Microwave ன் சுயசரிதை — பாகம் 3

வாங்க நேயர்களே.>:D< ..வணக்கம்..நலமா..எல்லாரும் அவுங்க-அவுங்க இடத்திலே சத்தம் போடாம உட்காருங்க..நோட்டு - பேனா எல்லாம் மறக்காம் கொண்டுவந்திருக்கீஙகில்லையா..அப்புறம் பாதி பாடம் நடக்கிரப்போ...குசு-குசு ன்னு பேசகூடாது..என்ன...செரி.. வகுப்பை ஆரம்பிக்க்லாமா..... நான் பிறந்த கதை மற்றும் நான் எப்படி இயங்குவதால் உங்கள் (சமையல்) வேலை சுலபமாகிறதுன்னு கடந்த இரண்டு பதிவிலெயும் பார்த்தோம்…இப்போ…என்னை உபயோக படுத்தி சமைப்பதாக இருந்தால்….ஏன் சில பிரத்தியேக பாத்திரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்…இதுகுக்கு விதி-விலக்கே கிடையாதா..படா-பேஜாராப் போச்சுப்பா.#-O..ன்னு நீங்க சொல்லுவது எனக்கு கேட்டாலும்….இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் .இவ்வளவுகு அடம் பிடிக்க காரணம் என்னகிறதை உங்களுக்கு சொல்லப்போறேன்.

உணவில் இருக்கும் நீர் – கொழுப்பு மற்றும் சக்கரையின் பரமாணுக்கள்… வான்லைகளை உறிஞ்சுவதின் காரணமாக நடக்கும் போட்டா-போட்டியில் வெப்பம் உர்பத்தியாகும் ன்னு நான் சொன்னது உங்களுக்கு நினைவிருக்கலாம் (The collision of molecules will generate heat)..இங்கே நீங்க ஒரு விஷய்த்தை யோசிக்கணும்..

இந்த வானலைகள் (உணவு வைத்திருக்கும் ) பாத்திரத்தை ஊடுருவிச்சென்று தான் உணவை வந்தடைகிறது .. அப்போ.. வானலைகள் நேரடியக பாத்திரத்தை (பாத்திரம் செய்ய உபயோக படுத்தியிருக்கும் பொருளை) தாக்காவிட்டாலும்… உணவு சூடாகும்போது.. .உணவிலிருந்து வெப்பம் பாத்திரத்திர்க்கு ஊடுகடத்தப்படுகிறது (Heat is conducted from the food to the container)

இப்படி எனக்குள்ளே வெப்பம் அதிகமாகும்போது (உணவை பக்குவ படுத்த இந்த வெப்பம் மிக அவசியம் ) சில பிரயத்தேக பொருள்களால் செய்த பாத்திரத்தால் மட்டுமே.. தனக்கும் பாதகமில்லாமல் – உணவுக்கும் பாதகமில்லாமல் – ஏனக்கும் (என்னுள்ளே இருக்கும் வானலைகளுக்கும் ) சாதகமாக் செயல்படமுடியும் .. அப்பிடிபட்ட பாத்திரங்களை தான் Microwave Safe Containers ன்னு சொல்கிறோம்

எவையெல்லாம் Microwave Safe Containers ? ?

குத்துமதிப்பா சொல்லணும்ன்னா… பீங்காண் – Plastic – கண்ணாடி பாத்திரம்… இவைகளில் எதுக்கெல்லாம் ”
Microwave Safe ( மைக்றோவேவ் பாதுகாப்புடன் ), Microwave cookware (மைக்றோவேவில் சமைக்க பயன்படுத்தக்கூடிய பாத்திரம்) , One time Microwave only (ஓரே ஒரு முறை மட்டுமே மைக்றோவேவில் பயன்படுத்தவும்)..
ன்னு முத்திரை இருக்கோ..

அவையெல்லாம்
தயக்கமே இல்லாமல் microwave ல் பயன்படுத்தலாம்..படத்தை பார்த்தால் இன்னும் செரியாக புரியும்…ஆனால்.. எப்போ பாத்திரத்திலே முத்திரை இல்லையோ… எக்காரணம் கொண்டும்.. அவைகளை microwave ல் பயன்படுத்த கூடவே கூடாது அப்பிடி மீறி பயன்படுத்தினால்..

உணவுக்கும் – போருளுக்கும் ( Microwave என்ன விலை கொடுத்து வாங்கினீங்க..ஞ்யாபகம் இருக்கா 😕 ) சேதாரம் நிச்சயமாக உண்டு… இது தேவையா உங்களுக்கு…

ஏன் சில பொருள்களால் செய்த பாத்திரங்கள் மட்டும் நமக்கு சாதகமா இருக்கு…மத்ததெல்லாம் ஏன் எப்படி நம்ம உயிரை வாங்குதுங்கிரதை அடுத்த பதிவிலே பார்க்கலாம்.

பாகம்-4 . . .

3 Replies to “Microwave ன் சுயசரிதை — பாகம் 3”

  1. வாங்க சேது..
    தவறாம எல்லா வகுப்புக்கும் வெரீங்க… Class Monitor பதவி உங்களுக்கே..

  2. செம அறிவியல் பதிவு எல்லாம் போடறிங்க!!
    வாழ்த்துக்கள்!!

    உங்களிடம் உள்ள விசித்திரமான விஷயங்கள் ஐந்தை பற்றி எழுதுங்க்ளேன்!!!

    I have tagged you!! 🙂
    http://cvrintamil.blogspot.com/2007/03/blog-post_4653.html

    Sorry!! 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *