எட்டி பார்த்து போட்ட எட்டு

போன வாரம் மாயன் என்னை இந்த எட்டு விளையாடுக்கு அழைத்தார்....ரொம்ப நன்றி மாயன் :-s அப்போலிருந்து அடுத்தவங்க எட்டு-பதிவை எட்டிப்பார்க்க ஆரம்பிச்சது தான்.. இன்னிக்கிதான் ஒருவழியா முடிஞ்சுது..எட்டி-எட்டி எட்டை பார்த்ததாலே என்னமோ.. ஒரே கழுத்து வலி.ஸோ..நான் என் எட்டை சுருக்கமா முடிச்சுக்கறேன்.. உங்க எட்டு..என் எட்டுக்குள்ளே இருக்கான்னு..ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போங்க.

8 நாட்களுக்கப்புறம் இந்த பதிவை போடறேன்..
8 ஐ க்ளிக்கி உங்க பெயரை தேடவும்

Are you here ? ?

என் எட்டுலே நீங்க இருந்தீங்கன்னா..பின்னூடத்திலே..ஒரு வணக்கம் சொல்லரது…அடடா..உங்க பெயர் இல்லையா..”ஏன் தீபா என் எட்டை இதிலே சேர்க்கலைன்னு எனக்கு டோஸ் விடாம.. பறவாயில்லை..உன்னை மன்னித்தேன்னு மறுமொழியிலே சொல்லலாமே … .. ” விடுபட்டு போனவர்கள் மன்னிக்கணும்..கழுத்து வலி தாங்கலை..இல்லைன்னா.. எண்பத்தியெட்டே (88) போட்டிருப்பேன்

எல்லாரெயும் எல்லாரும் 8 போட அழைப்பு விட்டதாலே..எனக்கு அழைக்க யாருமே இல்லை..ஸோ..இதோட ஆட்டம் க்ளோஸ்…

19 Replies to “எட்டி பார்த்து போட்ட எட்டு”

  1. வணக்கம்… சொல்லிட்டேன்… கலக்கிட்டீங்க…

  2. ரொம்ப சிரமமெடுத்து வித்தியாசமான எட்டைத்தான் போட்டிருக்கீங்க.

  3. எட்டு ல நான் இருக்கேன்… 🙂

    இந்த தலைப்புக்கும் என் தலைப்புக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா… அப்படி இருந்தா ஏதும் ராயல்டி கிடைக்குமா?

  4. வாங்க சிவா..
    கண்டுபிடிச்சிட்டீங்களே..கண்கிராட்ஸ்..
    ///இந்த தலைப்புக்கும் என் தலைப்புக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா… ////
    ..அது வந்து.. english லெ சொல்லுவாங்க.. literally speaking & figuratively speaking ன்னு…( இது தமிழில் என்ன சொல்லன்னு எனக்கு தெரியாது.. த்ஹெரிஞவங்க சொல்லுங்க.. கத்துக்கறேன்)..

    நீங்க எழுதியிருப்பது figuratively speaking…நான் போட்ட எட்டு..literally speaking…ஸோ.. தலைப்பை தவிர நம்ம ரெண்டு பேர் எட்டுக்கும்..அஜ-கஜ தூரம்..ஹீ ஹீ..

    ஆமா……அப்புறம் ராயல்டி.. கண்ணன்தேவன் டீ ன்னு ஏதொ சொன்னீங்களே.. எப்போ தரப்போறீங்க..:-?

  5. அட! என் பெயர் கூட இருக்கே!
    வித்தியாசமான எட்டு தீபா.

  6. வாங்க குமார்..கண்டுபிடிச்சிட்டீங்களே.. ரொம்ப நேரம் ஆச்சோ ? ?

  7. தீபா,
    எனக்கு எந்த டெக்னிகல் நாலேஜூம் இல்லாததால்,வியப்புடன் உங்கள் பிளாக் பார்ப்பேன். உங்களையும் அழைக்க நினைத்து விட்டுப் போய்விட்டது.இம்முறையும் ஏதோ வித்தை காட்டியுள்ளீர்கள் 🙂
    ஆமாம் நுனிப்புல்லை காணவில்லையே :-))))

  8. வாங்க RCU ( உங்க பெயர் ரொம்ப நீளமா இருந்ததாலே.. உங்களை கேட்க்காமலேயே சுருக்கிவீட்டேன்..தப்பானா மன்னிச்சுக்கோங்க)

    உங்க பாரட்டுக்கு ரொம்ப நன்றி.. இப்படிபட்ட பாராட்டு தான் எனக்கு ஊக்கம் குடுக்கும் டாணிக்…

    //எனக்கு எந்த டெக்னிகல் நாலேஜூம் இல்லாததால்,///
    எனக்கு தமிழில் டெக்கினிகல் பதிவு எழுத தெரியாது.. வலைப்பதிவர் உதவி பக்கதில் நான் போடும் பதிவெல்லாமே.. சக பதிவர்கள் ( முக்கியமா ரவி ) தான் தப்பெல்லாம் திருத்தி உங்க பார்வைக்கு கொண்டுவராங்க..இலாங்காட்டி..உங்களுக்கு ஒண்ணுமே பிரியாது

    ////வியப்புடன் உங்கள் பிளாக் பார்ப்பேன்////.
    இந்த மாதிரி வித்தையெல்லாம் நீங்களும் சுலபமா போடலாம்.. ஆனா அதுக்கான பதிவுகள் english லே இருக்கு..

    ///நுனிப்புல்லை காணவில்லையே//
    கவலை வேண்டாம்… 8 லே ரெண்டு இடம் காலி இருக்கு ( உன்னிப்பா பார்த்தீங்கன்னா கண்டுபிடிச்சிருப்பீங்க)..

    உங்க பதிவு இல்லைன்னு முதல் ஆளா சொன்னதுக்காக..இன்னும் 24 மணி நேரத்துக்குள் உங்கள் பெயரும் அதில் update செய்யப்படும்

    ..அடுத்தது யாருப்பா..? ? ?

  9. ஹையா..நானும் இருக்கேன்… தீபா அக்கா இப்போ நா கலாபாரதி இல்ல, சிநேகிதன்…

  10. வாங்க சினேகிதன் ( கலாபாரதி)..
    …சூப்பர்.. பசங்களா.. எல்லரும் ஜோரா நம்ம சினேகிதனுக்காக கைதட்டுங்க… தன் பெயரை பார்த்து எப்படி துள்ளி குதிச்சு போறார் பாருங்க…

    …//இப்போ நா கலாபாரதி இல்ல, சிநேகிதன்…//
    அடடா.. உங்களுக்கு அழைப்பு குடுத்தவர் கலாபாரதின்னு தானே குடுத்டிருக்கார்..அடுத்த விளையாட்டுலே சரியான பெயர் போடறேன்..;)

  11. வித்தியாசமான எட்டு
    நாம கணினி கைநாட்டு
    உங்க
    பதிவுகளெ படிக்கமுடியுமே
    தவிர புரிஞ்சிக்கிறது கஷ்டம்
    அதான் பின்னூட்டம் பக்கம் தலை வைப்பதில்லே
    நன்றி1

  12. வாங்க சிவஞ்யானம்ஜி..
    எல்லாரும் கைநாட்டா ஆரம்பிச்சது தான்..
    அதுக்காக பின்னூடம் போடாம இருந்துடாதீங்க… your opinions are highly valued

  13. Prince
    8 லே ரெண்டு vacancy இருந்துது.. முதல் ஆளா Ramachandranusha விண்ண்ப்பம் போட்டதாலே.. உங்களுக்கு 2வது இடம் தான்.. இன்னும் 24 மணி நேரத்துக்குள்ளே.. 8 update செய்யப்படும்..அப்புறம் வந்து மறக்காம பழம் சொல்லணும்

  14. வணக்கம் ஒன்னு சொல்லிக்கறேன்..
    வித்தியாசமான எட்டு. 🙂

  15. வணக்கம் நானும் சொல்லிட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *