ஏ ஆட்டோ !! … “புதுசு கண்ணா புதுசு” !!

For My English Readers :
Please be aware of these “hand tricks” while handling cash. This might have happened here in India, but it could happen anywhere where con is on.
இப்பெல்லாம் வீட்டிலே கார், அல்லது குறைஞ்சபட்சம் ஸ்கூட்டியாவது இருக்கும்ன்னு சந்தேகமே இல்லாம சொல்ல்லாம்… பஸ்ஸிலே நெரிசல் பட்டு போறவங்ககூட “இந்த வருஷமாவது ஒரு ஸ்கூட்டி வாங்க காசு சேத்துடணும்” ன்னு தான் போராடறாங்க… (..பதிவு பொருளாதாரம் பத்தி இல்லைங்கோ !!)
ஆனாலும் ஒரு ஆத்திர அவசரத்துக்கு “ஏ ! ஆட்டோ !!” ன்னு தான் கையை காட்டுவோம். அதுவும் நாம போகிர இடம் முக்கியமா பார்க்கிங் கிடைக்காத இடமா இருந்தா… “ஆட்டோவிலே போயிடலாம்ன்னு” தான் தோணும். தப்பில்லை, இப்போ இருக்கிர ட்ராபிக் நெரிசல்லே நினைச்ச இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு போய்ச்சேர முடியறதில்லை (..அப்படியே அவசரப்பட்டாலும் “போய்ச்சேர வேண்டிய” அபாயம் தான் கண்முன்னாடி வரும்) இதெல்லாம் பார்க்கும் போது ஆட்டோவே தேவலைன்னு தோணும்…. ஏன் ! பஸ்ஸிலே போக்க்கூடாதா??? ன்னு கேக்கலாம்…. போலாமே ! போலாமே ! அந்த சந்தர்பத்திலே போகலாம்ன்னா போகலாம்…..
ரெண்டு நாள் முன்னாடி பழைய பேப்பர் / பத்திரிகையெல்லாம் எடைக்குபோடலாம்ன்னு அடுக்கிகிட்டிருந்தப்போ ஒரு “ஆட்டோ” செய்தி கண்ணுக்கு தென்பட்டது… எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க … ரூம் போட்டு யோசிப்பாங்களோ !! ன்னு சொல்லவச்சது.
விஷயம் இதுதாங்க:

ஆட்டோ மீட்டர் சரியில்லை / ஆட்டோ ட்ரைவர் சொன்னது தான் ரேட் / நாம சொல்லற இடத்து வராம லந்து பண்ண்றதுன்னு … பொதுவாவே ஆட்டோக்கரங்க மேல எக்கசக்க புகார் இருக்கு. ஆனா, இது “புதுசு கண்ணா புதுசு”

பெங்களூர்லே இருக்கும் ஒருத்தர், ராத்தி 10 மணிக்கு மனைவியுடன் ஆட்டோலே போயிருக்கார். கிராக்கி ஏத்தும்போது மீட்டருக்கு மேலே 1.5 குடுங்க ன்னு நல்ல புள்ளையா சொல்லி, கொஞ்ச தூரம் போனதும் மீட்டர் ரிப்பேர் 300 /- ரூவா வேணும்ன்னு சொல்லியிருக்கார். இவரும் போனாப்போகுது ன்னு சரி ன்னு சோல்லியிருக்கார்.(….10 மணிக்கு மேலே இனொரு ஆட்டோவை தேடணும்.. மனைவி கூட இருக்காங்க… எதுக்கு ரிஸ்க்..)

வீட்டுக்கு வந்ததும் பர்ஸிலிருந்து 3 நூறு ரூவா நோட்டெடுத்து குடுத்திருக்கார். இந்தப்பக்கம் கண் சிமிட்டும் நேரத்துக்குள்ளே ஆட்டோக்காரர் “…சார் ! நீங்க 2 நூறு நோட்டும் 1 பத்து ரூபா நோட்டும் குடுத்திருக்கீங்க…. ” இருட்டிலே இவர் கண்ப்யூஸாயிட்ட மாதிரி சொல்லியிருக்கார். நம்மாளு என்னடானா “என் பர்ஸிலே 10 ரூபா வே அன்னைக்கு இருக்கலை, 3 நூறு ரூவா தான் இந்ததுன்னு” கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாத குறையா சொல்லரார்… இல்லை… புலம்பறார்…..

பிக்-பாகெட் அடிக்கறவங்க; கூட்டத்திலே செயின் திருடறவங்க நம்ம உடம்பிலே கைவச்சாலே நமக்கு சரியா சொல்லமுடியறதில்லை… அவ்வளவு லாவகமா இருக்காங்க. They have such nimble fingers. அப்படி இருக்கும்போது, அரைகுறை வெளிச்சத்திலே ( கிட்டத்தட்ட 10:30 – 11:00 pm… நம்ம ஊரு Street light பத்தி சொல்லவே வேண்டாம்..) இதே லாவகத்தோட, நூறு ரூபா நோட்டை மாத்தி 10 ரூபா நோட்டை வைக்க சில வினாடிகளே போதுமானது.
ஆட்டோ ட்ரைவர்கள் எல்லாரையும் மொத்தமா குற்றம் சொல்ல்லை. இது மாதிரி சிலபேரால.. நல்லவங்களைக்கூட சந்தேகக்கண்ணோட பார்க்கவேண்டிய கட்டாயத்திலே இருக்கோம்ன்னு சொல்லறேன்.
இந்த செய்தியை படிச்சதுக்கப்புறம், ஆட்டோவிலே போறபோதெல்லாம், ட்ரைவர் விவரங்கள் எழுதியிருக்குமே… Auto Driving License Display System (பெயர் – விலாசம் – லைசென்ஸ் எண் – ஆட்டோ எண் — இதோ இது மாதிரி) அதை மொபைல் போண்லே படம் எடுத்து வச்சுக்குவேன்…..சில நாட்களுக்கப்புறம் அழிச்சிருவேன்… இன்னாள் வரை எனக்கு கிடைச்சஆட்டோ-ட்ரைவர்கள் பொதுவாவே நல்லவங்களாத்தான் இருக்காங்க…(ட்ரைவர் சார்! நீங்க இதை படிக்கறீங்கன்னா.. இந்த மாதிரி ஆசாமிங்க உங்க எல்லாருடைய பெயரையும் கெடுக்கறாங்க)… ஆனாலும் இந்த செய்தி படிச்சதுக்கப்புரம் ஒரு வித paranoia ….

6 Replies to “ஏ ஆட்டோ !! … “புதுசு கண்ணா புதுசு” !!”

  1. நல்ல பகிர்வு தீபா. சில கடைகளில் கூட ஐநூறைக் கொடுக்கையில் நல்ல பிள்ளையாட்டம் நூறுக்கு சேஞ்சை கொடுப்பாங்க அவசரத்தில வாங்கிப்போமோன்னு. ஒரே கடையில் ரெண்டு முறை நடந்திருக்கு. ‘விழி’ப்பா இருந்துக்கணும்தான்:))! [விழி படம் அருமை].

  2. Deepa’s blog is one of the most entertaining and educational on the web. She is a tutor
    with tremendous patience, tact and knowledge.
    Signed,
    alex finkelstein
    eustis, florida USA

  3. @ராமலெட்சுமி
    நன்றி, உண்மை தான். எனக்கு இந்த 500 க்கு பதிலா 100 க்கு சேஞ்சை குடுக்கிறது நடந்திருக்கு. அதனாலெயே.. 500 ஐ தனியா குட்டி பர்ஸிலே வச்சிருப்பேன்.

  4. இதுக்கு பேசாம கடைகளில் கார்டை தேச்சிவிட்டு போகலாம்.நம்மூர் ஆட்டோவுக்கு இன்னும் 100 வருடம் ஆனாலும் வழி பிறக்காது.
    சிங்கப்பூர் டேக்ஸியில் கிரிட் கார்ட் கூட தேச்சுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *