நாங்க டூர் போனப்போ நிறைய படங்களை க்ளிக்கினேன்..அதில் நான் நல்லாருக்குன்னு நினைச்சதை உங்கள் பார்வைக்கு புகைப்பட பிளாகில் வெச்சிருக்கேன்.. இப்போ டிஜிடல் கேமேரா இருப்பதாலே.. filim வேஸ்டாயிடும்ன்னும் யோசிச்சு-யோசிச்சு க்ளிக் பண்ணரதெல்லாம் .. கனவு மாதிரி இருக்கு…
கண்ணுக்கு பிடித்த காட்சியை மானாவரியா க்ளிக்க வேண்டியது தான்..எது உத்தமமோ..அதை மட்டும் பத்திரப்படுத்தி (சி.டி லே பதிவு செஞ்சு) மத்ததெல்லாம் நீக்கவேண்டியது தான். டிஜிடல் கேமேறா வந்ததுலே..என்னை மாதிரி Trial-and error லே கத்துக்கிரவங்களுக்கு பொட்டோ-பிலிம் ஐ கரியாக்கறோமேன்னு நெருடல் இல்லாம க்ளிக்கலாம்
எல்லாரும் என்னோட Photo-Exibition க்கு வாங்க.. உங்க அபிப்பிராயத்தை மறக்காம சொல்லுங்க.
பூனையை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு தரலாம்.
நான் சுவர் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
வாங்க குமார்.. camera LCD screen லே இதே படத்தை காட்டி ..” இதுலே பூனை இருக்கு.. நான் சொல்லறேன்.. நீங்க நம்பணும்..””ன்னு சொல்லி சொல்லி ஒல்லியாயிட்டேன்..
கம்ப்யூடர் லே full screen லே பார்த்தப்போ தான் பூனையோட குர்ர்ர்.. தெளிவா தெரிஞ்சுது