நம்ம மாதிரி வலையே மேஞ்சுகிட்டிருக்கரவங்களுக்கு Google talk ரொம்ப முக்கியமானது. text -chat & voice chat க்கு மற்ற messengers ஐ விட clarity ரொம்ப நல்லா இருக்கு. அது மட்டும்மில்லை.. யாருடைய பெயரும் நாம manual ஆ contact list சேர்க்கவேண்டிய கட்டாயமும் இல்லை.. gmail உபயோகிப்பவருடன் தொடர்ந்து சில மெயில் பரிமாற்றம் இருந்தால்.. அவர் தானாகவே நம்ம contact list லே இருப்பார். கூகிளின் இந்த வசதி… உபயோகமாகவும் இருக்கு… பல நேரத்திலே உபத்திரமாகவும் இருக்கு
- யாருகிட்டே பேசரோம்ன்னு தெளிவா இருக்க…
- நீங்க பிசியா இல்லையான்னு உங்க contacts க்கு தெரியப்படுத்த
- தொந்தரவு செய்யும் contact ஐ ஒதுக்கி வைக்க…
- யாருகூட என்ன பேசினோம்ன்னு மறந்து போச்சா,… நோ டெண்ஷன்… use chat Archive
உதா:- ஏதோ ஒரு அவசர விஷயதுக்கு நம்ம மெயில்-ஐடி யை வீட்டிலே அம்மா / அப்பா… தூரத்து சித்தப்பாவின் – நண்பருக்கு குடுதிருப்பாங்க.. நம்ம நண்பர்கள் பட்டியலில் காலேஜில் 3 வருஷம் லூட்டியடிச்ச நண்பருக்கும் ஒரே பெயரா இருக்கும்.. நம்ம கஷ்டகாலதுக்கு “என்ன.. மாப்பிளே… வீக்கெண்ட் ஜோரா ! ! !”.. ன்னு மெசேஜ் (நண்பருக்கு பதிலா..) பெரியவருக்கு போய் ,.. அப்புறம் goof up மண்டையிலே உறைக்க… ஹீஹீ.. “சாரி..அங்கிள்.. அது என் பிரெண்டுக்கு அனுப்பினது“…ன்னு நீங்க நெளிஞ்சு-வளைஞ்சு சொல்லணும்.. இந்த மெஸெஜை பார்த்து… அவரும் ” (கண்றாவி…) பரவாயில்லே தம்பி..”.. னு சமாதானம் சொல்ல… அப்புறம் ஒவ்வொரு முறையும் நீங்க ” யாருப்பா ஆண்லைன்லே.. நம்ம தோஸ்தா… இல்லை.. அப்பா-பிரெண்டா”.. ன்னு குழம்பணும்.
இந்த மாதிரி இக்கட்டான சூழ்னிலையிலிருந்து உங்களை நீங்களே காப்பத்திக்கணும்ன்னா …. contact list ல் தெரியும் பட்டியலில் “என்ன – பெயர்- இருந்தா-உங்களுக்கு- identify – பண்ண- வசதியா- இருக்குமோ— அந்த-பெயரை-போட்டு-வச்சுக்கலாம்”… எப்படின்னு சொல்லறேன்.. கேட்டுக்கோங்க.
( psst.. psst.. XYZ- காண்டாமிருகம்… ன்னு போட்டாலும் அவருக்கு தெரியாது… நான் சொன்னேன்னு மட்டும் சொல்லாதீங்க… ஓகேவா.. !!!).. பெயரோட.. வேறு ஏதாவது விவரம்… (அவர் சாட்க்கு வரும்போது நீங்க ஞ்யாபகம் வச்சிருப்பீங்கன்னு எதிர்ப்பாக்கும் விவரங்கள்)… இருந்தா.. அதை NOTES லே எழுதி வச்சுக்கலாம்… அவர் சாட்டுக்கு வரும்போது… (பிட்-அடிச்சு).. எனக்கு எல்லாம் ஞ்யாபகம் இருக்குங்கிரா மாதிரி காட்டிக்கலாம்… இதை விட impress பண்ண வேறே நல்ல வழி இருக்கிரதா எனக்கு தெரியலை
சில பேர் இருப்பங்க… உங்களை Online ன்னு பார்த்த உடனையே… ping பண்ணுவாங்க… உங்க status message என்னன்னு கூட பார்க்கிர பொறுமை இருக்காது.. இல்லே… BUSY / Meeting in progress ன்னு status message போட்டிருந்தாலும்.. “என்ன… ரொம்ப பிசியோ !!! ” ..ன்னு மெசேஜ் பண்ணுவாங்க… ….. எல்லாம் உங்க மேலே இருக்கிர அன்பினாலே தான்…..ஒரே அன்புத்தொல்லை தான் போங்க.. “இப்போ பேச முடியாது”ன்னு சொன்னா.. தப்பா கூட எடுத்துக்கலாம்… இதிலே… “எவண்டா இவன்.. எப்போ online வந்தாலும் சாட் பண்ணரான்.. சே.. எனக்கு இப்போ இவன்கூட சாட் பண்ண இஷ்டமே இல்லை… ஒரே கஷ்டமா இருக்கு…”ன்னு நீங்க நினைக்கிரவங்களும் இருக்கலாம் ….. ஸோ… அப்படி இருக்கிரவங்களை சமாளிக்க தான் “BLOCK” option
அப்புறம் சாவகாசமா… google talk – settings – block list – ல் அவர் பெயரை செலெக்ட் செய்து மறக்காம unblock செய்திடுங்க… எப்பப்பாரு googletalk ஏ கதின்னு கடக்கிரவர்…. தொடர்ந்து 2-3 வாரமா online வரலைன்னா… சிருசா சந்தேகம் வருமில்லையா… அதுக்கு தான்
இதுக்கு உங்க gtalk – settings – chat – “save chat history to my Gmail Account”… selected ஆ இருக்கா பாருங்க.. அப்படி இருந்தா..
ஏதாவது முக்கியமான நபர்கிட்டே பேசரீங்கன்னா… அவரோட நீங்க செய்த recent conversations ஐ ஒரு முறை பார்த்துகிரது நல்லது… for continuity sake… பேசும் போது குறிப்பெடுக்க மறந்து போன விவரம் – சுட்டி – போண் நம்பர் எல்லாம் கூட அப்புறமா இதிலிருந்து மீட்டுக்கலாம்
கூகிள் டாக்கில் இருக்கும் சூட்ஷமத்தை நல்லா வெளிச்சம் போட்டு கட்டியாச்சு.. இதனாலே நீங்க யாருகிட்டேயாவது மாட்டிகிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை…சிக்கிக்கிரதும் , தப்பிக்கிரதும் உங்க சாமர்த்தியம்… என்னை வம்புக்கு இழுக்காதீங்க.. நான் வெறும் ஒரு announcer தான் 🙂
அம்மணி உங்களை ரொம்ப நாளாக்காணமே அப்ப நிஜமாவே வைரல் தானே ? 🙂 சும்மா தான் வரம் குடுத்தவர் தலையில் கை வைக்கிரமாதிரி.. 🙂
மத்தபடி ரொம்ப யூஸ்புல் டிப்ஸ்.
இவுங்க எப்ப வீடியோ கொண்டுவரப் போறாங்க?
சில சமயம் MSN & Yahoo வும் சரியாக வரமாட்டேன் என்கிறது.Skype- கணினியை மொத்தமாக விழங்கப்பார்க்கிறது.
அடபோங்க தீப்ஸ் ஆண்ட்டி..
வழாகம் போல எதுனா புதுசா இருக்கும்னு பாத்தா எல்லாம் தெரிஞ்சதாவே இருக்கு…
((தெரியாதவங்களுக்கு பயன்படும்னு சொல்விங்களே))
Superb Post. Thanks a lot!
லட்க்ஷ்மி…
///நிஜமாவே வைரல் தானே ///
ஒருத்தர்.. வைரல் பீவர்ன்னு சொன்னா நம்பணும்.. இப்படி கிராஸ்-கொஷ்டின் எல்லாம் கேக்கப்படாது.. ஒரு மனுஷி எவ்வளவு தான் யோசிக்கிரது 😉
வாங்க குமார்..
இன்னும் gtalk லெ vedio இல்லாம இருக்கிரதால் தான்.. voice chat லே clarity இருக்கு… once they start incoporating vedio.. i feel that the clarity of voice and pic will suffer a great deal.. this is what is happeing at Yaahoo.. terrible Voice and Vedio..
.. MSN is little better with Voice ( compared to Yahoo).. but vedio & voice… togahter is a headache
.. Skype also gives good VC- clarity.. as long as you are not sharing the extras / whitboard etc.. then the vc reaches you after considerable delay
வாங்க பொடியன்..
நீங்க சொலரது சரி.. நானும் இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்ன்னு தான் இத்தனை நாளா சும்மா இருந்தேன்.. ஆனா சமீபத்திலே ஒரு நண்பருக்கு இதெல்லாம் class எடுத்தேன்.. அப்போ தான் தெரிஞ்சுது… இதெல்லாம் தெரியாம கஷ்டப்படரவங்களும் இருக்காங்கன்னு… பாவம்.. இப்பவாவது தெரிஞ்சுக்கட்டுமே…
.. உங்கள்ளுக்கு என்ன தெரிஞ்சிக்கணுன்னு ஆசை / ஆர்வம் இருக்கோ சொல்லுங்க.. என்கிட்டே் தகவல் இருந்தா ..கண்டிப்பா அதை பத்தி சொல்லறேன்..என்ன சரி தானே
//உங்கள்ளுக்கு என்ன தெரிஞ்சிக்கணுன்னு ஆசை / ஆர்வம் இருக்கோ சொல்லுங்க.. என்கிட்டே் தகவல் இருந்தா ..கண்டிப்பா அதை பத்தி சொல்லறேன்..என்ன சரி தானே//
ரொம்ப தேங்க்ஸ் தீப்ஸ் அத்தை.
நான் உங்க பிளாகிற்கு என் வலைப்பூவில் இணைப்பு கொடுத்திருக்கிறேன். ஸோ.. அடிக்கடி வருவேன்.. வேண்டியதை வேண்டும் என்ற போது வேண்டிக் கேட்டுப் பெற்றுக் “கொல்”கிறேன். :))
//நான் உங்க பிளாகிற்கு என் வலைப்பூவில் இணைப்பு கொடுத்திருக்கிறேன///
ரொம்ப நன்றி…
///வேண்டியதை வேண்டும் என்ற போது வேண்டிக் கேட்டுப் பெற்றுக் “கொல்”கிறேன///
கண்டிப்பா.. நோ பிராபளம்..
Disclaimer :- posts shall made subject to availability of information 😉
Some very useful tips about Gtalk Deepa. Gmail &Talk are simple to proceed and quality is too good as u said. will try these if I need!
Sure jeevan.. Comparing with yahoo – msn.. gtalk is the best.. both in simplicity and user- convinence
Dear friend,
I am a senior citizen. Can you explain in simple terms as to how add comments in Tamil script to the pieces in a blog?
I shall be grateful.
S. Krishnamoorthy
வணக்கம் திரு. சுந்தரா..
1. please visit http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?cid=3 and download eKalappai 2.0b (tamilnet99) Popular .. and install
2. once u install.. u will see the “keyman” icon in u r status bar
3. ALT+2 == shift to Tamil keybord (the keyman icon will show as “அ”
now u can type in tamil in blog , comments , gmail , notepad.. etc etc
4. same ALT+2 again.. will take u to english keyboard
hope this helps
thanks for comming
Do feel free to share your opinion
Thank you
உபயோகமான விஷயம்..
நன்றி ரூபஸ்
நன்றி தீபா.
இகலப்பையைப் பயன்படுத்தி இதை எழுதுகிறேன்.
Firefoxல் சில தமிழ் இணைய தளங்களின் தமிழ் எழுத்துக்கள் உருமாறியும், அலலை என்று தெரிகிறதே. கில்லியில் தரப்பட்டுள்ள பரணர் எழுத்துருவை நான் தரவிறக்கம் செய்து நிலைமை மாறவில்லை. ஏதேனும் தீர்வு உண்டா?
சுந்தரா சார்..
இந்த கண்ப்யூஷண் எனக்கும் இருந்தது.. சரியான செய்முறை விளக்கம் பெற இங்கே சென்று ஒரு மறுமொழி எழுதுங்கள்… செல்லா சரியா சொல்லி குடுப்பார்
நன்றி தீபா.
நீங்கள் சொன்னபடி செய்துள்ளேன்.
செல்லாவிடமிருந்து மறுமொழி எதிர்பார்க்கிறேன்.