ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று சொல்வது போல், புத்தகங்களை படித்ததால் மட்டுமே ஒருவர் அறிவாளி ஆகிவிடமுடியாது. பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் படித்ததால் மட்டும் ” கல்வி ” பெற்று விட முடியாது. ” I have never let my schooling interfere with my education.” என்று Mark Twain சொன்னது எவ்வளவு பேருக்கு தெரியும். அப்படியே தெரிந்தாலும் நினைவில் வைத்திருப்பார்களா?. அனுபவங்களை எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் சரி பார்க்கும் பட்டியல்)Check list) தான் படிப்பு. குறிப்பிட்ட அனுபவத்தின் முடிவில் மனதில் எழும் கேள்விகளும், அதற்காக பதிலை தேடும் முயற்சியும் தான் நிரந்தமான கல்வி என்பது என் கருத்து.
பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் “Practical Class” என்றொரு வகுப்பு உண்டு. அதாவது புத்தகத்தில் படித்ததை நடைமுறையில் செயல்படுத்தி பார்ப்பது. உதா: ஒளி்க்கதிர்கள் நேர்க்கொட்டில் செல்கிறது என்று படித்தால் மட்டும் புரிந்துவிடுமா? .. திரைச் சீலைகள் மூடிய அறையில் Torch அடித்து பார்த்தால் இன்னும் நன்றாக விளங்குமே! காலப்போக்கில் இந்த “Practical Classes” நடைமுறை கல்வியை மேம்படுத்துவதற்கு பதிலாக ஏட்டுச்சுரைக்காயாய் மாறிப்போனது.
ஆனால், பஞ்சாப் மாநிலத்தில், குறிப்பாக சண்டிகர் நகரத்தில் உள்ள “விவேக் மேல் நிலைப் பள்ளியில்” நடைமுறைக் கல்வியைச் சீராக செயல்படுத்தி வருகிறார்கள். இங்கு 11 ஆம் வகுப்பைச் சார்ந்த சில மாணவர்களை ஒருங்கிணைத்து 8,000 ரூ. முதலீட்டில் InsPirated என்ற நிறுவனத்தை October 2008 இல் தொடங்கினார்கள். வர்த்தக துறையை (Commerce Dept) சேர்ந்த ஆசிரியர்கள் நிறுவனத்தை எப்படி நடத்தவேண்டும் என்ற ஆலோசனைகளையும் அவ்வப்போது அளித்து வந்தார்கள்.
எல்லா நிறுவனங்களிலும் உள்ளது போல், இங்கும் நிர்வாகிகள் குழு (Board Of Directors), பணியாளர்கள் (Staff Members), கண்காணிப்பாளர் (Supervisor), மேற்பார்வையாளர் (Administrator), பொருளாளர் (Finance manager) என்று எல்லாம் உண்டு. இந்த நிறுவனத்தை நடத்த தேவையான வேலையாட்களை பள்ளியில் படிக்கும் சக மாணவர்களைக் கொண்டே பூர்த்தி செய்தார்கள். இவர்களுக்கு ஏற்ற ஊதியமும் வழங்கப்பட்டது உதா: 1-கிலோ குடமிளகாய் நறுக்க 2ரூ. உணவுப்பொருட்கள் தயாரிப்பது, புத்தங்களுக்கு அட்டை போடுவது (Book Binding), காகிதங்களைப் பயன்படுத்திப் பொருட்களை தயாரிப்பது (Paper products), Chalk தயாரிப்பது என்று பல வேலைகளை செய்தார்கள். பள்ளியில் வகுப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாகவே இவர்கள் வந்து “நிறுவனத்தின் வேலைகளை” கவனிப்பார்கள். அதே மாதிரி மாலையில் வகுப்பு முடிந்த பிறகு “நிறுவனத்தின் வேலைகளை” செய்வார்கள். இந்த கூட்டு முயற்சியின் பலனாக பலனாக லாபம் 11 மடங்கு அதிகரித்தாக பள்ளி நிர்வாகம் தெரிவிக்கின்றன.
இந்த பள்ளிக்கூடத்தில் நடைமுறை கல்வித்திட்டத்தின் கீழ் இம்மாதிரி மாணவர்களால் நடத்தும் பல நிறுவனங்கள் உள்ளன. எல்லாமே கார்ப்பரேட் உலகை பிரதிபலிக்கும் விதம், பங்குதார்கள் (Shareholders), பங்காதாயம் (Dividend), சம்பளம் (Salary), ஒப்பந்த்ததில் வேலை செய்பவர்கள் (Contractors), லாப – நஷ்ட கணக்கு (Profit & Loss Accounts), சரக்குகளின் விவரங்கள் (Inventory), விலை விவரங்கள் (Invoice), செயல்பாட்டு அறிக்கை (Performance Reports) என்று எல்லாமே உண்டு. இது இவர்களுக்கு Hands–on–Experience ஐ தருகிறது. சரி, இப்படி மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்படும் நிறுவனங்கள், இவர்கள் பள்ளிப்படிப்பை முடித்து செல்லும் போழுது என்ன ஆகும்? நிறுவனத்தின் கணக்கில் இருக்கும் பணம் யாருக்கு – எப்படி சேரும்?.
குறிப்பிட்ட நிறுவனத்தை ஆரம்பிக்க முன்வரும் மாணவர்கள் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் குழுவில் (Board Of Directors) இடம் பெறுகிரார்கள். இந்நிறுவனத்தின் பங்குகளை 10ரூ என்ற விலைக்கு பள்ளியில் இருக்கும் மாணவர்களுக்கு / அங்கு வேலை செய்பவர்களுக்கு விற்கப்படுகிறது. உண்மையான பங்குச்சந்தையில் பங்குகளை allot செய்வதுபோல் தான் இதுவும். நிர்வாகிகள் குழுவில் இருக்கும் மாணவர்கள் பள்ளிப்படிப்பை முடிக்கும் வருடம், அந்த நிறுவனத்தை மூடிவிட்டு.. அதாவது liquidate செய்து, பணத்தை பங்குதார்களுக்கு முறையே கொடுத்துவிடுவார்கள். இதை பள்ளி கட்டாயப்படுத்துவதில்லை. இம்மாதிரி நிறுவனத்தை ஆரம்பிப்பதும், அதில் பங்குகொள்வதும், பங்குதார் ஆவதும்.. அவரவர் விருப்பம்.
இந்த திட்டத்தை கடந்த 13 வருடங்களாக விவேக் மேல் நிலைப் பள்ளி செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள மாணவர்கள் HSBC மற்றும் KPMG போன்ற நிறுவங்களுக்கு சென்று presenstation கொடுத்துள்ளார்கள். இத்திட்டத்தை செயல்படுத்த JA-India (Junior Achievement India) வின் கீழ் அரசு அனுமதி பெற்றுள்ளது.
நம் தாத்தா – பாட்டி காலத்தில் 5 வது வரை படித்திருந்தால் போதுமானது. இங்கே சொல்லி, அங்கே சொல்லி எப்படியோ வேலை கிடைத்துவிடும். அப்பொழுதெல்லாம் “மெட்ரிக் பாஸ்” , அதாவது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே அறிவாளி என்று சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது நிலவும் காலத்தில் எவ்வளவு படித்தாலும் போதாது. Freshers களிடம் கொஞ்சமும் தயவு இல்லாமல் “அனுபவம் உண்டா” என்று நிர்வாகம் கேட்கிறது.
பள்ளிகளில் மற்றும் கல்லூரிகள் இந்த JA-India ( Junior Achievement India ) திட்டத்தின் கீழ் .. அவரவர் நாட்டில் எப்படியோ அப்படி .. இம்மாதிரி செயல்களை மேற்கொண்டால், புத்தங்களில் மட்டும் படிப்பை பார்க்காமல், கல்வியின் அனுபவத்தை நன்றே அறிந்துகொள்ளலாமே.