சென்னை-28″ ரிலீஸ் ஆனவுடனே பார்க்கணும் ன்னு அப்பிடி ஒரு வெறி…( உபயம்:- தமிழ்நாட்டு தோஸ்த்ஸ்)…பெங்களூர்லே ஹவுஸ்புல்லா ஓடர இன்னொரு படம் “முங்காரு-மலே” (mungaaru – male)..அதாவது “Pre-monsoon Showers”.இதுக்கும் ரொம்ப நாளா ட்ரை பண்ணிகிட்டு இருந்தோம்..எங்களுக்கு ஒரு தடவை பார்க்கவே டிக்கெட் கிடைக்கலை..எப்படி கிடைக்கும்..அவன்-அவன்..இதை 2-3 வாட்ட ஜோடி-ஜோடியா பார்க்க வறாங்க…
9.00 am லிருந்து லைன்லே நின்னு ( phone-line தான்.. நம்மால அங்க போய் Line லெ நிக்கமுடியாது).. ஒருவழியா 9.45 க்கு டிக்கெட் கேட்டா,. எங்க நேரம்.. ரெண்டு படத்துக்கும் ஒரே நாள் டிக்கெட் இருக்குன்னு போன் எடுத்த பரதேவதை சொன்னப்போ..கண்ணு இருண்டு போச்சு… தாய்மொழிக்கு முன்னுரிமை குடுத்து “சென்னை-28” க்கு புக் பண்ணரதா.? ? ?.. இல்லை.. நமக்கு புவா கொடுக்கும் மொழிக்கு விசுவாசமா இருந்து Mungaru-Male க்கு புக் பண்ணரதா…?
இதெல்லாம்… phone லே இருக்கும் புண்யவதிக்கு எங்கே தெரியுது…'””மேடம்.. சீக்கிரம் சொல்லுங்க..எதுக்கு புக் பண்ண.. எனக்கு வேறேயும் call-waiting இருக்கு… சொல்லமுடியாதுன்னா.. வீட்டுலே discuss பண்ணி அப்புறமா போன் பண்ணுங்க “””..ன்னு சொல்லறா..45 நிமிஷம் கை வலிக்க லைன்லே நின்னிருக்கேன்.. மறுபடியும் call பண்ணணுமா.. நினைச்சாலே கை-வலிக்குது.
அப்பிடி-இப்பிடி timings விசாரிச்சப்போ கொஞ்சம் சமாதானம் ஆச்சு ஏன்னா.. மத்தியானம் 1.05 show க்கு “”சென்னை-28 “” ம்… சாய்ங்காலம் 4.30 show க்கு “”Mungaru-Male”” கும் டிகெட் எடுத்தாச்சு.. “”””அய்யோ.. தீபா… நீ பதிவெழுத ஆரம்பிச்சதிலெயிருந்து எங்க்ளுக்கு வேலை பளு ஜாஸ்தி..இதுலெ ஒரே நாள் ரெண்டு சினிமாவா…ஆத்தா..கொஞ்சம் கருணை காட்டு..” ன்னு…என் ரெண்டு கண்களும் கதற கதற சொல்லரது மாதிரி ஒரு பிரம்மை… ஒருவேளை கண்ணுக்கு வாயிருந்தா இப்படி தான் சொல்லியிருக்குமோ..:-?
வீட்டுலே இதை சொன்னப்போ.. முதல்லே ஷோக்கானாங்க.. அப்புரம்.. டிகெட் கிடைச்ச சந்தோஷத்துல.. ஷோக் மறந்து போச்சு.ஒரே நாள் ரெண்டு படம் பார்க்கறோம்ன்னு கொஞ்சம் கூட நாங்க வருத்தபடலை…
கால்-மேலே-கால் போட்டு.. டாப்-10 பாணியில் படிக்கவும்…….”சென்னை- 28″ .ரொம்பவே சூப்பர்.. இன்னொரு முறை டிகெட் கிடைச்சா…கண்டிப்பா பார்க்கலாம்.. மேலும் இந்த படத்தை நிறையபேர் விமர்சனம் பண்ணிட்டதால .. அடுத்த படமான ” Mungaru-Male” யை குறித்து பேசலாம்”””….பேருக்கு ஏத்த மாதிரி Pre-Monsoon showers ( …இதுக்கு தமிழில் என்னு சொன்னா தெரிஞ்சுக்கறேன்).. சூப்பர் இல்லைன்னாலும் நல்லாவே இருந்தது…அப்புறம் ஏன் housefull ன்னு தானே கேக்கரீங்க.. இது பாட்டுக்காகவே ஹிட்டான படம்…. கன்னடம் புரியும்ன்னா… கண்டிப்பா.. உங்களுக்கு இந்த படத்திலே இருக்கும் பாட்டு எல்லாமே பிடிக்கும்… ட்மால்-டுமீல்ன்னு drums எக்கச்சக்கமா இல்லாம.. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும்போது மழையிலே நனைஞ்சு வந்த சுகம்…Mungaru-Male:::மழை…..
இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு… “anisuthide”” (எண்ணுகிறேன்..) இதை கேட்டதும் Mohd.Rafi பாடிய तॆरी..आनखॊं के सिवाय .. दुनिया में रखा क्या हैं.. கேட்ட ஒரு effect.. என்னடா.. தமிழ் பதிவிலெ கன்னடம் – ஹிந்தி பாட்டை சொல்லெறேனேன்னு தானே யொசிக்கரீங்க..நான் அதிகம் தமிழ் பாட்டேல்லாம் கேட்டதில்லை.. கேட்க வாய்ப்பு கிடைக்கலைன்னுகூட சொல்லாம். இந்த Anisuthide பாட்டை கேளுங்க…( கன்ண்டம் தெரிஞ்ச நண்பர்கள் இருந்தா word-to-word..meaning கேட்டு தெரிஞ்சுக்கோங்க).. இதே மாதிரி தமிழில் எந்த mood-song உங்களுக்கு நினைவுக்கு வருதுன்னு சொல்லுவீங்களா… கேக்கணும்ன்னு ஆசையா இருக்கு
ஒரே நாள் ரெண்டு படம் பார்க்கறோம்ன்னு கொஞ்சம் கூட நாங்க வருத்தபடலை…
வாங்க தீவு..
டிவி லே நாள் பூரா எதாவது பார்த்துகிட்டே இருப்போம்.. அப்பொ எல்லாம் guilt வராது.. ஆனா காசு குடுத்து ஒரே நாள் 2 படம் பார்த்தோம் ன்னு யோசிக்கும் போது.. ஒரு சின்ன நெருடல்.. அவ்வளவுதான்.. ஆனா 2 படமும் நல்லா இருந்துது… நெருடல்க்கு மேலே onitment போட்ட மாதிரி
போன வாரம் நான் கோயம்புத்தூர்ல சென்னை 28 யை ஒரே நாளில் இரண்டு தடவை பார்த்தேன். நல்ல படம்.
வாங்க வினையூக்கி..
நானாவது ஒரே நாள்லே 2 வேறே வேறே படம் பார்த்தேன்… நீங்க இன்னும் சூப்பர்.. ஒரே நாளிலே 2 தடவை ஒரே படத்தை பார்திருக்கீங்க.. பேஷ்-பேஷ்..
கொஞ்சம் கூட்டம் கம்மியானப்புறம் ஷெனை-28 இன்னொரு முறை பார்க்கலாம்ன்னு இங்கே கொஞ்சம் பேர் காத்துகிட்டிருக்கோம்
ஒரு போஸ்ட்ல எத்தனை மொழி…. ஹேராம் பாத்தாப்பல இருக்கு
உங்களுக்கு டிக்கெட் கிடைச்சிருச்சா.. நற..நற..
நமக்கு மட்டும் தான் கிடைக்கவே மாட்டேங்குதா.. இதுல இன்னையில இருந்து ஒரு ஷோ தானாம்
வாங்க பிரகாஷ்..
ஏதொ.. உங்களை மாதிரி படிக்கிறவங்களுக்கு பிடிச்சா சரிதான்
கொங்கு ராசா..
வாங்க..
அச்சோ.. பாவம் டிகெட் கிடைக்கலையா.. அழுத பிள்ளைக்கு தான் பால்.. லைன்லே ( நிஜ லைன் ஆகட்டும்.. போன் லைன் ஆகட்டும்) முந்திகிட்டவனுக்கு தான் டிக்கெட்..
சீக்கிரம் டிகெட் எடுத்து படம் பார்க்கர வழியை பாருங்க.. நான் இன்னும் 2-3 தடவை இதே படத்தை ( சென்னை-28) பார்க்கணும்ன்னு இருக்கேன்
சிவாஜி நடித்த இருவர் உள்ளம் திரைப்படத்தினை நான் என் தாய்மாமா மற்றும் பாட்டியுடனும் மதியக்காட்சி பார்த்துவிட்டுத் திரும்பிவருகையில் அம்மாவும் அண்ணனும் எம் ஜி ஆர் நடித்த கலை அரசி திரைப்படத்தின் மாலைக்காட்சி பார்க்கச் சென்றுகொண்டிருந்தனர். அப்போதே அவர்களுடன் சேர்ந்துகொண்டு அன்று இரண்டு திரைப்படங்களைப் பார்த்தது நினைவிற்கு வந்தது. அண்ணன் மகள்கள் அடிக்கடி இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சொல்லி என்னைக் காமடி கீமடி செய்து கொண்டிருப்பார்கள்.
:-)))
வாங்க தமிழ்
அப்போ நீங்க எனக்கு சீனியர்.. அதுக்கு ஒரு சலாம்..
//////////////////இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சொல்லி என்னைக் காமடி கீமடி செய்து கொண்டிருப்பார்கள்////////////
சொலுங்க.. என்னை மாதிரி இன்னும் சில-பல பேர் இருக்காங்கன்னு..ஹீ ஹீ
/இன்னொரு முறை டிகெட் கிடைச்சா…கண்டிப்பா பார்க்கலாம்./
ஓசிலயா
/Pre-Monsoon showers ( …இதுக்கு தமிழில் என்னு சொன்னா தெரிஞ்சுக்கறேன்)/
பருவநிலைக்கு தப்பிய மழை இல்லனா பருவம் முந்திய மழை
கன்னட படம் பார்க்கிற அளவுக்கு தைரியசாலியா நீங்க அதுவும் தியேட்டர்ல போய்
வாங்க அய்யனார்..
ஓசி டிகெடெல்லாம் இல்லை.. உருப்படியா 4 ஷோ இருக்கும் போதே டிகெட்டுக்கு லோல் பட்டாச்சு.. கொங்கு ராச சொன்ன மாதிரி இனிமே ஒரு ஷோ தான்..அவரை போல் பார்க்காத்தவ்ங்களுக்கு டிகேட் கிடைக்கட்டும்.. அப்புறம் பாருங்க bulk booking தான்.. என்ன.. இன்னும் நான் PVR லெ பிளாக்லெ டிகேட் வித்து..யாரெயும் பார்க்கலை
/////////////////கன்னட படம் பார்க்கிற அளவுக்கு தைரியசாலியா நீங்க அதுவும் தியேட்டர்ல போய் /////////
நான் கன்னடம் நல்லாவே பேசுவேன்.. எழுத்துக்கூட்டி படிப்பேன்.. ஒரு ஜோக் படிக்க 30 நிமிஷம் ஆகும்கிரது வேறே விஷயம்
இரண்டு படங்கள். ஒரு நாள். ஒரு பதிவு. இதுவரை 12 பின்னூட்டங்கள்.
முங்காரு மளே…கோடைமழைன்னு சொல்லலாமா? தெரியலையே…பருவம் முந்திய மழை…அட…அதான கோடைமழை. மிகவும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படம். பெங்களூரில் இருந்திருந்தால் பார்த்திருப்பேன். இண்டர்நெட்டில் இருக்கும் என்று நினைக்கிறேன். பார்க்க வேண்டும்.
பாடல்….சோனு நிகாம் பாடியிருக்கிறார். உணர்ச்சிகளைக் கொட்டிய அளவிற்கு உச்சரிப்பில் கவனமில்லை. ஆனால் உதித் நாராயணன் அளவுக்கு மோசமில்லை.
தமிழில் காதல் கோட்டை படத்தின் டைட்டில் பாடல் காதலே நிம்மதி என்ற பாடலைப் போல இருக்கிறது இந்தப் பாடல்.
ம்ம்.அப்போ மண்ணின் மைந்தி தான் நீங்க ஒரு வார்த்தை கூட படிக்கமுடியாத அளவுக்கு கடினம் அம்மொழி நீங்க ஜோக் படிப்பதெல்லம் பெரிய மேட்டர் தான்
அட pvr ஆ இந்த முறை இந்தியா வந்தப்போ அங்கதான் blood diamond பார்த்தேன் நல்ல தியேட்டர் இல்ல
சொல்ல மறந்திட்டேன் உங்க பதிவிலிருந்துதான் என் பக்கத்தில ஸ்மைலி சேர்த்தேன் நன்றி சொல்லனும் நினைச்சேன் மறந்திடுச்சி நல்லவேளை இப்ப சொல்லிக்கிறேன் நன்றி
:))
வாங்க ராகவன்..
////////முங்காரு மளே…கோடைமழைன்னு சொல்லலாமா? ///////.. அப்போ PreMonsoon Showers == Summer showers ..அப்பிடியா? ? ?
//////////////உணர்ச்சிகளைக் கொட்டிய அளவிற்கு உச்சரிப்பில் கவனமில்லை///////////////
Mohd.Rafi க்கு அப்புரம்.. குறலில் sensuality இவரிடம் தான் பார்க்கிறேன்
///////தமிழில் காதல் கோட்டை படத்தின் டைட்டில் பாடல் காதலே நிம்மதி என்ற பாடலைப் போல இருக்கிறது இந்தப் பாடல்///////////
கேட்ட கேள்விக்கு நீங்க தான் ஒழுங்கா பதில் சொல்லியிருக்கீங்க… அனேகமா காலேஜிலே உங்க notes தான் circulation லெ இருக்கா ? ? ?
அய்யனார்..கன்னடம் கத்துக்கிரதொண்ணும் கஷ்டமில்லை… Learn kannada in 30 days தான் எனக்கு உதவியது… 30 நாளெல்லாம் இல்லை.. கிட்ட-தட்ட 6 மாஸமாச்சு.. அப்புறம் நான் கன்னடம் கற்றுக்கொள ரொம்ப உதவியவர்கள் …இங்கிருக்கும் ஆட்டோஸ்.. signal-to-signal போகிறத்துக்குள்ளே.. ஆட்டோ பின்னாலிருக்கும் வாக்கியத்தில் ஒரு சொல்லை எப்பிடியாவது படிச்சிடுவேன்
Simleys உங்களுக்கு நல்லா வேலை செய்யுய்து…ரொம்ப சந்தோஷம்
// வாங்க ராகவன்..
////////முங்காரு மளே…கோடைமழைன்னு சொல்லலாமா? ///////.. அப்போ PreMonsoon Showers == Summer showers ..அப்பிடியா? ? ? //
அப்படியல்ல. கோடையில் வரும் மழை என்பது பருவமழையல்ல. அதற்கு முன்னாடியே வந்து லேசா ஊத்தீட்டுப் போயிரும். அது தொடராது. அதே பொருளைத்தான் முங்காரு மளேயும் தருகிறது. பருவத்தில் வரும் மழைதான் தொடரும். பருவத்திற்கு முந்தியோ பிந்தியோ வந்தால் அது தொடராது. அப்படியே வரிக்கு வரி மொழிமாற்றம் செய்தால் அசிங்கமாக இருக்கும். என்ன சொல்ல வருகின்றார்கள் என்று புரிந்து கொண்டு அதை நமது மொழியில் கொண்டு வருதல் எளிது.
//////////////உணர்ச்சிகளைக் கொட்டிய அளவிற்கு உச்சரிப்பில் கவனமில்லை///////////////
Mohd.Rafi க்கு அப்புரம்.. குறலில் sensuality இவரிடம் தான் பார்க்கிறேன் //
நன்றாகச் செய்கிறார். பொதுவாக வங்காளப் பாடகர்கள் எல்லாருமே முழு ஈடுபாட்டோடு பாடுகின்றார்கள். ஷ்ரேயா கோஷலை எடுத்துக் கொள்ளுங்கள். அவரும் அப்படித்தான். அருமையாகப் பாடுகிறார். உதித் நாராயணன் தமிழை உதிர்த்து விட்டுப் போவார். அவருக்கு உதிர்த்த நாராயணன் என்றே பெயர் வைத்திருக்கலாம்.
/////////தமிழில் காதல் கோட்டை படத்தின் டைட்டில் பாடல் காதலே நிம்மதி என்ற பாடலைப் போல இருக்கிறது இந்தப் பாடல்///////////
கேட்ட கேள்விக்கு நீங்க தான் ஒழுங்கா பதில் சொல்லியிருக்கீங்க… அனேகமா காலேஜிலே உங்க notes தான் circulation லெ இருக்கா ? ? ? ////
ஆகா! இதெப்படித் தெரியும்? இருந்துச்சு. படிக்கும் போது நீங்க சொன்னது போலத்தான் இருந்தது. பெரிய நோட்டுகளை வாங்கி வெச்சு….வீட்டுல உக்காந்து அந்த அந்த சப்ஜெக்ட்டுகளை நான் புரிஞ்சுக்கிட்டு எனக்குப் புரிஞ்ச மாதிரி எழுதி வெச்சிருப்பேன். கலர்கலரா படமெல்லாம் போட்டிருப்பேன். அது ஜெராக்ஸ் கடைக்கு எல்லாரும் கொண்டு போவாங்க. ஆமா! அந்த நோட்டுகள் எங்க?
பருவத்திற்கு முந்தைய தூறல் (சாறல்)
பருவம் தப்பிய தூறல் (சாறல்)
கதைக்கு ஏற்ப எது பொருந்தும்?
(கவணம்: தூறல் என்பதற்கு மலையாளத்தில் வேறு பொருள்)
////////உதிர்த்த நாராயணன் என்றே பெயர் வைத்திருக்கலாம்.//////////
ரொம்ப சரி
/////////அந்த நோட்டுகள் எங்க?/////
ஏதொ ஒரு ஜூனியர் உங்களை வாழ்த்திகொண்டிருப்பார்
வாங்க சிவா…
தமிழ் பதிவிலே..தமிழ் வார்த்தைகளுக்கு மலயாள அர்த்தம் தேடமாட்டாங்கன்னு ஒரு நம்பிக்கை தான்…ஹீ..ஹீ
விரும்புகிறேன் – வெளியான முதல் நாளே இரண்டு முறை திரையரங்கில் பார்த்து இருக்கிறேன்.
கல்லூரி நாட்களில் ஒரே நாளில் double attack, triple attack எல்லாம் சகஜம்..அது குப்பை படமாகவே இருந்தாலும்..
Mungaaru male poster paathavudane enaku eerpu..en friendsta evlovo solli pathen padam nalla irukumnu..oruthanum thayaara illai..thani manushana ticket vangi paathutomla..ippa, en friends ellarum anisudhu paatu kekraanunga..
வாங்க ரவி..
தாமதமானதுக்கு sorry..
அப்போ என்னை விட நீங்க சீனியர்… அதுக்கு ஒரு சலாம்..
வாங்க சரவணன்
அமாம்.. அனிசுத்திதே.. ஒரு haunting tune … எனக்கு முழு பாட்டும் அத்துபடி.. சோனு ( நிகம்) கூட நானும் முணுமுணுப்பதுண்டு… word-to-word நான் இந்த பாட்டை ரசிப்பேன்.. இதுக்கு lyrics எழுதியவருக்கு என்ன ஒரு கற்ப்பனை.. ஆஹா… நினைக்கும்போதெல்லாம் பிரமிப்பா இருக்கு