ரெண்டு நாளாவே இங்கே பங்களூர்லே மப்பும் பந்தாரமுமா இருக்கு. ராத்திரியெல்லாம் ஜோறா மழை கொட்டோக்கொட்டுன்னு கொட்டுது.. பகலெல்லாம் ஒரே சிலு-சிலுன்னு இருக்கு. வளரும் பருவத்தில் பல காலம் கேரளதுலே இருந்ததாலோ என்னமோ… நான் மழைய்யை ரொம்ப ரசிப்பேன்…
சின்ன வயசிலே கூட.. மழை வந்துடுச்சே.. விளையாட போக முடியாதேன்னு நான் வருத்தப்பட்டதேயில்லைன்னு எங்க அம்மா சொல்லுவாங்க.. ஜன்னலோரமா ஒரு ஸ்டூல் போட்டு.. ஏதாவது புத்தகம் ( அந்தந்த வயசுக்கு ஏத்தாப்போல… காமிக்ஸ் – Mills and Boons – Keats & Shelly யின் கவிதை – என் diary ) எடுத்துவச்சு கொஞ்சம் நேரம் படிப்பேன்… நிறைய நேரம் மழைய ரசிப்பேன். படிப்புக்கு முக்கியத்துவம் ஏற ஏற… மழைய்யை ரசிக்க Keats & Shelly யை பக்கத்திலே வச்சுக்க முடியலை… என் ரெகார்ட் நோட் … Harper’s BioChemistry… யெல்லாம் தான் என் மழைக்கால தோழிகள்…
பொதுவா எல்லாரும் சம்மர்லே அவரவர் டேபிள் – சேர் ஜன்னல் பக்கம் போட்டுக்குவாங்க.. நல்லா காத்துவரும்ன்னு.. மழை காலத்துலே இதெல்லாம் இடம் மாறும்… மேலே சாறலடிக்குமில்லையா… ஆனால் நான் மழைகாலத்திலே தான் ஜன்னல் பக்கமா என் கட்டில் – டேபிள் எல்லாம். ..ஏன்னா.. காத்துவாக்குலே பளிச்-பளிச்ன்னு மழைத் துளி முகத்திலே விழும்போது அப்படி ஒரு சுகம். இதிலே என்ன விசேஷம்ன்னா என் மனசறிஞ்சு எங்கம்மா மழை கொஞ்சம் பலக்க ஆரம்பிச்சதும் சுட-சுட இஞ்சி போட்ட டீ தருவாங்க. sip-by-sip..டீய்யை உறிஞ்சி உறிஞ்சி .. டீய்யை ருசிப்பதா..மழைய்யை ரசிப்பதான்னு ஒரு ஸ்வீட் கண்பூஷண். மத்தியான வேளையாயிருந்தா.. அம்மாவும் நானும் சேர்ந்தே மழைய்யை ரசிப்போம் . அப்படியே விட்டத்தை பார்த்து அதையெல்லாம் நினைச்சுபார்த்தா… இன்னமும் மனசுக்குள்ளே சில்ல்ல்ன்னு ஒரு பீலிங்க்.
இப்போ நமக்கு கடமைகள் நிறைய இருக்கு. முன்னே மாதிரி நினச்சப்போ நினைச்சதை செய்ய முடியரதில்லை. ஆனாலும் லைட்டா ஒரு சான்ஸ் கிடைச்சா நான் விடறதில்லே…லீவு நாளிலே விட்டுலே எல்லாரும் மத்தியானம் தூங்கும்போது.. நான் மட்டும் மாடியிலே பால்கணியில் உள்ள பெஞ்ச் மேலே உட்காந்து… உட்காந்து..ஹ்ம்ம்… ஆகாசத்தை ரசிக்கும் சுகம் இருக்கே… அப்பப்பொ.. கல்கியின் பொன்னியின் செல்வன் படிப்பேன் .. இந்த மாதிரி அனுபவம் உங்களுக்கு உண்டா ?. ..
அதுவும் இன்னிக்கி மாதிரி climate ன்னா கேக்கவே வேண்டாம்… இந்த climate ஐ இன்னும் இன்னும் ரசிக்கணும்ன்னு நான் என் கம்ப்யூடரை மாடிக்கு மாத்திட்டேன்… இப்போ எனக்கு கம்ப்யூடரை தட்டிகிட்டே weather ஐ ரசிக்கலாம்.. இந்த மாதிரி நேத்திலே தான் எனக்கு எங்கம்மா ஞயாபகம் ரொம்ப வரும். என் adolescent வயதில் என் அம்மா தான் எனக்கு best friend. நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசுவோம்… மழைகாலத்திலே இதெல்லாம் Flashback மாதிரி வரும்.. மனசுக்குள்ளே அதெல்லாம் நினைச்சு சிரிச்சு-சந்தோஷமா இருப்பேன்.. அப்போதான்.. அடடா.. இப்போ.. இந்த நிமிஷம் அம்மா நம்ம கூட இல்லையேன்னு வருத்தம் பொத்திகிட்டு வரும்.
வெளியிலே பெய்யும் மழை மனசிலிருந்து கண்ணீரா வரும்.. 10 நிமிஷம் அழுது.. அப்புறம் அம்மாக்கு போன் பண்ணி 30 நிமிஷம் பேசினா மனசு லேசாயிடும்.. அப்புறம் என்ன.. இதையே நினைச்சுகிட்டு இருக்க முடியா.. நமக்குன்னு கடமைகள் இருக்கிலையா…மழை அது பாட்டுக்கு பெய்யும்.. நாம நம்ம கடமைகளை பார்க்க வேண்டியது தான்