தீபாவளிக்கு முன்னாடி நானும் ஒரு பதிவாவது போடணும்ன்னு தலை கீழா நின்னு பார்த்துட்டேன்.. எங்கே.. நாம ஒண்ணு நினைச்சா.. வேறே ஒண்னு நடக்குது. சொன்னா நம்ப மாட்டீங்க , கடந்த 3 வாரமா.. நான் பிளான் பண்ணின agenda லே ஒண்ணு கூட நான் நினைச்சா மாதிரி .. நினைச்ச நேரத்திலே நடக்கலை.. என்னமோ எல்லா வேலையும் பொழுது போக-போக.. “நீ என்ன task பிளான் பண்ணரது… அதை நாங்க என்ன அது படியே நடக்கிரது”.. ன்னு ஒரே முறண்டு.
போன வீக்கெண்டு எல்லாருக்கும் புது துணி எடுக்கலாம்ன்னு “பிளான்” பண்ணின்னேன்.. ஏதோ நாம காசு / கார்ட் எடுத்துகிட்டு போனோமா.. பசங்களுக்கும் – பெரியவங்களுக்கும் – எங்க ரெண்டு பேருக்கும் புது துணி எடுத்துகிட்டு வந்தோமான்னு இருந்தா … ஒரே மூச்சில் வேலை முடிஞ்சிருக்கும்… அட அது கூட பரவாயில்லை… shopper’s stop மாதிரி ஒரே கடையிலே… பாண்ட்-ஷர்ட்.. புடவை .. ப்சங்களுக்கு பாஷன் பாஷனா டிரெஸ்ன்னு இருந்தா.. 4 மணி நேரம் AC லே காத்துவாங்கிக்கிட்டே மத்தியத்துக்குள்ளே textile shopping முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்…{4 மணி நேரம்ன்னு வாய்யைபொளக்காதீங்க… 6 பேருக்கு 4 மணி நேரம் ரொம்ப கம்மி.. அதுவும் 3 லேடீஸ் ( என் பொண்ணையும் சேர்த்து தான் சொல்லறேன்)}… Man proposes God disposes ங்கிரதுக்கு சரியான அர்த்தம் இந்த தீபாவளிக்கு தான் கத்துகிட்டேன்)}
டிபன் முடிச்சு 9.00 மணிக்கு டிரஸ் வாங்க போலாமா.. ன்னு சொன்னது தான் தாமதம்… ஒரே கஜமுஜ-கஜமுஜன்னு எல்லாரும் ஒரே நேரத்திலே பேச ஆரம்பிச்சுட்டங்க.. அப்போ ஒண்ணும் புரியலை… எல்லாரும் சொல்லரதை கேட்டதும்.. “புரியாமலேயே இருந்திருக்கலாம்”ன்னு தோணிடுச்சு… ஏன் தெரியுமா… Family-Mall ( அதாங்க… அடுடைஸ்மெண்ட்லெல்லாம் சொல்லுவாங்களே… “குடும்பத்தார் அனைவருக்கும் ஒரே இடத்தில் வித-விதமாக துணி ரகங்கள்”…) போலாம்ன்னு என் அபிபராயம்.. ( போனோமா.. வாங்கினோமா.. வந்தோமான்னு இருக்கலாமே… அலைச்சல் குறையுமே ன்னு எனக்கொரு நப்பாசை).. அத்தைக்கு அங்கே புடவை நல்ல தரமானதாக இல்லைன்னு ஒரு அபிபிராயம்… மாமாவுக்கு அங்கே exorbitant rates ன்னு ஒரு நெருடல்,, என்னவருக்கோ..” இப்போ தானே டிஸ்கஷண் ஆரம்பிச்சிருக்கீங்க… ஒரு டிஸிஷனுக்கு வாங்க .. அப்புறம் நான் பேசறேன்” .. ங்கிர தோரணையிலே Economic times லே மூழ்கிட்டார்… இனிமே காது கிட்டே அலாரம் கிளாக் வச்சா தான் கேக்கும்
பசங்க ரெண்டு பேருக்கும் Family-Mall வேண்டாம் னு சொல்லணும்ன்னு கண்ணுலேயே ரகசிய ஒப்பந்தம் போட்டுகிட்டா மாதிரி எனக்கொரு பிரமை… பெரிய மனுஷியாட்டம் என் பொண்ணுடைய ஜஸ்டிபிகேஷண்… அனிதா- பிரியா- நதாஷா எல்லாம்.. MG Road லே இருக்கிர கடையிலே வாங்கிநதை பத்தி இவகிட்டே சொல்லியிருக்காங்க… அதான் போண்ணுக்கு பிரெண்ட்ஸ் வாங்கின கடையிலே தானும் வாங்கணும்ங்கிர மோகம்… இதெல்லாம் குத்தம்ன்னு சொல்ல முடியுமா சொல்லுங்க…( அம்மா… ரொம்ப சாரிம்மா..என் பிரெண்ட்சொன்ன கடையுடைய location ஐ தொலச்சிட்டு .. அப்பெல்லாம் மொபைல் கூட இருக்கலை.. போண் போட்டு.. “ஏய் நீ சொன்ன கடை எங்கே தான் இருக்கு…தேடி தேடி ஓஞ்சு போய்ட்டேன்”… ன்னு பிரெண்ட் கிட்டே சொல்ல கூட முடியலை….அதனால நான் உன்னை எவ்வளவெல்லாம் அலையவிட்டிருப்பேன்.. இது நான் மானசீகமா எங்கம்மாவுக்கு)
பொண்ணு இப்படின்னா.. Lee Cooper தான் வேணும்ன்னு இன்னொரு குறல்… அதிலே புதுசா என்னமோ வந்திருக்காம்.. ( என்னமோ தெரியலை.. எனக்கென்னமோ எல்லாமே நீலம் / கறுப்பு கலர்லேயே தான் தெரியுது… இந்த ப்ளூ வேறே.. அந்த ப்ளூ வேறேன்னு எப்படி தான் பிரிச்சு பார்க்க மூளைய டிரையின் பண்ணிகிராங்களோ…!!! ) இதிலே பாதி சாமர்த்தியம் கெமிஸ்ட்ரியிலே இருக்க கூடாதா… எனக்கு அதுவே பேரிய தீபாவளி-கிப்ட்டா இருக்குமேடா…ன்னு சொல்லணும்ன்னு நுணிநாக்கு வரை வந்தது.. அப்புறம் வேண்டாம்ன்னு விட்டுவிட்டேன்.. அய்யோ ப
ாவம்.. எதுக்கு பண்டிகைக்கு பிளான் பண்ணும் போது அவன் மூடை கெடுக்கணும்…இன்னொரு நாள் பார்த்துக்கலாம்ன்னு அத்தை பக்கம் திரும்பினேன்
அவங்க சொல்லரதுக்கு முன்னாடியே எனக்கு கவுளி சொல்லிடுச்சு.. அவங்களுக்கு எப்பவும் போகும் “ஆஸ்தான ஜவுளிக்” கடைக்கு தான் போகாணும்.. கவுளி சொன்னது சரியாத்தான் இருந்துது.ஆக டிஸ்கஷண் முடியவே 11.30 ஆச்சு ( பாதி நாள் இங்கேயே காலி.. இதிலே நான் துணி வாங்கிகிட்டு வந்தப்புறம் 2 ஸ்வீட்டாவது பணிடணும் ன்னு agenda லே எழுதினது ஞ்யாபகம் வந்தது.. எங்கே.. போகிர போக்கை பர்த்தா இந்த ஒரு வேலையே நடந்தா போதுன்னு இருக்கும் போல இருக்கே…) சரி இனிமே எங்கே சமச்சு- சாப்பிடரது.. போகிர வழியிலே woody’s லே சாப்பிட்டு purchase முடிச்சுக்கலாம்ன்னு முடிவாச்சு.. இதிலே என்ன விஷேஷம்ன்னா.. நாங்க புடவை- சல்வார் கமீஸ் – ஜீன்ஸ் – டீ ஷர்ட் ன்னு பிசியா இருக்கும்போது அப்பாவும்- பிள்ளையும் ( அதான் என் மாமனாரும், என்னவரும்…) நீங்க பாருங்க.. நாங்க சும்மா அப்படி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கறோம்ன்னு சொன்னாங்க..சரி ன்னு ஒவ்வோண்னா செலெக்ட் பண்ணி திரும்பி பார்த்தா.. ரெண்டு பேரும் ஆளுக்கொரு பைய்யோட நிக்கராங்க.. என்னானு கேட்டா.. நாங்க எங்களுக்கு டிரெஸ் எடுத்தாச்சு.. நீங்க தான் லேட்ன்னு நக்கல் வேறே…
இது agenda லெ பிளான் பண்னின (பல விஷயத்திலே ) வெற்றிகரமா ஒரே நாளில் நிறைவேறிய ஒரு விஷம் தான்.. ஸ்வீட்டு – காரம் படுத்தின பாட்டை அடுத்த பதிவிலே சொல்லறேன்.. எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.. பத்திரமா பட்டாசு வெடிங்க.. டையாபெட்டீஸ் / பிரெஷர் இருக்கிரவங்க.. சொல்லாம கொள்ளாம ஸ்வீட்- காரம் எல்லாம் கண்ட மேனிக்கு சாப்பிடாதீங்க.. கட்டுப்பாடோட இருங்க.. பண்டிகையும் அதுவுமா.. எதுக்கு வயிரு அப்சட்டாகி – நீங்களும் அப்சட் ஆகணும்…. இல்லையா… ஸோ… Take Care – Be safe தீபாவளி வாழ்த்துக்கள்
என் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள் அக்கா…
//Baby Pavan said…
என் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள் அக்கா…
//
ரிப்பீட்டே. 😉
இப்படி கொஞ்சம் கொஞ்சம் கஷ்டப்பட்டால், அது எப்போதுமே நினைவில் இருக்கும். 😉
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா. 🙂
ஹை.. பவன் பாப்பா… வாங்க.. புது சொக்கா போட்டிருக்கீங்களே.. உங்களுக்கும் உங்க மம்மி-டாடிக்கும் தீபாவளி வாழ்துக்கள்..
மை நூபிரெண்ட்
வாங்க… நீங்க சொல்லரது ரொம்ப சரி.. அந்த நிமிஷம் கஷ்டமா இருந்தாலும்.. ஞ்யாபக படுத்தி பார்க்கும் போது.. pleasure தான் இருக்கு pain இல்லை… after all its these little incidents that make up a lovely anecdote
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
என் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள் தீபா ஆண்ட்டி
நிலா குட்டீ… சமத்தா இருக்கையா.. ஐ இதென்ன.. போட்டொவிலே முயல்குட்டியாட்டம் ரெண்டு பல் தெரியுதே… காரெட் எல்லாம் நல்லா கடிச்சு சாப்பிடுன்னா… குட் கேர்ள்
உனக்கு மம்மிக்கு டாடிக்கும் ஆண்டியுடைய தீபாவளி வாழ்த்துக்கள்..
ஹா…ஹா…நல்லாயிருக்கு..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.
பதிவைப்படிக்கப் பொறுமையில்லை… ப்ரிண்ட் போட்டு, வீட்டுப்போகும் வழியில் படிக்கலாமென்றுள்ளேன்…ஸோ அது பற்றிய கமெண்ட் அப்புறம்..
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!
தீபாவளி அட்வைஸ்: ‘பட்டாசு ஜாக்கிரதை’ காலமெல்லாம் போச்சு. இப்போது… ‘தீபாவளியன்றும் இண்டெர்நெட்டில் உட்காரதீர்கள், குடும்பத்தாருடன் செலவிடுங்கள், குதூகலமாயிருங்கள்’தான்
யப்பா..கண்ண கட்டுதுடா சாமி!:)
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🙂
நீங்க மட்டும்தான் பாகம்-1, பாகம்-2 என்று போட்டுப் பதிவுபோடலாமா? நானும் என் பங்குக்கு இப்ப என் கமெண்டின் பாகம்-2ஐ போடுகிறேன் இதோ:
தீபாவளி அன்னிக்கித்தான் திருநாள்ன்னு இல்லீங்க, குடும்பதாருடன் புதுத்துணி எடுக்கப்போறோம் பாத்தீங்களா, அதுவே ஒரு திருநாள்தாங்க. என்னிக்கி தீபாவளி வரும்ங்கற எதிர்பார்ப்பு போலவே, என்னிக்கி எல்லாருமா சேர்ந்து புதுத்துணி வாங்க ஷாப்பிங் போகப்போறோம்ங்கற எதிர்பார்க்க வைக்கும் நாள் முதலே, பண்டிகை களைகட்டத் துவங்கி விடுகிறது, இல்லியா?
//அதுவும் 3 லேடீஸ் ( என் பொண்ணையும் சேர்த்து தான் சொல்லறேன்)}… Man proposes God disposes ங்கிரதுக்கு சரியான அர்த்தம் இந்த தீபாவளிக்கு தான் கத்துகிட்டேன்)//
மூணு லேடீஸ் போரீங்கன்னா, எந்தப் ப்ளானும் ஒர்க்கவுட் ஆகாதுன்னு உங்களுக்கு வேணா புது அனுபவமா இருக்கலாம்; ஆனா, ஆண்களுக்கு (உங்க மாமனார், உங்க கணவர் எல்லாரும் உட்பட) நல்லாத் தெரியும்… ஏன்னா man proposes God disposes இல்லீங்க… man proposes woman disposes!
//(என்னமோ தெரியலை.. எனக்கென்னமோ எல்லாமே நீலம் / கறுப்பு கலர்லேயே தான் தெரியுது… இந்த ப்ளூ வேறே.. அந்த ப்ளூ வேறேன்னு எப்படி தான் பிரிச்சு பார்க்க மூளைய டிரையின் பண்ணிகிராங்களோ…!!! ) இதிலே பாதி சாமர்த்தியம் கெமிஸ்ட்ரியிலே இருக்க கூடாதா… எனக்கு அதுவே பேரிய தீபாவளி-கிப்ட்டா இருக்குமேடா…ன்னு சொல்லணும்ன்னு நுணிநாக்கு வரை வந்தது..//
நேற்று பிரிண்ட் போட்டதை இன்று காலை அலுவலகம் வந்ததும், முதல் வேலையாக ஸ்கேன் செய்து, அந்த pdf கோப்பை நண்பர்களுக்கு தீவாவளி விருந்தாக forward செய்தேனா… யார்ரா இந்த அம்மணி, ரொம்பவும் ஹாஸ்யமாக எழுதுகிறாள்னு கேட்கறாங்க போங்க… 🙂
வாங்க ரசிகன்
பாராட்டுக்கும்.. வாழ்த்துக்கும் நன்றி
பா.ந.இ..
///நீங்க மட்டும்தான் பாகம்-1, பாகம்-2 என்று போட்டுப் பதிவுபோடலாமா? நானும் என் பங்குக்கு இப்ப என் கமெண்டின் பாகம்-2ஐ போடுகிறேன///…. அதானே… எதிலேயுமொரு புதுமை வேணுமில்லே… இதுக்கு பெயர் தானோ..”தொடர்-கமெண்ட்” !!!
பதிவை உங்கள் நண்பர்களுக்கு காட்டிஎன்னுடைய TRP-rating ஐ உயர்தியதுக்கு உங்களுக்கு முதல் தாங்க்ஸ்… பதிவை படிச்சு பாராட்டின அனைத்து நண்பர்களுக்கும்.. நன்றி.. எல்லாருக்கும் தீபாவளி வாழ்துக்கள்
வீட்டுக்கு வீடு வாசப்படி…
நல்லாயிருக்குங்க..
Nicely written! Good.
பண்டிகைகள், விசேஷங்கள் இதற்குத் தான் வைத்திருப்பார்களோ?
உறவுகள் வலுப்பட இதை விட வேறு சிறந்த team building exercise இருக்க முடியாது. இடையில் பின்னோக்கிச் சென்று அம்மாவிடம் சாரி சொன்னது அருமை 🙂
waiting for part 2.
ரூபஸ்
வணக்கம்..
//வீட்டுக்கு வீடு வாசப்படி…///
உண்மை தான்… details வேணும்னா மாறுபடலாம்.. ஆனா சம்பவம் எல்லார் வீட்டிலேயும் இது தான் 😀
வாங்க குமார்
பாரட்டுக்கு நன்றி..
//உறவுகள் வலுப்பட இதை விட வேறு சிறந்த team building exercise இருக்க முடியாது./// 100% ISI mark பதித்த உண்மை…ஆனா.. இந்த team building excersise பிள்ளைகள் வளர்ந்து வர.. காணாமலேயே போயிடுமோன்னு ஒரு நெருடல் உள்ளூர இருந்துகிட்டே இருக்கு.. ம்ம்.. அதுக்கு இன்னும் பச வருஷங்கள் இருக்கு.. வரும்போது பார்த்துக்கலாம்… இல்லையா ? ?
aahaa nila pavan myfriend all r already came. I late comer.
Happy Diwali Deepa.
Post is nice.
4 hrs for taking dress for 6 person that too 3 womens including ur daughter its toooooooooooo less.
whether u have taken dresses for mens also are not !!!!
Cool post
Regards
Siva
http://mangalore-siva.blogspot.com
வாங்க சிவா
பாரட்டுக்கு நன்றி
//4 hrs for taking dress for 6 person that too 3 womens including ur daughter its toooooooooooo less.///
நீங்க தான் கரெக்டா புரிஞ்சுகிட்டிருக்கீங்க.. ( வீட்டிலே அண்ணி கிட்டே கேட்டாதான் தெரியும்…)
whether u have taken dresses for mens also are not !!!!////
அடடா… சுவாரசியத்திலே கடைசீ பாரா படிக்க விட்டுப்போச்சா… பரவாயில்லே… நாங்க பில்- கவுண்டருக்கு வரதுக்குள்ளே.. அப்பாவும் பிள்ளையும் ( அதான் மாமா & ஸன்) அவ்வங்க செலெக்ஷண் முடிச்சிகிட்டாங்க… ( என்ன தைரியம பாருங்க் .. எங்களை செலெக்ஷணுக்கு ஒரு வார்த்தை கூட கேக்கலை !!!.. கண்ணை மூடிகிட்டு வாங்கியிருக்காங்க..)
That was well written and quite creative Deepa.
Personally, I do not take time more time for shopping and love window shopping before I buy.
Keep coming.
Yes pria.. window shopping is the gateway towards a great shopping extravaganza
//
வீட்டிலே அண்ணி கிட்டே கேட்டாதான் தெரியும்…
//
if u r telling about my anni, anna marriage is on jan 08 u can ask that time
:-))))
:-)))))))
//
அடடா… சுவாரசியத்திலே கடைசீ பாரா படிக்க விட்டுப்போச்சா… பரவாயில்லே… நாங்க பில்- கவுண்டருக்கு வரதுக்குள்ளே.. அப்பாவும் பிள்ளையும் ( அதான் மாமா & ஸன்) அவ்வங்க செலெக்ஷண் முடிச்சிகிட்டாங்க…
//
i donno how i missed this
cool
:-)))
//
என்ன தைரியம பாருங்க் .. எங்களை செலெக்ஷணுக்கு ஒரு வார்த்தை கூட கேக்கலை !!!.. கண்ணை மூடிகிட்டு வாங்கியிருக்காங்க..)
//
oh my god!!
is it warning???
my goodness still bachelor!!!
வாங்க சிவா..
//oh my god!!
is it warning???
my goodness still bachelor!!!///
நான் எதுவும் சொல்லலை.. ஏதோ புரிஞ்சா சரி . 😉