Microwave ன் சுயசரிதை —பாகம் 1

ல்லாருக்கும் வணக்கம்..நான் தான் மைக்றோவேவ் ஓவென் பேசறேன்…நான் உங்களுக்கு புதுமுகம் இல்லைன்னு நினைக்கரேன்.உங்கள் வீட்டிலே என்னை ஒரு உயர்வான் இடத்திலெ தான் என்னை வைச்சு எனக்கு ஒரு கௌரவத்தை தந்திருக்கீங்க…(அட..தறையிலே வைக்கமுடியாதில்லே..கிச்சன் slab மேலே தானே வைச்சிருக்கீங்க..)..இங்கே நான் என்னோட சுயசரிதைய்யை சொல்லப்போறேன்…என்னமோ உங்க கிட்டேயெல்லாம்.. நான் பிறந்த்தது – வளர்ந்த்து – என் வியாபார வளர்ச்சியெல்லாம் பகிர்ந்துக்கணும்ன்னு ஒரு ஆசை…

கணுபிடித்த வருடம் :1945
கண்டுபிடித்தவர் :Percy Spencer
கண்டுபிடிப்பு :- ஒரு விபத்து

Raytheon கம்பேனிய்யை சேர்ந்த Precy spencer தீவிரமாக் magnetron ஆரய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்…


ஆரம்ப காலம் :-
செரியான நேரத்திர்க்கு சாப்பிடமுடியாமல் போகும்ன்னு பாக்கெட்டில் சாக்லேட் (Candy Bar) வைத்திருப்பார். ஒருநாள் ஆராய்ச்சியின் முடிவில்..ஏதாவது கொறிக்கலாம்ன்னு இருந்தப்போ.. பாக்கேட்டில் இருக்கும் சாக்லேட் நினைவுக்கு வர…பாக்கெட்டில் கைய்யை விட்டா…கையெல்லாம் ஒரே பிசக்-பிசக்ன்னு ஒட்டுது..என்னனு பார்த்தா..சாக்லேட் உருகிப்போய்…சூப்பாயிடுச்சு

ஒருவேளை இது நம்ம magnetron ஆரய்ச்சியில் இருக்கிற நுண்ணலைகள் (microwaves) காரண்மாக இருக்குமோன்னு சின்னதா ஒரு போரி தட்டினாலும்..அதை ஊர்சித படுத்த் என்னொரு சோதனை செய்தார்..சோதனை பொருள் :- Popcorn kernels…அத்தோட நிருத்தாம்..தோஸ்த் (அவர் பேர் கிடைக்கலை..தெரிஞ்சவங்க சொல்லுங்க..சேத்துக்கரேன் ) கிட்டே இதைபத்தி சொல்லி..ரெண்டு பேரும் ஒரு முட்டைய்யை வச்சு..அது வேகுமா..வேகாதான்னு வச்ச கண் வாங்காம பார்த்துகிட்டே இருந்தாங்க…

முட்டை கொஞ்ச நேரத்திலே கிடு-கிடுன்னு ஆட ஆரம்பிச்சுது…கிட்ட-தட்ட “முட்டைக்கு’ள் பூகம்பம்” ன்னு சொல்லலாம் இன்னும் கொஞ்சம் நல்லா பாக்கலாம் ன்னு தோஸ்த் கிட்டே போனார்…முட்டைகுள்ளே வெப்பத்தின் காரண்மாக அழுத்தம் ஜாஸ்தியாய்…முட்டை வெடிச்சுடுத்து

ஆதிகாலங்களில் நாங்கள்:-
என் மூதாதைய்யர் 6 அடி உயரமும் 340kg எடை கொண்டவர்..அவருடைய தீனி – 3000 watts – நுண்ணலை சக்தி – என்னைப்போல் உள்ளவர்களின் 3 மட்ங்கு …கொஞ்சம் யோசிச்சு பாருங்க..bedroom – Guest room மாதிரு Microwave room ன்னு கட்டவேண்டியிருக்கும்

அப்பெல்லாம் எங்களை யாரும் microwaveoven ன்னு சொல்லலை..RadarRange ன்னு தான் சொன்னாங்க. இப்போ இருக்கும்போல் எங்களை வடைவமைத்தவர்கள் 1935 ல் Amana Corporation…விலை $495..அப்புறம் படிப்படியா முன்னேரி உங்க வீட்டுக்கு வந்திருக்கோம்

பாகம் – 2…

7 Replies to “Microwave ன் சுயசரிதை —பாகம் 1”

  1. உபயோகமான கதையா இருக்கே.. தொடருங்க 🙂

  2. வாங்க சேது…
    நீக்ன்கள் அனுப்பிய போட்டி அறிவிப்பு கிடைத்தது…ரொம்ப நன்றி..

    (உண்மைய்யை சொல்லுங்க.. என் தமிழுக்கு,..இந்த போட்டியெல்லாம் தேவையா ..)

  3. கவிதைப் போட்டி அறிவிப்பை உங்க பதிவில் போட்டதுக்கு நன்றி 🙂

    உங்க பதிவை ஏதாவது மாயக்கண்ணாடி போட்டுப் படிக்கணுமா? ஒண்ணுமே தெரியமாட்டேங்குதே 🙁 Ctrl+A அழுத்தினா தான் தெரியுது!

  4. வாங்க சேது…
    அச்சோ…நான் backggroud picture மாத்தினது செரியா இல்லைன்னு பாலா கூட சொன்னார்.. ஹ்ம்ம்.. நேரமே கிடைக்கலை…இன்னிக்கை கண்டிப்பா செரிபண்ணறேன் ..:)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *