பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2
கடந்த 3 பாகத்திலே நாம் பார்த்த விஷங்களை ஒரு ரிவிஷண் மாதிரி பார்க்கலாமா..
- Virtual Assistance எந்த குறிப்பிட்ட துறைய்யையும் சார்ந்து இல்லை.
- உங்களுடைய திறமைய்யை இணையதாளம் மூலமாக செயல்ப்படுத்தி இன்னொருவருக்காக சில பல வேலைகள் செய்ய ஆர்வம் உண்டு என்றால் …. உங்களுக்கு Virtual Assistant ஆகும் தகுதி உண்டு.
- ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது… punctuality ரொம்பவே முக்கியம்… “திங்கள் கிழமை pdf file அனுப்பறேன்”.. ன்னு சொல்லும்போது… அது உங்களுடைய நேரப்படியா… அல்லது உங்கள் client ன் நேரப்படியா…ன்னு தெளிவுபடுத்தி.. கரெக்ட்டா மெயில் பண்ணணும்
- இது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்… Broad band Internt connection மிகவும் தேவை…
இனிமேல் நீங்கள் செய்யவேண்டியது.. நீங்கள் ஒரு Virtual Assistant என்று மார்க்கெட்டிலே உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கணும்… கிட்ட தட்ட… புதுசா கடை போடறா மாதிரி தான்… என்ன கடை – எங்கே இருக்கு – என்னமாதிரி சாமான் எல்லாம் உங்க கடையிலே கிடைக்கும்… இந்த மாதிரி விஷயங்கள் தான் உங்க VA Profile ம் சொல்லணும்
VA Profile ஐ 3 பாகமா பிரிக்கலாம்
- ஒரு VA Profile அமைக்க தேவையான நுட்ப்பங்கள்
- VA Profile எப்படி இருக்கவேண்டும் (structure and content)
- நம்முடைய VA Profile எப்படி மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது
இப்போ.. ஒரு VA க்கான எல்லா தகுதியும் (திறமை) உங்ககிட்டே இருக்கு, தடையில்லா இண்டர்னெட் வசதியும் இருக்கு, VA சாந்த வேலை செய்ய போதிய நேரமும் உங்க கிட்டே இருக்கு… இனிமே என்ன வேலைக்கு அப்பளை பண்ண வேண்டியது தான்…ன்னு நீங்க நினைச்சீங்கன்னா… அது மிகப்பெரிய strategic blunder.
ஏன்னா… You are going to work in the capacity of a Virtual Assistance. (இந்த வாக்கியத்தை யாராவது கரீக்ட்டா டமில்லே டிரான்ஸ்லேட் பண்ணி குடுங்கப்பா… பிளீஸ்).. அப்படி இருக்கும்போது… உங்களுக்கு Virtual Presence இருக்கணும். அதாவது இணையத்தில் உங்களுக்குன்னு ஒரு முகவரி இருக்கும்ன்னு Prospective Clients எதிர்பார்பாங்க… உங்களுடைய Homepage ன்னு வச்சுக்குவோமே !!
உடனே… domain Name ரெஜிஸ்டர் பண்ணவோ.. காசு குடுத்து டொமைன் வாங்கவோ கிளம்பிடாதீங்க…. பதிவெழுதறேன் பேர்வழின்னு இணையத்திலே இங்குட்டும் அங்குட்டும் சுத்தறீங்க இல்லே….கவனிச்சு பார்த்தோம்ன்னா.. நமக்கு தேவையான Resources எல்லாமே இலவசமா கிடைக்குது… ( அதான் பிளாகரும் வோர்ட்பிரெஸ்ஸும்… பிளாக் வாங்கலியோ பிளாகு…ன்னு போட்டி போட்டு விதரணம் பண்ணிகிட்டு இருக்காங்களே !!! ).
பிளாக் ( வலைப்பூ) வை பதிவெழுத மட்டும் தான் பயன்படுத்த முடியும்ன்னு நீங்க நினைச்சா.. it is time to think out of the box. பின்னூட்ட பகுதிய்யை தூக்கிட்டு, ஒரு பக்கத்துக்கு ஒரு பதிவு மட்டுமே காட்டும் படி செட்டிங்க்ஸ் பண்ணிட்டோம்னா… blog becomes your webpage..
சரி… இப்போ உங்களுடைய webpage url (அல்லது VA Profile page) தையாரா இருக்கு ( இதுக்காக சிரமம் எடுத்து ஒரு பிரத்தியேக வலைப்பு create பண்ணி அதை Virtual Assistance க்காக மட்டுமே பயன்படுத்துங்க..தொழில் பிக்கப் ஆனப்புறம் வேணா… தொழில் சம்பந்தபட்ட பிரத்தியேக பதிவுகளுக்கு இதை உபயோகப்படுத்தலாம்… அதுக்கு முன்னாடி.. வேண்டாம்)
இந்த VA Profile உங்களுடையது மட்டுமே.. நீங்க உங்களை எப்படி அறிமுகப்படுத்த போறீங்கங்கிரது தான் அடுத்த கட்டமான …. “ஐயா !.. நானும் இந்த வேலைக்கு அப்பளை பண்ணியிருக்கேன்.. சாம்பிள்குக்கு http://www.your_VA_Profile_url.com ஐ பார்க்கவும்” ன்னு சொல்லும்போது… clients க்கு ஒரு interest வரும்.. உங்களுடைய திறமை அவங்க வேலைக்கு உகந்ததான்னு வந்து பார்
த்து சரியா இருந்தா… ஒருவேளை உங்களுக்கே அந்த வேலையும் கிடைக்கலாம். )
இன்னும் ஒரு சின்ன ஆனால் முக்கியமான விஷயம்.. VA சாந்த செயல்களுக்கு பிரத்தியேகமா இரு gmail account ம் கிரியேட் பண்ணிக்கோங்க.. (gmail ன்னு ஏன் குறிப்பிட்டு சொல்லறேன்னா.. )இனிமேல் நீங்க பல online applications உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்… பெரும்பாலான online applications ஐ gmail கூட ஒருமைப்படுத்தியிருக்காங்க (integrate). இதனால் in the long run… ரொம்பவே உபயோகமா இருக்கும்.
அடுத்த பாகத்தில்….. பிரிவு 4.2 லே VA Profile எப்படி இருக்கவேண்டும் (structure and content) ஐ பார்க்கலாம்.
(தொடரும்…)
பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2
அடாடா! இப்படியெல்லாம் இருக்கா??
தமிழில் நிறைய புள்ளிகள் தேவையில்லாத இடங்களில் வருகிறது.
ம். நல்ல டிப்ஸ்கள். இது VA க்கு மட்டுமல்லாது பொதுவாகவே தேவையானதும் கூட.
ம்ம்ம்ம்.. அடுத்து.. அடுத்து.. :))
நன்றி குமார்..
.. proof read பண்ண தெரியலை.. நேரமும் இல்லை.. அதான் ( சாக்கு போக்கு தான்.. கண்டுக்காதீங்க !)
வாங்க சிவா..
ஆமா,,, Professional, personal and Vitual Correspondence தனியா வச்சிருந்தா தான் நல்லதுன்னு என் அபிப்பராயம்
\\மங்களூர் சிவா said…
ம். நல்ல டிப்ஸ்கள். இது VA க்கு மட்டுமல்லாது பொதுவாகவே தேவையானதும் கூட.
\\
ரீப்பிட்டே…;))
//Deepa said…
சஞ்சய்..
அடேங்கப்பா… படிக்கிர புள்ள…. போல இருக்கே !…//
இத படிச்சிட்டு எனக்கு அழுகை அழுகையா வருதுக்கா.. :((… இதுவரைக்கும் யாரும் என்ன பாத்து இப்டி சொன்னதில்லை.. :(((.. ரொம்ப நன்றிக்கா..
// என்னா ஆர்வம்.. என்னா ஆர்வம்..
போயிட்டு திங்கக்கிழமை வாங்க… சனி – ஞ்யார் ஸ்கூல் லீவு//
ஓ.. இது அரசாங்க பள்ளியா? :P.. தனியார் பள்ளியா இருந்தா ஞாயித்துக் கிழமை கூட ஸ்பெஷல் க்ளாஸ் இருந்திருக்கும்.. 😛
lol.. sanjay
From the site:
http://satrumun.blogspot.com/2007/08/blog-post_6395.html
"மாய யதார்த்தம் (virtual reality) கொண்டு பூதவுடலுக்கு அப்பால் உணர்வதை, உணர வைப்பதில் அறிவியல் வெற்றி கண்டுள்ளது."
ஏன்னா… You are going to work in the capacity of a Virtual Assistance. (இந்த வாக்கியத்தை யாராவது கரீக்ட்டா டமில்லே டிரான்ஸ்லேட் பண்ணி குடுங்கப்பா… பிளீஸ்)..
எனவே, மேலே உள்ளதை "ஏன்னா… நீங்கள் மாய உதவியாளர் என்ற பொறுப்பில் பணியாற்றப் போகிறீர்கள்" என்று மொழிபெயர்க்கலாம்.
தாஹா
வணக்கம் தாஹா
//மாய உதவியாளர்//
ஏதோ மாயாப்ஜார் – விட்டலாச்சார்யா படம் மாதிரி சொல்லரீங்க..
இதை இப்படியே buyers கிட்டே சொன்னா… " காசு வாங்கி மாயமா மறைஞ்சிடுவீக்ன்களா ?? "" ன்னு கேட்ப்பாங்களே !!
A Very literal & amusing translation though!
எனக்கேத்த மாதிரி தெரியுதே
அப்படியே கொஞசம் காலை காமிங்க தொட்டு கும்புட்டுக்கறேன்
ரொம்ப நாளா இந்தமாதிரிதான் தேடிக்கிட்டிருக்கிறேன். சாமி
சரியான வழிகாட்ட ஆளில்லாம இருந்தேன். கொஞ்சம் உதவி செய்யுங்க சாமியோவ்
இனியன் பாலாஜி
வணக்கம் பாலாஜி
வருகைக்கு நன்றி. பதிவு உபயோகமாக இருந்ததுன்னு சொல்லரீங்க.என்ன மாதிரி உதவி எதிர்பார்க்கறீங்க ன்னு சொன்னா என்னால ஆனதை செய்யறேன்
Welcome towards virtualaancing
வணக்கம் பாலாஜி.
நீங்க மொபைல் நம்பரை பின்னூட்டத்திலே போட்டத்தால் அதை பிரசுரிக்கலை. மன்னிக்கணும்.
http://tinyurl.com/TeamDeepa இங்கே உங்களை பத்தி சில விவரங்கள் சொன்னால், மேற்படி என்னால என்ன உதவி செய்யமுடியும்ன்னு பார்க்கறேன்.
ஈமெயிலில் தொடர்வோம், ஓகே வா !
ஆல் தெ பெஸ்ட்