கு முடிவே இல்லை.. அப்புறம்.. விவாதம் செவதுக்கு என்ன காரணம் — ஒரே விஷயத்துக்கு பல அபிப்பிராயம் வரும்போது.. we widen our horizon.. things are put in a different prespective [-(
உதாகரணத்துக்கு சொல்லணும் ன்னா
விவாதாவிஷயம் : – சூர்யோதயம் |
இதுக்கு சுமாறா இத்தனை அப்பிப்பிராயங்கள் வரலாம் .. depending on who says it
|
எந்த ஒரு விவாதத்திலெயும்.. அவங்க-அவங்க அபிப்பிராயத்தை மரியாதைக்குறிய பாணியிலெ ஏன் சொல்ல மெனக்கிடறதில்லை..ங்கிறது தான் என்னோட வருத்தம்.. எல்லாரும் ” பொதுவாவே ” நல்லவங்களும் – பண்புள்ளவங்களும் தான்.. அப்புடி இருக்க…பதிவுக்கு / பின்னோடத்துக்கு எதிரா அபிப்பிராயம் சொல்லும்போது (அனானியாகவே இருக்கட்டுமே )..Is it so difficult to give your opposing views with a little Decency and Dignity.. Or is it more fashionable to be mean and Nasty while expressing yourselves
24 மணி நேரத்திலெ 50 பதிவர்கள் வந்து பார்த்திட்டு -பொயிட்டங்க.. :-W
ஒருத்தர் கூட பின்னூடம் போடலைன்னா என்ன காரணமா இருக்கும்..?.. ஒருவ்வேளே..இதுக்கு பின்னூடம் போட்டுட்டா..அதே Dignity & Decency ஐ maintain பண்ணனும்ங்கிர பாத்தியதை வந்துடும்ங்கிற பயமா ? ? ? 😕
//..( என் பழக்கம் என்னன்னா..முதல்லே நான் சொல்லவேண்டியதை comment box லெ type பண்ணி வச்சுப்பேன்..அப்புறம் தான் மத்தவங்க comments ஐ படிப்பேன்..so that I dont want my initial thought to be influenced by what others had said.. அப்புறம் தேவைபட்டா பின்னூடத்திலெ மாற்றங்கள் செய்வேன்). //
மேலே சொல்லி இருப்பதுதான் –Dignity & Decency
//எந்த ஒரு விவாதத்திலெயும்.. அவங்க-அவங்க அபிப்பிராயத்தை மரியாதைக்குறிய பாணியிலெ ஏன் சொல்ல மெனக்கிடறதில்லை..ங்கிறது தான் என்னோட வருத்தம்.. //
வருத்ததிற்கான காரணம் தெரியவில்லை
வாங்க சுந்தர்
நன்றி
வருத்ததின் காரணம்..exactly அங்கே சொல்லியிருப்பதுதான்..”2-3 மாதம் முன்னாடி..xyz இவ்வளவு இழிவாக இதை சொன்னார்..அதுக்கு என்னோட பதில்..”***censored*** ” இப்பிடியெல்லாம் நேரம்-வேலை மெனெக்கெட்டு பழைய பதிவெல்லாம் தூசு தட்டி சொல்லறாங்க.. அதில் பாதி மெனெகெட்டா போதுமே..சொல்லவந்த விஷயத்தை மட்டும் நறுக்குன்னு சொல்லிட்டு போகலாமே..
விவாதத்தின் நோக்கம் என்ன?.. எது செரி – எது தவறு ன்னு முடிவு செய்வதா?. ஹூஹ்ம்…. “விவாதம்”ன்னாலே.. அதுக்கு முடிவே இல்லை.. அப்புறம்.. விவாதம் செவதுக்கு என்ன காரணம் — ஒரே விஷயத்துக்கு பல அபிப்பிராயம் வரும்போது.. we widen our horizon.. things are put in a different prespective
Sooper
வாங்க vistor..
நன்றி..மீண்டும் வருக..:)
//..( என் பழக்கம் என்னன்னா..முதல்லே நான் சொல்லவேண்டியதை comment box லெ type பண்ணி வச்சுப்பேன்..அப்புறம் தான் மத்தவங்க comments ஐ படிப்பேன்..so that I dont want my initial thought to be influenced by what others had said.. அப்புறம் தேவைபட்டா பின்னூடத்திலெ மாற்றங்கள் செய்வேன்). //
interesting approach..நானும் பின்பற்றப் பார்க்கிறேன்.
ஒருவ்வேளே..இதுக்கு பின்னூடம் போட்டுட்டா..அதே Dignity & Decency ஐ maintain பண்ணனும்ங்கிர பாத்தியதை வந்துடும்ங்கிற பயமா ? ? ?
You are right ….
வாங்க ரவி..
பெஸ்ட் ஆப் லக்
வணக்கம் இம்சை…
consequece இல்லைன்னா என்ன பண்ணவும் தயங்க மாட்டோம்.. அதுதான் மனித குணம் இல்லையா…எனக்கு மறுமொழி சொல்லலைன்னாலும் பரவாயில்லை.. சொல்லவந்த கருத்தை மட்டும் ( கருத்து சொன்னவரை பழிக்காமல்) சொல்ல இனிமேலாவது முயர்ச்சி செய்தால் போதும்.. நமக்கு அது தானே வேணும்