இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தமது நகைகள், முக்கியமான பத்திரங்கள் போன்றவைகளை வீடுகளில் வைப்பதில்லை. வங்கியில் பொருட்களைப் பாதுகாக்க பிரத்தியேகமாய் ஒதுக்கப்பட்ட பெட்டியில்தான் (Bank Locker) இவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். இந்த பெட்டியின் ஒரு சாவி உங்களிடமும், மற்றொரு சாவி வங்கி அதிகாரியிடமும் இருக்கும். இப்பெட்டியை திறக்கவேண்டும் என்றால், இரெண்டு சாவியையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும். இவ்விதம் இரண்டு சாவிகள் இருப்பதும், இருவரின் முன்னிலையில் மட்டுமே அப்பெட்டியை திறக்க முடியும் என்பதே இதன் பாதுகாப்பு முறை.
ஆய்வுகளின்படி இணையத்தில் அதிகமாக பார்வையிடப்படும் தளம் ஒருவரது மின் அஞ்சல்களை பார்க்கச்செய்யும் தளமுவரியே என்று தெரியவந்துள்ளன ( உதா: mail.yahoo.com , hotmail.com, gmail.com, aol.com போன்றவை). இணையதள பயணர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதே இதன் முக்கிய காரணம். அடுத்தபடியாக அதிகம் பார்வையிடப்பட்டும் / பயன்பாட்டில் இருக்கும் முகவரி “Forgot Password” என்று உள்ள “கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்” என்பதாகும். இது மின் அஞ்சல் தளங்களுக்கு மட்டும் அல்ல, Internet Banking தளங்களுக்கும் பொருந்தும்.
வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டக்கத்திற்கும், சற்றுமுன் சொன்ன ஆய்வுகளுக்கும் என்ன சம்பந்தம்?. உங்கள் பாதுகாப்புப் பெட்டகத்தின் சாவியை ஊரார் பார்வையில் படும்படி சாவிக்கொத்தில் தொங்க விடுவீர்களா?, மாட்டீர்கள் தானே !. அதேபோல் உங்கள் கடவுச்சொல்லையும் யாருடனும் பகிர்ந்துக்கொள்ள முன்வரமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வங்கிப் பெட்டகத்தின் சாவியை சோப்பில் (soap) பிரதி எடுப்பது போல், உங்களிடம் பேச்சுக் குடுக்கும் சாக்கில், சதாரணமாய் தோன்றும் விவரங்களை சேகரித்து உங்களது கடவுச்சொல் இல்லாமலே உங்கள் பயணர் கணக்கை ஊடுருவுபவர்களும் உண்டு.
பேச்சுவாக்கில் உங்களிடம் கேட்க்கப்படும் முக்கியமான கேள்விகள்.
- என்னை எங்கள் வீட்டில் ராகவன் என்பதை செல்லமா Rocks ன்னு சொல்லுவாங்க.. உங்களுக்கு என்னங்க செல்லப்பேரு. சும்மா ஜாலியா தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்.
- காதல் / பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?.. முதன் முதலில் அவரை எங்கு சந்தித்தீர்கள்?
- இன்று எனக்கு பிறந்த நாள் (நாமும் வாழ்த்து செய்தி அனுப்புவோம்), உங்க பிறந்த நாள் எப்பங்க?
- பல நாட்களாய் இணையத்திலே பேசுகிறோமே.. இது 9834585234 என் தொலைப்பேசி எண், உங்களுடையதை நானும் பத்திரப்படுத்திக் கொள்கிறேன்.
- இந்த முகவரியில் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் நான் என்ன செய்ய? இதல்லாமல் வேறு முகவரி வைத்திருக்கிறீகளா?
- கலிபோர்னியாவுக்கு வந்து 10 வருடமானாலும், எனக்கு இன்னமும் ஆட்டோகிராப் படத்தில் வரும் முதல் பள்ளிக்கூடம் நினைவில் இருக்கு. உங்களுடைய ஆரம்பப் பள்ளிக்கூடம் எங்க, கிராமத்திலேயா?
- எனக்கு நீல நிறம்ன்னா ரொம்பவும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தமான நிறம் எது?
- பூனை / நாய் / கிளி வளர்க்கிறீங்களா.. என்ன பெயர்?
இம்மாதிரி அல்லது இது போன்ற கேள்விகளை கடைசியாக இணையத்தில் எங்கு பார்த்தீர்கள் என்ற நினைவு இருக்கிறதா? இதே கேள்விகளை சற்று மாற்றியமைத்து சொல்கிறேன், நினைவுக்கு வருகிறதா பாருங்கள்
- Your favourite Nick Name.
- Where did you first meet your spouse
- Your Date of Birth
- Last four digits of your Telephone number
- Your alternate email id.
- Your first school / teacher’s name / best friend’s name
- Your favourite Color
- Name of your pet
இவை அனைத்தும் “கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்” என்ற சுட்டியை பயன்படுத்தும்போது, இதிலிருந்து ஏதேனும் ஒன்று உங்கள் பார்வைக்கு வைக்கப்படும். பயணர் கணக்கு துவங்கும் போது அக்கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலும், இப்பொழுது கொடுக்கும் பதிலும் ஒன்றாக இருந்தால், உங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைக்க அனுமதி தரப்படும். அதாவது, நேரடியாக உங்களது கடவுச்சொல்லை பயன்படுத்தாமலேயே உங்கள் பயணர்கணக்குகளை இம்மாதிரி களவாளப்படும் அபாயம் உண்டு.
அறிமுகம் கிடைத்த நண்பரைக் குறித்து தெரிந்துக்கொள்ள எல்லொருக்கும் ஆர்வம் இருக்குமே!. இதெல்லாம் சராசரியாக எல்லாரும் கேட்கும் கேள்விகள் தானே, இப்படி கேட்பது எப்படி தவறாகும்?. இம்மாதிரி கேட்பவர்களை எப்படி தவறானவர்கள் என்று நினைக்கலாம்? யதார்த்தமாய் கேட்கப்படும் கேள்விகளுக்கு இம்மாதிரி உள்குத்து வைத்து பார்ப்பது தவறல்லவா?.. என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம். நியாயமான பேச்சு!, நம்பிக்கையை நிலைநிறுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி!, தவறேதும் இல்லை.
ஆனால் சற்று யோசித்து செயல்படுங்கள் என்பதே என் கருத்து. சில நேரங்களில் நீங்களே உங்கள் கடவுசொல்லை மறக்கும் வாய்ப்பு உண்டு. ஞாபகமறதி என்பது 6 – 60 வரை எல்லோருக்கும் வரும். அம்மாதிரி சந்தர்பங்களில், எப்பொழுதும் நம் நினைவில் இருக்கும் விஷய்ங்களை இம்மாதிரி இலகுவான கேள்விகள் மூலமாக பதித்து, கடவுச்சொல்லை மாற்றி அமைப்பதற்கு பயன்படுத்தலாம். எச்சரிக்கை என்பது இம்மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொழுது, கடவுசொல் – பக்கத்தில் பதிந்திருக்கும் பதிலை சொல்லாமல், மாற்றி சொல்லுங்கள் என்று தான்.
உதா: கடவுசொல் பக்கத்தில், ஆரம்ப பள்ளியின் பெயர் என்ற இடத்தில் முதலாம் வகுப்பு படித்த பள்ளியை குறிப்பிட்டிருந்தால், நண்பர்கள் கேட்கும் பொழுது பத்தாவது படித்த பள்ளியின் பெயர் சொல்லாமே.
Better Safe Than Sorry / கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்று சொல்வதைப்போல், தகவல்கள் திருட்டுப்போன பிறகு அடித்துக்கொள்வதை விட, எச்சரிக்கையாக இருப்பது தானே புத்திசாலித்தனம்.