ஈ — பெயர் வந்த கதை, பாட்டி சொன்னது !!!

மொய்ச்ச பண்டத்தை திங்காதேன்னு பெரியவங்க சொன்னா சின்னப்பசங்க கேக்கமாட்டங்கன்னு எங்க பாட்டி ஒரு கதை சொல்லுவாங்க.. அது “ஈ” க்கு எப்படி ஈ-ன்னு பெயர் வந்ததுன்னு ஒரு கதை.. அந்த கதையிலெ ஒரு ஈ எங்கெல்லாம் போய், யார் யார் கிட்டே எல்லாம் “என் பெயர் என்ன ? ?”… ன்னு கேட்டுச்சாம்.. கடைசீயிலே ஒரே ஒரு மிருகம் தான் சரியா சொல்லிசாம்.. அப்போ கதை கேப்போமா !!!

..ஒரு நாள் தூங்கி எழுததும்.. நம்ம “ஈ” க்கு அதனுடைய பெயர் மறந்து போச்சு..
அப்போ.. ஒவ்வொருத்த்ரா பார்த்து “என் பெயர் என்ன ??? ” ன்னு கேட்டுச்சாம்.. !!

யார் யார் கிட்டேயெல்லாம் கேட்டுச்சு தெரியுமா ? ? ?
இதோ சொல்லறேன்.. கவனமா கேளுங்க..

அக்கம் பக்கம் பார்த்ததிலே..
பக்கத்திலெ இரு கன்னுகுட்டி இருந்துச்சாம்
அது கிட்டே போய்..என்ன சொல்லிச்சு தெரியுமா ? ? ?

கொழ கொழ கந்னே..
கன்னும் தாயே …. ( இது அம்மா பசு )
கன்னு மேய்க்கும் இடையா .. ( இது மாடு மேய்க்கும் பைய்யன்)
இடையன் கைய் கோலே…..(இது மாட்டுக்கார பைய்யன் கைய்யிலே இருக்கும் கோல்)

கோல் இருக்கும் கொடி மரமே … (இது கொடி மரத்திலே மேலே கட்டி வச்சிருப்பங்களே !)
கொடி மரத்தின் மீது இருக்கும் கொக்கே …( இது அந்த் கொடிமரத்திலே இருக்கும் கொக்கு )
கொக்கு வாழும் குளமே

குளத்தில் இருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா… ( இது மீன் பிடிக்க வலைப்போட்டவர்)
வலையன் கைய் சட்டி… ( இது அவர் மீன் சமைச்சு சாப்பிட வச்சிருக்கும் சட்டிப்பானை)

சட்டி செய்யிர கொசவா… (இது சட்டிப்பானை எல்லாம் செய்து கொடுப்பவர்)
கொசவன் குண்டெடுக்கும் மண்ணே… ( சட்டி- பானை எல்லாம் பண்ண அவர் மண் எடுக்கும் இடம்)

மண்ணில் வளரும் புல்லே
புல்லு தின்னும் குதிரே…
என் பேயர் என்ன.. ? ? ?

அப்போ குதிரை தான்… உன் பெயர் “ஈஈஈஈஈ”…. ன்னு சொல்லிச்சாம்

இப்போ தெரியுதா.. ஒரு ஈ.. எங்கெல்லாம் சுத்திட்டு வந்திருக்குன்ன்னு..
அதனாலதான் சொல்லரது.. “ஈ” மொய்ச்ச பண்டத்தை சாப்பிடக்கூடாதுன்னு..
என்னா.. இப்போ புரிஞ்சுதா..

எழுதினா தப்பு இருக்கும்ன்னு.. சொல்லி காட்டியிருக்கேன்..
கேக்கும்போது.. அவங்க அவங்க பாட்டி குரலை கற்பனை பண்ணி கேக்கணும்..
அப்போ தான்.. “உம்”.. கொட்டுவீங்க !!!

9 Replies to “ஈ — பெயர் வந்த கதை, பாட்டி சொன்னது !!!”

  1. ம்ம்ம்..ஈக்கு இப்படி ஒரு கதையா!! நல்லாருக்கு…;))

    இதே போல நம்ம சகபதிவர் பொன்ஸ் அக்கா ஒரு பதிவு போட்டதாக ஞாபகம். அதில் அவுங்களே சொந்த குரலில் பேசி அந்த கதையை சொல்லுவாங்க.

  2. வாங்க நர்சிம்
    .. “கடி” ன்னு சொல்லறீங்களா…

  3. வாங்க கோபிநாத்
    பாராட்டுக்கு நன்றி..
    பொன்ஸ் பதிவின் சுட்டி இருக்கா ?..
    நீங்க சொன்னப்புறம் கேக்கணும்ன்னு தோணுது

  4. பிரியா..

    இது நான் எழுதின கதை இல்லை.. நிஜமாவே பாட்டி வழி வந்த கதை..என் பாட்டி எனக்கு சொன்னது.. என் பசங்களுக்கு அவங்க பாட்டி சொல்லறாங்க..

  5. //எழுதினா தப்பு இருக்கும்ன்னு.. சொல்லி காட்டியிருக்கேன்..
    கேக்கும்போது.. அவங்க அவங்க பாட்டி குரலை கற்பனை பண்ணி கேக்கணும்..
    அப்போ தான்.. “உம்”.. கொட்டுவீங்க !!!//

    haa..haa..:))))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *