தீபாவளின்னாலே.. புது துணிக்கப்புரம் நினைவுக்கு வருவது ஸ்வீட்ஸ்-காரம் தான் ( குட்டீஸ்… உங்களுக்கெல்லாம் பட்டாசு தான் பர்ஸ்ட்ன்னு ஆண்டிக்கு தெரியும்…அடுத்த பதிவு உங்களுக்கு தான் ஓகேவா !!). போன பதிவிலே சொன்ன மாதிரி .. நொறுக்குத்தீனி பண்ணரதுக்கும் வீட்டிலே பெரியவங்க அஜெண்டா போட்டாங்க (.ஹூஹ்ம்… நான் இல்லை… நான் அஜெண்டா போடலை…துணிமணிக்கு அஜெண்டா போட்டு சொதப்பினதே இன்னும் மறக்கலை…இன்னொரு அஜெண்டா பொட எனக்கு தெம்புமில்லே.. நான் இந்த விளையாட்டுக்கே வரலை)..அப்படீன்னு மனசு சொன்னாலும்.. பெரியவங்க பேச்சை பண்டிகை நிமித்தமா தட்ட முடியாம போச்சு
எல்லாருக்கும் பிடிச்ச குலொப்ஜாமுன் ,தனிப்பட்ட விருப்பதுக்கு ரவாலட்டு, மாலாடு , தேங்காய் பர்பி,7-கப் கேக், எல்லாம் ஸ்வீட்ஸ் வகையிரா… காரதுக்கு ரிப்பண் பகோடா , மிக்சர், முள்-முறுக்கு ( முத்துஸரம் ன்னு கூட சிலர் சொல்லுவாங்க), கோட்பளே ( இது கர்னாடகா ஸ்பெஷள்… வளையாட்டம் ரவுண்ட் ரவுண்டா பண்ணி எண்ணையிலே பொரிச்செடுக்கணும்).. மிச்சம் மீதி மாவு இருந்தா அது என் பொண்ணு முறுக்கு சுத்த புக் பண்ணிட்டா… அவளே முறுக்கு சுத்துவாளாம்… (சமீபத்திலே ஒரு கல்யாணத்திலே open kitchen லே 3 பாட்டி முறுக்கு சுத்துரதை பார்த்து களாஸ் demo எல்லாம் நின்னு நிதானமா பார்த்திருக்கா.. அதான்)
இதெல்லாம் செரிக்க icing on the cake மாதிரி தீபாவளி மருந்தும் பண்ணணும்.. யாரும் என் கிட்டே ரெசிபியெல்லாம் கேக்காதீங்க… எனக்கு தெரியாது.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் குலாப்ஜாமுன் தான்.. க்விக்-அண்ட்-ஈஸி.. நான் பொதுவாவே ஜாமுன் கோலி-ஸைசுக்கு தான் பண்ணுவென்.. என் பசங்களுக்கு 2-3 ஜாமுன் கப்பிலே போட்டு.. சொபாலே உட்காந்து… ஸ்பூண்லே (க்ஷீரா சொட்டாம) சாப்பிடுர பொறுமையெல்லாம் கிடையாது .. கிச்சணுக்கு வந்திட்டு போகும்போதெல்லாம் ஆளுக்கு ரெண்டு ஜாமுன் லபக்-லபக் ன்னு போட்டுக்குவாங்க..இத்னாலே பைய்யன் சட்டையெல்லாம் ஒரே பிசு-பிசு… ஜாமுன் பெருசா இருந்தா..க்ஷீரா (sugar syrup) சட்டைக்கு தான் .. ஸொ… கோலி ஸைசுக்கு பண்ண ஆரம்பிச்சேன்… அவனுக்கும் சாப்பிட confortable ஆ இருக்கு.. எனக்கும் தீபாவளி துணியிலே க்ஷீரா கொட்டுமே ( சொட்டுமே..)ன்னு பயமில்லாம இருக்கலாம்.
இந்த முறை அத்தை க்ளீனா சொல்லிட்டாங்க… குட்டி-குட்டி ஜாமுனெல்லாம் விருந்தாளிகளுக்கு குடுக்க சங்கடமா இருக்காம்.. ஸோ.. 2 செட் பாண்ணணும்… ஒண்ணு.. customised size (என் பசங்களுக்கு).. இன்னொண்ணு…கொஞ்சம் பெரிய சைஸ்.. கல்யாண வீட்டிலே குடுக்கரா மாதிரி… வருஷத்துகு ஒரு முறை தானேன்னு நானும் சரின்னுட்டேன். 3 நாள்ன்னு அஜெண்டாலே பொட்டது… 5 நாளாச்சு எல்லாம் பண்ண… ரிப்பண் பகோடா நல்லா பொரிஞ்சு வர நேரத்திலே காஸ் ஜகா வாங்கிடுச்சு – புது சிலிண்டர் போட்டும் பர்ணர் சரியா எரியலை -.. எல்லாத்தையும் கழட்டி.. க்ளீன் பண்ணி.. மறுபடியும் first லேயிருந்து ஆரம்பிச்சு (இந்த கலாட்டாலே பாதி-வெந்த பகோடா ஈஈஈன்னு இளிக்க.. எனக்கு சுர்ர்ர்ன்னு கோவம் வர)..ஜாமுன் பண்ணும் போதே… பாதிக்கு மேலே காணாம போக ( வேறேன்னா… எல்லாம் வாண்டுகள் திருவிளையாடல் தான்).. அப்புறம் ரெண்டும் தூங்கினப்புறம் ராத்திரி11.00 – 12.30 fresh batch பண்ணி…ஒளிச்சு வச்சு … எண்ணையிலே பொரிக்கும் போது.. ” எனக்கு பார்க்கணும்… எனக்கு பார்க்கணும்ன்னு ரெண்டும் காஸ் பக்கத்திலே வந்து எட்டி பார்க்க — அத்தைக்கு BP ஏற – முத்துஸரம் சிவந்து போக..கூடவே என் கண்ணும் சிவக்க… நிலமையை புரிஞ்சுகிட்டு.. மாமா ரெண்டு பேரையும் 3 மணி நேரம் டாடா கூட்டிகிட்டு போய் சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தாங்க.. அதுக்குள்ளே ஒரு வழியா தீபாவளி மருந்தை தவிர மத்ததெல்லாம் பண்ணி டப்பா-டப்பாவா போட்டு உயரமான ஷெல்பிலெ வச்சு – ஹப்பாடான்ன
ு உட்கார்தோம்..
ஒரு 1 மணிநேர பிரேக்குக்கப்புறம் ராத்திரி டின்னர் ஆரம்பிக்கணும்.. இனிமே எதுவானாலும் நாளைக்கு தான்ன்னு முடிவெடுத்தோம். இதுவரை நடந்தெதெல்லாம் வெறும் ட்ரைலர்தான்னு அப்போ எனக்கு தேரியாம போச்சு… எனக்காக ஒரு முழு படம் அடுத்த நான் காத்திருக்குன்னு எப்பவும் குறி சொல்லர கவுளி.. இன்னிகின்னு தீபாவளி ஹாலிடேஸ்க்கு போயிடுச்சு போல
அடுத்த நாள் அம்மா என்ன பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்க ரெண்டுபேருக்கும் curiosity. ஆனா இதுவரை பண்ணின கலாட்டாவாலே கேட்க்க ஒரு பயம்.. சப்பொர்ட்க்கு பாட்டியை பார்க்க… அவங்க “ஹூம்.. என்ன தீபா.. அப்போ இன்னிக்கி தீபாவளி மருந்தோடா நாம லாலா-கடையை முடிச்சிடலாமா ? ? ?”… ன்னு சொல்லி பசங்களுக்கு ஹிண்ட் குடுக்க.. ..”அய்யே.. அந்த மருந்து பண்ணரதிலே என்ன இருக்கு”ன்னு ரெண்டும் விளையாட போயிட்டாங்க… நானும் சரின்னு இஞ்சியெல்லாம் கழுவி – தோலெடுத்து .. போடவேண்டியதெல்லாம் போட்டு ( அதான் சொன்னேனே…டைரெக்ஷண் எல்லாம் அத்தை தான்.. ) அரைச்சு – கிண்டி கிண்டி கை வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரு லெவெலுக்கு மேலே என்னாலே சுத்தமா கிண்டவே முடியலை… ( பாவம் வயசான்வங்களை எவ்வளவு தான் வேலை வாங்கிரது)…தோள்பட்டை ரிலாக்ஸ் பண்ணும்பொது என் மைக்ரோவேவ்…”என்ன தீபா.. இந்த ஹை-டெக் யுகத்திலே இன்னும் உருளி-சட்டுகம்ன்னு கிண்டிகிட்டு இருக்கே.. glass bowl லே போட்டோமா… மைக்ரோவேவ் பண்ணினோமா…ன்னு பண்ணியிருந்தா இதுக்குள்ளே பண்ணிய்ருக்கலாமே…”” ன்னு பேசராமாதிரியே இருந்துது…. .. டெண்ஷண் தலைக்கு ஏறி… மைக்ரோவேவ் பேசராமாதியே இருந்தது.. கடாய் + சட்டுகம்.. “அப்போ நாங்க இனிமே வேண்டாமா..”ன்னு மூஞ்சியை தொங்க போட்ட மாதிரி ஒரு பிரமை..I am defenitly hallucinating
ஆஹா… இப்படியும் செய்யலாமே !! ( செய்யலாமா…ன்னு யோசிக்கவே தோணலை)..ன்னு எல்லாத்தையும் பவுளிலே கொட்டி 3 min வச்சேன்.. சூப்பரா திரண்டு வந்தது.. அடடா… கை நோகாம மருந்து கிண்டிடலாம்…ன்னு 3 -3 மினிட்டா வச்சா ரொம்ப நேரமாகுதே.. 5 மினிட் வச்சா.. சீக்கிரம் தீபவளி லேகியம் பண்ணிடலாம்ன்னு ஒரு பேராசையிலே 7 மினிட்ன்னு செட் பண்ணிட்டேன்.. அன்னேரம் பார்த்த்து கிச்சனுக்கு வந்த அத்தை.. என்னமா பண்ணரே ன்னு கேட்க்க.. நான் எனக்கு வந்த brain wave ஐ பெருமையா சொல்லா… “இதை மைக்ரொவேவ்லே பண்ணினா சரியா வருமா… பண்ணினவங்க யாராச்சும் சொன்னாங்களா ? ?”ன்னு க்ராஸ் கொஷ்டிண் கேட்க… “செய்து தான் பார்ப்போமே எல்லாத்துக்கும் பர்ஸ்ட்-டைம்ன்னு ஒண்ணு இருக்கில்லே “”… ன்னு நான் என் தரப்பு வாதத்தை வைக்க… அவங்க சிவாஜி(கணேசன்) ரேஞ்சுக்கு மோவய்கட்டையை தடவி.. “ஹ்ம்.. முதல் முறையா முயர்ச்சி பண்ணரே.. ஒரேடியா 7 min எல்லாம் வேண்டாம் 2 – 3 மினிட் குடு.. போது.. பார்த்து பார்த்து செய்யல்லாம் ” “…. ( அனுபவம் பேசுகிரதே.. ஆனா யாரு கேக்கரா…).. “3 மினிட் ன்னா ரொம்ப லேட்டாகும்… 5 மினிட் வைக்கறேன்… சீக்கிரம் முடிஞ்சுடும்.. ஒண்ணும் டெண்ஷணாகாதீங்க…”ன்னு தைரியம் (!!!!!) சொல்லி 5 மினிட் க்கு வச்சேன்… அங்கே தான் பிடிச்சது வினை
5 மினிட்டுக்கப்புறம் மைகிரோவேவ் தன் வேலை முடிஞ்சதுன்னு என்னை கூப்பிட.. நானும் ஆசை ஆசையா போனேன்… நான் 2 மணி நேரமா கிண்டின தீபாவளி மருந்து.. நல்லாதான் திரண்டு வந்தது.. ஆனா.. கரிஞ்சு-கரிக்கட்டையா தீஞ்சு போயிடுச்சு… இதை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரதுக்குள்ளே… தீஞ்ச் வாசனை மூக்கை துளைக்க (நேத்து வரை ஸ்வீட்-காரம் கம கமன்னு இருந்த வீடு).. எல்லாரும் “என்ன ஆச்சு.. என்ன ஆச்சு ன்னு ” கேட்டுகிட்டே கிச்சண் பக்கம் வர… (தீஞ்ச மருந்தை) பவுளேந்தி நான் பரிதாபமா நின்னுகிட்டிருந்தேன்.
“பாட்டி அப்பவே சொன்னாங்கப்பா .. 2 -3 மினிட் போதும்ன்னு.. ஆனா அம்மா தான் கேக்கலை”ன்னு ரெண்டு வாண்டும் உள்ளது உள்ளபடியே ஒளிவு மறைவு இல்லாம
அவர் ஆபீஸிலிருந்து வந்ததும் நடந்ததெல்லாம் ஒண்ணு விடாமா ஒப்பிச்சாச்சு.. ( என் பசங்க பொய்யே சொல்லமாட்டங்க… )…எனக்கு அடடா.. நாம adventerous ஆ எடுத்த ஒரு முயர்ச்சி இப்படி backfire ன்னு வருத்தம்.. 2 மணி நேரமா கிண்டி-கிண்டி வந்த தோள் வலி … சக்கரை – நெய் – இஞ்சி .. பொருளெல்லாம் பாழாபோச்சேன்னு ஆதங்கம்.. எல்லாம் ஒட்டுமொத்தாமா தாக்க… rest of the day கம்முன்னு இருந்தேன்…எதுவும் பேச எனகிட்டே தெம்பில்லே…
வேறேன்ன… அடுத்தநாள் மறுபடியும் கடைக்கு போய் 200gms இஞ்சி வாங்கி.. எல்லாம்.. ரிபீட் டெலிகாஸ்ட் (மைனஸ் மைரோவேவ்)… கடாய் அண்ட் சட்டுகம் கம்பனியே கதின்னு கிண்டியே செஞ்சோம் (பரிதாபமா இருந்த என்னை பார்த்து அத்தையும் மாமாவும் turn-by-turn அப்பப்போ கிண்டி குடுத்தாங்க)..ஆக… டம்மி க்ளியர் பண்ண சர்வரோக நிவாரிணியா இருக்கும் இந்த மருந்தை 2 முறை பண்ணி தீபாவளிக்கு ஆயத்தமானோம்…
மருமகள்ஸ்… பிளீஸ்.. இனிமே வீட்டிலே பெரியவங்க ஏதாவது சொன்னா…(அத்தை 2 மினிட் போதும்ன்னு சொன்னதை கேட்டிருந்தா… ) அதை மொத்தமா நிராகரிக்கரதுக்கு முன்னாடி.. ஒரு டிரையல் குடுத்து பாருங்க.. இல்லைன்னா.. என் கேஸ் தான்.. அடுத்த பதிவு குட்டீஸ் ஸ்பெஷல்.. அதான் .. பட்டாசு – மத்தாப்பூ- ராகெட் எல்லாம் உண்டு
ஹய்யா .. எனக்குத்தான் first குளோப் ஜாமுன்..
//”பாட்டி அப்பவே சொன்னாங்கப்பா .. 2 -3 மினிட் போதும்ன்னு.. ஆனா அம்மா தான் கேக்கலை”ன்னு ரெண்டு வாண்டும் உள்ளது உள்ளபடியே ஒளிவு மறைவு இல்லாம அவர் ஆபீஸிலிருந்து வந்ததும் நடந்ததெல்லாம் ஒண்ணு விடாமா ஒப்பிச்சாச்சு//
நல்ல பசங்க… என்னைமாதிரியே..
Deepa,
Your post reminds me of how SPB sang that song without stopping his breath for a while. Avlo suvaiyo suvvai a eruku indha post.
Summa sweets per muttam sonna okva. Konjam pics atleast add pannierundha we wud have thought, had a bite. Che che ipdi ellam yemathiteengley Deepa.
Its so much fun and creative.
ஓவன் கதை சூப்பர்.. பாடம்:) .
நானும் என் தீபாவளிக்கதையை போடனுன்னு பாக்காறேன்.. நேரமில்லை.. போடறதுக்குள்ள பொங்கல் வராம இருக்கனும்.. 🙂
ரூப்ஸ்..
வாங்க…
//நல்ல பசங்க… என்னைமாதிரியே..///
என்னா அம்மாவை போட்டுகுடுகரதிலையா !!! :O
பாராட்டுக்கு நன்றி பிர்யா..
///Summa sweets per muttam sonna okva. Konjam pics atleast add pannierundha we wud have thought, had a bite. Che che ipdi ellam yemathiteengley Deepa.
/// .. பண்ணின ஸ்வீட்டஸை ரெண்டு பேர் கண்ணிலிருந்து ஒளிச்சு வைக்க நான் பட்ட பாடு இருக்கே.. தீபாவளி வரையாவது எல்லாம் வேணுமில்லே..
.. இதிலே படம் எடுக்கணும்ன்னு நம்ம photography class லே சொல்லரா மாதிரி lighting எல்லாம் செட் பண்ணி திரும்பி பாக்கிரதுக்குள்ளே.. மொத்தமும் காணாம போய்டும்… அதான்.. நோ படம்ஸ்
வாங்க முத்தக்கா
.. தீபாவளிக்கு பதிவு எல்லாரும் தான் போடுவாங்க.. தீபாவளிக்கப்புறம் எல்லாரும் குடுத்த ஸ்வீட்ஸ்-காரம் என்ன ஆச்சு.. காலியாச்சா.. இல்லை டிஸ்ட்ரிப்யூஷண் பண்ணினீங்களா.. ஏன் !.. ன்னு ஒரு பதிவு போடுங்க.. ஸ்வாரஸ்யமா இருக்கும்
ஆஹா! செம அமர்க்களம்.
அதுவும் வாண்டுகள் திருவிளையாடல் சூப்பர்!
கிச்சனில் திருவிழா, இதில் மாடர்ன் டெக்னாலஜியோட காமெடி என நிஜமாவே கிண்டிக் கிளறி விட்டீர்கள்!
வாங்க குமார்
படிக்கும் போது எனக்கு கூட சூப்பர்ன்னு தான் இருக்கு…
பராட்டுக்கு நன்றி
//
மருமகள்ஸ்… பிளீஸ்.. இனிமே வீட்டிலே பெரியவங்க ஏதாவது சொன்னா…
அதை மொத்தமா நிராகரிக்கரதுக்கு முன்னாடி.. ஒரு டிரையல் குடுத்து பாருங்க..
//
golden words
repeatey
nice post!!
பாராட்டுக்கு நன்றி சிவா…
ரிபீட்டு ரிபீட்டுன்னெல்லாம் சொல்லி எங்களை ( மருமகள்ஸ்) ஐ வெறுப்பேத்த கூடாது.. ஆமா.. யாராவது சொல்லி செய்யரதா…சான்ஸே இல்லே