அம்மா…மழைய்யை ரசிக்க வாயேன்

ரெண்டு நாளாவே இங்கே பங்களூர்லே மப்பும் பந்தாரமுமா இருக்கு. ராத்திரியெல்லாம் ஜோறா மழை கொட்டோக்கொட்டுன்னு கொட்டுது.. பகலெல்லாம் ஒரே சிலு-சிலுன்னு இருக்கு. வளரும் பருவத்தில் பல காலம் கேரளதுலே இருந்ததாலோ என்னமோ… நான் மழைய்யை ரொம்ப ரசிப்பேன்…

சின்ன வயசிலே கூட.. மழை வந்துடுச்சே.. விளையாட போக முடியாதேன்னு நான் வருத்தப்பட்டதேயில்லைன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.. ஜன்னலோரமா ஒரு ஸ்டூல் போட்டு.. ஏதாவது புத்தகம் ( அந்தந்த வயசுக்கு ஏத்தாப்போல… காமிக்ஸ் – Mills and Boons – Keats & Shelly யின் கவிதை – என் diary ) எடுத்துவச்சு கொஞ்சம் நேரம் படிப்பேன்… நிறைய நேரம் மழைய ரசிப்பேன். படிப்புக்கு முக்கியத்துவம் ஏற ஏற… மழைய்யை ரசிக்க Keats & Shelly யை பக்கத்திலே வச்சுக்க முடியலை… என் ரெகார்ட் நோட் … Harper’s BioChemistry… யெல்லாம் தான் என் மழைக்கால தோழிகள்…

பொதுவா எல்லாரும் சம்மர்லே அவரவர் டேபிள் – சேர் ஜன்னல் பக்கம் போட்டுக்குவாங்க.. நல்லா காத்துவரும்ன்னு.. மழை காலத்துலே இதெல்லாம் இடம் மாறும்… மேலே சாறலடிக்குமில்லையா… ஆனால் நான் மழைகாலத்திலே தான் ஜன்னல் பக்கமா என் கட்டில் – டேபிள் எல்லாம். ..ஏன்னா.. காத்துவாக்குலே பளிச்-பளிச்ன்னு மழைத் துளி முகத்திலே விழும்போது அப்படி ஒரு சுகம். இதிலே என்ன விசேஷம்ன்னா என் மனசறிஞ்சு எங்கம்மா மழை கொஞ்சம் பலக்க ஆரம்பிச்சதும் சுட-சுட இஞ்சி போட்ட டீ தருவாங்க. sip-by-sip..டீய்யை உறிஞ்சி உறிஞ்சி .. டீய்யை ருசிப்பதா..மழைய்யை ரசிப்பதான்னு ஒரு ஸ்வீட் கண்பூஷண். மத்தியான வேளையாயிருந்தா.. அம்மாவும் நானும் சேர்ந்தே மழைய்யை ரசிப்போம் . அப்படியே விட்டத்தை பார்த்து அதையெல்லாம் நினைச்சுபார்த்தா… இன்னமும் மனசுக்குள்ளே சில்ல்ல்ன்னு ஒரு பீலிங்க்.

இப்போ நமக்கு கடமைகள் நிறைய இருக்கு. முன்னே மாதிரி நினச்சப்போ நினைச்சதை செய்ய முடியரதில்லை. ஆனாலும் லைட்டா ஒரு சான்ஸ் கிடைச்சா நான் விடறதில்லே…லீவு நாளிலே விட்டுலே எல்லாரும் மத்தியானம் தூங்கும்போது.. நான் மட்டும் மாடியிலே பால்கணியில் உள்ள பெஞ்ச் மேலே உட்காந்து… உட்காந்து..ஹ்ம்ம்… ஆகாசத்தை ரசிக்கும் சுகம் இருக்கே… அப்பப்பொ.. கல்கியின் பொன்னியின் செல்வன் படிப்பேன் .. இந்த மாதிரி அனுபவம் உங்களுக்கு உண்டா ?. ..

அதுவும் இன்னிக்கி மாதிரி climate ன்னா கேக்கவே வேண்டாம்… இந்த climate ஐ இன்னும் இன்னும் ரசிக்கணும்ன்னு நான் என் கம்ப்யூடரை மாடிக்கு மாத்திட்டேன்… இப்போ எனக்கு கம்ப்யூடரை தட்டிகிட்டே weather ஐ ரசிக்கலாம்.. இந்த மாதிரி நேத்திலே தான் எனக்கு எங்கம்மா ஞயாபகம் ரொம்ப வரும். என் adolescent வயதில் என் அம்மா தான் எனக்கு best friend. நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம்… மழைகாலத்திலே இதெல்லாம் Flashback மாதிரி வரும்.. மனசுக்குள்ளே அதெல்லாம் நினைச்சு சிரிச்சு-சந்தோஷமா இருப்பேன்.. அப்போதான்.. அடடா.. இப்போ.. இந்த நிமிஷம் அம்மா நம்ம கூட இல்லையேன்னு வருத்தம் பொத்திகிட்டு வரும்.

வெளியிலே பெய்யும் மழை மனசிலிருந்து கண்ணீரா வரும்.. 10 நிமிஷம் அழுது.. அப்புறம் அம்மாக்கு போன் பண்ணி 30 நிமிஷம் பேசினா மனசு லேசாயிடும்.. அப்புறம் என்ன.. இதையே நினைச்சுகிட்டு இருக்க முடியா.. நமக்குன்னு கடமைகள் இருக்கிலையா…மழை அது பாட்டுக்கு பெய்யும்.. நாம நம்ம கடமைகளை பார்க்க வேண்டியது தான்

34 Replies to “அம்மா…மழைய்யை ரசிக்க வாயேன்”

  1. வாங்க சரவணன். தொடுவானத்துக்கு முதல் முறையா வந்திருக்கீங்க.. வாங்க..வாங்க..

    மழை ரசிக்க ரசிக்க அது நமக்குள்ளே பல பரிமாணங்க்ளை எடுத்துக் காட்டும்.. இல்லையா ? ?..
    பூனாவில் மழை இன்னேரம் வந்திருக்கணமே..!

  2. நல்ல எழுத்து நடை தீபா அவர்களே.

    //கம்ப்யூடரை மாடிக்கு மாத்திட்டேன்… இப்போ //

    பார்த்துங்க உணர்ச்சிவசபட்டு மொட்டை மாடிக்கு மாத்திட போறீங்க…

    சின்ன வயசுல .. மழை ரசிச்சிக்கிட்டே படிக்கிறேன் பேர்வழின்னு அறிவியல் புத்தகத்தை எடுத்துகிட்டு ஜன்னல் ஓரமா உட்கார்ந்து.. மழை ரசிப்பதில் புத்தகத்தை மறந்து .. மழை சாரலில் புத்தகம் முழுமையா நனைச்சு கிழிஞ்சு .. அப்புறம் அப்பா நல்ல டின் கட்டினது…… சரி அதை விடுங்க..

    நல்ல பதிவு..

    வீ எம்

  3. தீபா,

    ஆலங்கட்டி மழை வந்தால் அம்மாக்கு தெரியாமல் ஓடிப்போய் நனைந்துகொண்டே ஐஸ் பொறுக்குவேன்.

    பிறகு தான் ரொம்ப கண்ணியமாக தொலைவில் நின்று ரசிக்க ஆரம்பித்தேன், நனையாமல்!!

  4. வாங்க வீ.எம் .. வெல்கம்
    பாரட்டுக்கு டாங்ஸ் பா..

    //////உணர்ச்சிவசபட்டு மொட்டை மாடிக்கு மாத்திட போறீங்க/////// வீட்டுலே கூட இதே ரியாக்ஷன் தான்
    ..///அப்பா நல்ல டின் கட்டினது/// அச்சச்சோ.. அப்புறம் பரீஷைக்கு எப்படி படிச்சீங்க… மார்க் வந்தப்புரம் அப்பா தனியாவர்த்தனம் வாசிச்சாரா ? ? ?

  5. வாங்க குட்டிபிசாசு..
    எதிலெயுமே இன்வால்வாயி ரசிக்கரது.. ஒரு வயசு.. இல்லையா.. அப்புறம் நமக்கெல்லாம் அந்த வித்தை மறந்துபொயிடும்…

  6. மழை

    மணலோடு சேர்ந்து
    மனதும் கரையும் அற்புதம்..

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

  7. வாங்க மாயன்..
    வெலகம்
    எவ்வளவு சரியா சொல்லரீங்க..மழை பெய்யும்போது.. அதையே கவனிச்சுகிட்டு இருந்தோம்ன்னா.. நமக்குள்ளே ஏதோ ஒண்ணு மழைத்தண்ணியோட ஒழுகி பொவதுபோல் ஒரு உணார்வு..

  8. எட்டு விளையாட்டுக்கு ரெடியா? என்னோட லேட்டஸ்ட் பதிவை பாருங்க…உங்களை அழைச்சிருக்கேன்..

  9. நன்றி மாயன்..
    முயர்ச்சி செய்யறேன்.. ஆர்.டீ.ஓ க்கு ஏதாவது சம்திங் குடுக்கணும்ன்னா எனக்கு சொல்லிடுங்க.. ஏன்னா எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை.. நான் பாவம்

  10. என்னங்க டெக்னிக்கல் பதிவுல பதினொண்ணே போடறீங்க?… எட்டெல்லாம் உங்களுக்கு சாதாரணம்…

  11. மாயன்.. டெக்னிகல் பதிவெல்லாம் ஏஸி.. கொஞ்சம் R&D பண்ணினா போதும்..8 அப்படியில்லையே.. சுயமா – யோசிக்கணுமே..அதான்.. ஹீ..ஹீ..

  12. மழை பெய்துக்கொண்டு இருக்கும் பொழுது டிரைனிலோ அல்லது பஸ்ஸிலோ பயணம் செய்ய
    நேர்ந்தால் ஒரு ரூபாய்க்கு வேகவைத்த கடலை ஆவி பறக்க…பின் சன்னல் ஓர இருக்கை லேசாக திறந்து வைத்துக்கொண்டு சாரலின் நனைந்த படி
    கடலையை கொறித்துக்கொண்டு மழையை ரசிப்பது என்றால் ..சுகம் சுகம் சுகம்..

  13. குசும்பன்..
    முதல் முறையா வந்திருக்கீங்க.. வாங்க..வாங்க
    ..ஆஹா.. என்ன அருமையா இருக்கு உங்க அனுபவம்…வாய்ப்பு கிடைச்சா நானும் இதை ஞ்யாபகம் வச்சு ரசிக்கறேன்

  14. Deepa: Rain brings us the childhood inside us either to play in water or just sit and watch. I used to leave paper boats as akid and love to get drenched.

    Nothing like eating hot spicy vada and yummy samosa or bonda with tea when it rains.

  15. So truly said priya..
    the samosa/ pakodas tasetes better it we are being served.. not that you take in all the fumes in the kitchen preparing pakodas while its raining outside .. by the time you set them in your plate and reach the balacony.. the rain is mostly reduced to a scatterd drizzle

  16. இன்னிக்கு தான் உங்க பதிவுகளைப் பார்த்தேன். எம்மாடி….கவிதெ போடறீங்க…(அதுவும் இங்கிலிபிஸுல), போட்டா பிடிச்சு போடறீங்க….இது எப்படி வேலை செய்யுது அது எப்படி வேலை செய்யுதுன்னு வேற பிரிச்சி மேயறீங்க…

    அடேய் எங்கப்பா…கலக்கறீங்க..யெக்கோவ்…

  17. டுபுக்கு…
    ஹீ..ஹீ.. என்னை ரொம்ப தான் புகழ்ரீங்க..
    (Jokes apart ) ரொம்ப நன்றி.. கையிலே நேரம் இருக்கும் போது டி.வி “மட்டுமே” பார்க்கிரது ஒரு criminal waste of time ன்னு நினைக்கிரவ நான்… ]
    அதான் நீங்க பார்த்த – படிச்ச்ச பதிவுகள் போட காரணா இருந்துது

  18. வணக்கம்
    உங்களது இந்தப் பதிவு இந்த வார பூங்கா இதழுக்கான தமிழ்மண வாசிப்பில் என்னை கவர்ந்த பதிவுகளில் ஒன்றாக தெரிவுசெய்துள்ளேன்.
    பாராட்டுக்களுடன் மேலும் எழுத வாழ்த்துக்கள்.

  19. வாங்க சந்திரவதனா.. ( எவ்வளவு அருமையான பெயர்.. நிஜ பெயரோ – புனை பெயரோ ? ? )

    பாரட்டுக்கு நன்றி.. உங்க பதிவை படிச்சேன்.. மழையை பார்த்து ரசிக்கிரதுக்கு முன்னாடி.. அதில் சொட்ட-சொட்ட நனைவது ரசனையின் முதல் கட்டம்.. அதை ரொம்ப அருமயா சொல்லியுருக்கீங்க

  20. வாங்க சுரதா..
    ரொம்ப நன்றி.. ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுலே எழுத ஆரம்பிச்சது.. இப்பொ பூங்கா மாதிரி magazine லே வரணும்ன்னா அது உங்கலை மாதிரி உள்ளவர்களின் பாரட்டு / ஊக்கம் தான் காரணம்
    நன்றி

  21. மழை என்பது எனக்கும் பிடித்த விஷயமாகத்தான் இருந்து வந்தது; எனக்கு சின்னவயசில் அடிக்கடி, breathing trouble வருவதால், மழைக்கு பயப்படவேண்டிய கட்டாயம். இருந்தாலும், நம்ம சினிமா இயக்குனர்கள் கண்டதுக்கும் மழையை misuse பண்ணினதாலேயே எனக்கும் இந்த மழை மீது இருந்த கொஞ்சநஞ்ச மோகமும் போயி, ஐயா சாமி விட்டாப்போதுமினு ஆயிடுச்சி.

    இந்த மழை abuseற்கு மணிரத்தனமாக இருக்கட்டும், கௌதம் மேனனாக இருக்கட்டும் எல்லாருமே குற்றவாளிகள்தான்.

    மழை பாடல்களிலேயே எனக்குப் பிடித்த பாடல்…’புத்தன் ஏசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக… தோழா ஏழை நமக்காக’…MGR பாடல்..சந்திரோதயம் பாடமா?

  22. வாங்க Prince
    ***எனக்கு சின்னவயசில் அடிக்கடி, breathing trouble வருவதால், மழைக்கு பயப்படவேண்டிய கட்டாயம்**
    அடடடா..குழந்தை பருவத்தில் விளயாட முடியாதுன்னு ஒரு கட்டம் வரும்போது.. ரொம்ப கொடுமை.. மத்த பசங்க விளையாடும் போது.. இந்த பிள்ளை மட்டும் முகம் வாடியிருக்கும்..
    *****கண்டதுக்கும் மழையை misuse பண்ணினதாலேயே எனக்கும் இந்த மழை மீது இருந்த கொஞ்சநஞ்ச மோகமும் போயி*****
    (on a lighter note).. சீசீ.. இந்த பழம் புளைக்கும் மாதிரியா??

  23. Really nice work,
    I wounder how you arew managing these blogs.

    your writing style is too good and claver

    KEEP IT UP

  24. Arun
    Welcome
    thank your for the appreciation..
    Human mind is a wonderful thing.. All we nede to do is listen inward..
    Good luck with blogging

  25. நல்லா எழுதியிருக்கீங்க. பழைய நினைவுகள் அசைபோடச் செய்தமைக்கு நன்றி.

    //.. இந்த மாதிரி அனுபவம் உங்களுக்கு உண்டா ?. .. /

    மழை பிடிக்காத குழந்தைகளும் உண்டா? என்ன?

    மழை காலத்துக்ககென்றே வீட்டில் சேமித்து வைத்து, அம்மா வருத்துத் தரும் கடலையை, சகோதர சகோதரிகளுடன், குடும்பமே கும்பலாய் உட்கார்நது, (சில நேரங்களில் உறவினர்களும்) அரட்டையும், பாட்டும் கதையுமாக கொறிக்கும் சுகமே தனி.
    “டேய்! கடலை சாப்பிட்டு விட்டு கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை (அல்லது வெல்லம்) சாப்பிட்டிடுறா!” என்று அம்மா துரத்தித் துரத்தி தருவதும்
    ‘போம்மா! டேஸ்ட் மாறிடும்’ என்று சாப்பிடாமல் அடம் பிடிப்பதும்

    இப்போதும் மன அழுத்தங்கள் வரும்போது, அதை விட்டு நீங்க, இவையெல்லாம் மனதினின்றும் நீங்கா குழவிப் பருவம்.

  26. தீபா அக்கா

    மலரும் நினைவுகள் மழையுடன் அழகாக எழுதியிருக்கிங்க ;))

    \\\\இந்த மாதிரி நேத்திலே தான் எனக்கு எங்கம்மா ஞயாபகம் ரொம்ப வரும்\\

    ம்ம்…உங்க பதிவை படிச்சவுடன் எனக்கும் அம்மா ஞாபகம் வந்துடுச்சி

  27. தீபா

    மழையில நனையிறது பிடிச்ச ஒன்னா இருந்தாலும், வேனும்னே மழையில நின்னு நனைய விடமாட்டாங்க
    wheezing பிரச்சனை இருந்ததுனால
    இங்க இந்த ஞாயிறு நல்ல மழை தீபா… 3 மாசமா வாட்டி எடுத்த வெயிலின் கொடுமையினால, பால்கனியில ஒரு சேர் போட்டு உக்கார்ந்துட்டேன்…பக்கத்து ஃபிளாட்ல
    இருந்தவுங்க எல்லாம் ஒரு மாதிரி பார்த்தாங்க…நமக்கு என்ன அது பத்தி கவலை

    என்சாய்ய்ய்ய்ய்..:-)))

    ரொம்ப நல்லா இருக்கு

  28. வாங்க சுல்தான்..
    பாராட்டுக்கு நன்றி
    உங்க அனுபவம் ரொம்ப அருமை..
    //அதை விட்டு நீங்க, இவையெல்லாம் மனதினின்றும் நீங்கா குழவிப் பருவம்///
    .. அது தானே மழையின் தன்மையும் கூட

  29. கோபிநாத்..
    வாங்க.. சில நேரத்திலே அம்மா நம்மிடையே omnipresent ( இதுக்கு தமிழிலே என்ன சொல்லன்னு எனக்கு தெரியாது) மாதிரி இருப்பாங்கயில்லையா

  30. வாங்க மங்கை..
    ///பால்கனியில ஒரு சேர் போட்டு உக்கார்ந்துட்டேன்…பக்கத்து ஃபிளாட்ல
    இருந்தவுங்க எல்லாம் ஒரு மாதிரி பார்த்தாங்க////
    சுத்த ரசனையே இல்லாத்த _____ ( சென்சார்ட்..).. எனக்கு மழையிலே நனஞ்சு கிட்டே குச்சி ஐஸ் சாப்பிடணும்ன்னு ஆசை.. இன்னும் அதுக்கு தான் வேளை வரலை…எல்லாரும் கப்-ஐஸ் .. cornetto ன்னு இருக்காங்க.. குச்சி ஐச் பார்க்க கூட கிடைக்கமாட்டேங்குது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *