Billion beats – Shri.Dr.A.P.J.Kalam ன் கனவு உங்கள் கணினியில்

ரசியல்ன்னாலே ஒதுங்கி போகிறவங்க தான் நம்மிடையே அதிகம் இருக்காங்க… நான் சொல்லரது.. சாதாரண பொதுமக்கள்ஸ்… அரசியல நாட்டம் உள்ளவர்களை அவதூறாக பேசறேன்னு தயவுசெய்து நினைக்காதீங்க.. ஏன்னா… இது ஒரு அரசியல் பதிவு கிடையாது.. அரசியல் சார்ந்த பதிவும் கிடையாது.. ஸோ… “நீயா- நானா… ஒரு கை பார்த்துடலாம் “…ன்னு வரும் வாசகர்களே… இங்கே உங்களுக்கு தீனீ இல்லை… ஸொ.. டாடா.. பை பை

ஆங்.. விஷயத்துக்கு வருவோம்.. நான் என்ன சொல்லிகிட்டிருந்தேன்… ஆ.. ஞாயாபகம் வந்திடுச்சு.. அரசியல்ன்னாலே ஒதுங்கி போகிரவங்க தான் நம்மிடையே அதிகம் இருக்காங்க…இதுக்கு பல காரணம் சொலலாம்.( என்னனு சொன்னா கலவரம் வந்துடும்..). இந்த மாதிரி ஒரு தருணத்தில் தான் திரு.A.P.J.Abdul Kalam நமது 11th குடியரசு தலைவராக நமக்கெல்லாம் July 25, 2002ல் அறிமுகமானார். இதுக்கு முன்னே விஞ்யான துறையை சார்ந்தவர்களுக்கு (Scientific Community) அவரை குறித்தும், அவரது சாதனைகளை குறித்தும் தெரிந்தே இருந்தது. ஆனால், இதெல்லாம் பொதுமக்கள்ஸுக்கு, அவர் குடியரசு தலைவராக வந்தப்புறம் தொடர்ந்த மீடியா கவரேஜில் தான் தெரிய வந்தது…( அட நல்லதுகூட நிறைய நடக்குதுப்பா நாட்டுலே..)

அவர் பதவியில் இருந்த காலத்தில் அவரைதொடர்ந்த மீடியாவை நாமும் தொடர்ந்து வந்தால்.. ஒரு விஷயம் சும்மா நச்சுனு இருக்கும்.. அது தான்.. அவர் அடிக்கடி சொல்லும் “கனவு காணுங்கள்”… (இதை வச்சு எத்தனை பேர் நக்கலடிச்சிருப்பீங்க)… கொஞ்சம் யொசிச்சு பாருங்க..என்ன ஒரு சாதாரண வாசகம்..ஆனால் எவ்வளவு ஆழமான கருத்து… பிரமோஷன்்..ங்கிற கனவோடு தானே நாமெல்லாம் ஆபீஸ்லே மாடா ஒழைச்சு-ஓடா தேயறோம்…. நம்-நம் சொந்த வாழ்க்கையே ஒரு கனவுக்கு பிறகு இன்னொரு கனவுன்னு முன்னேறிக் கிட்டிருக்கோம்.

திரு.கலாமும் கனவு கண்டார்…. தன் வாழ்க்கைங்கிர வட்டத்தை விட்டு வெளியே வர கனவு கண்டார்… வந்தார், ,,,தான் கற்ற கல்வியை நாட்டுக்கு உயபோகமாக பயன்படுத்த ஆசைப்பட்டார்… செய்தார் / செய்துகொண்டே இருக்கிறார்,,,,தான் காணும் கனவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முன்வந்தார்… பதவி காலத்தில் கிராமம்-நகரம் பாராமல் மாணவர்களை சந்தித்தார்.. கன்வுகளை தந்தார்… கனவு காண துணிவை குடுத்தார்.

இப்பெல்லாம் பேப்பர் -டீவீ..ந்யூஸ் எதை பார்த்தாலும் முதல்லே கேக்கர செய்தி … கொள்ளை – கொலை – ஊழல் எல்லாம் தான். இதெல்லாம் தேவையில்லையா… நாட்டில் நடக்கும் பயங்கரங்களை தெரிஞ்சிகிட்டாதானே நாம ஜாக்கிரதையா இருக்க முடியும்ன்னு நீங்க சொல்லரது எனக்கு புரியுது.. ஆனா.. பக்குவம் அடைந்த நமக்கே சில செய்திகள், சில நேரத்தில் ..நம்மை ஒரு ஆட்டு ஆட்டுதே… பாவம் வளந்து வரும் குழந்தைகள் மனதில் இது எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் ? ?… அவங்களுக்கு ஏற்க்கணவே… டெஸ்ட் – ஹோம் வர்க் – அஸ்ஸைன்மெண்ட்ன்னு ஆயிரம் டெண்ஷண்.. இதெல்லாம் எதுக்கு பண்ணராங்க (.. இல்லே.. பெற்றோர்களாகிய நாம்… படி-படி ன்னு அதுகளை ட்ரில் வாங்கறோம்)…விஞ்யானியாகவோ -டாக்டரோ – இஞ்சினீயரோ – மீடியா பிரொபஷணலோ – ஏதோ ஒரு துறையிலே தேர்ந்து வரணும்ன்னுதானே… இந்த மாதிரி ஒரு இலக்கை வைத்து அந்த பிஞ்சுகள் முன்னே நடக்கும்போது எத்தனை sucess storeis ஐ எதிர்கொள்ளறாங்க… விரல் விட்டு எண்ணலாம்…. அல்லது தனது சொந்த முயற்சியால் வெற்றிபெற்றவர்களில் நமக்கு எத்தனை பேரை தெரியும் ?.. சொல்லுங்க பார்க்கலாம்.. … ….

தனது அயரா முயர்ச்சியால் வெற்றி பெற்றவர்களை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டவும் , முயற்சி உடையார் – இகழ்ச்சி அடையார்ங்கிர தத்துவத்தை மாணவர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கவும் திரு.கலாம் முன்வைத்த கனவை HAL -bangalore ஐ சேர்ந்த சில ஆர்வம்மிக்க படைப்பாளிகள் கொண்ட குழு, முழூ மூச்சுடன் செயல்பட்டு… Billion Beats ங்கிர இணைய-செய்தித்தாளை nov-14 அன்று திரு.கலாமின் அனுமதி -ஆசீர்வாதத்தோடு அவரே துவக்கியும் வைத்தார்…

நான் குடுத்திருக்கும் சுட்டியை க்ளிக்கினால்… அங்கே Billion Beats ன்னு நீங்க பார்க்கலாம்… அதை க்ளிக்கி தற்போதைய இதழை pdf வடிவில் டவுண்லோட் பண்ணி படிங்க… இந்த பத்திரிக்கையில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா… இது முழுக்க முழுக்க sucess stories மற்றும் … inspirational articles மட்டுமே பிரசுரிக்கும்… ஒரு மூலையிலே கூட… crime and punishment இருக்காது.

இதிலே குறிப்பிடத்தக்க இன்னொரு விஷயம் என்னான்னா… சொந்த முயற்சியால்.. பல தடைகளை தாண்டி சாதிக்க நினைச்சதை சாதிச்ச யாரையாவது உங்களுக்கு தெரியுமா ? ? ?.. அது மற்றவர்களுக்கு தெரியப்படுத்தணும்ன்னு உங்களுக்கு ஆர்வம் உண்டா.. அப்போ.. நீங்க பண்ணவேண்டியதெல்லாம்… சம்பந்தப்ட்ட நிகழ்வை எழுதி billionbeats@gmail.com ங்கிர முகவரிக்கு உங்கள் passport size photo – phone number – address உடன் ஈ-மெயில் பண்ணுங்கள்… ஆசிரியர் குழு அதை கண்டிப்பாக பரிசீலனை செய்து பிரசுரிக்கவும் செய்வார்கள்

திரு. கலாம் கண்ட கனவு நினைவாக.. உங்கள் கனவுகளையும் எல்லாருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்… உங்கள் நண்பர்கள் வட்டத்துகு திரு.கலாமின் கனவுகளை நினைவாக்க முயற்சிக்கும் இந்த இணையதள-செய்தித்தாளை குறித்து மடல் அனுப்புங்கள் – சாட் செய்யுங்கள்

8 Replies to “Billion beats – Shri.Dr.A.P.J.Kalam ன் கனவு உங்கள் கணினியில்”

  1. நன்றி ரூப்ஸ்
    நேரம் கிடைக்கும் போது pdf ஐ படிச்சு பாருங்க..

  2. செய்தி தொடர் மெயில் மூலமாக படித்தேன். நல்ல விசயம் எல்லாரையும் சென்று அடையட்டும்.

  3. That’s a very interesting news. I remembered you when the news came in Times of India and now the link in the blog! You must be a true blood fan of APJ…like me 🙂

    Great info. Thanks.

  4. They are doing something best, I wish everyone get success by listening to others inspiring stories. Thanks for make us aware of this news paper.

    If Kalam was just been a scientist, we don’t get so much to learn from him, his thoughts about India, children and more… I will try to go and check it sometimes often to learn… Thanks deepa 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *