செயற்கை விரலில் USB Drive

“மயூரி” என்று சொல்லும் பொழுது நம் எல்லோருடைய மனதிலும் “சுதா சந்திரன்” தான் சட்டென நினைவுக்கு வருவார். ஒரு திறமை மிக்க நாட்டிய கலைஞர், விபத்துக்குள்ளாகி தனது காலை இழக்க நேரிடுகிறது. பிறகு, ஜெயப்பூரில் தயாரிக்கப்படும் செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு, நாட்டியம் பழகி திறமையை இன்னொரு முறை சமுதாயத்திற்கு நிரூபிக்கிறார். இது தான் ” மயூரியின் கதை”. கதை என்று ஈரெழுத்துக்களிற் சொன்னாலும், இது சுதாவின் வாழ்வில் நடைபெற்ற உண்மைச் சம்பவம். 1984 இல் இத்திரைப்படம் வெளிவந்த பிறகு தான், நம் சமுதாயத்தில் செயற்கை அங்கங்களைக் குறித்து விழிப்புணர்வு வளரத் தொடங்கியது.
சமுதாயம் ஊனமுற்றவர்களை பாவிகள் போல் பார்ப்பதும், இவர்கள் விதியே என்று மூலையில் முடங்கிக்கிடந்த காலமும் மாறிவிட்டது. எந்தப் பேதமும் இல்லாமல் அவர்கள் எல்லோருடனும், எப்பொழுதும்போல் பழகி வருகிறார்கள். நாமும் அவர்களிடம் வேறு விதமாக ( மனதைப் புண்படுத்தும் விதமாக) பழகுவதில்லை. மக்களிடையே கல்வி அறிவும், தொழில்நுட்பத்தால் இம்மாதிரி நண்பர்களின் வாழ்வை மேம்படுத்த முடியும் என்ற புரிதலும் தான் இந்த மாற்றத்திற்குக் காரணம்.
சமுதாய மாற்றங்களும், மருத்துவத்துறையில் நிகழும் முன்னேற்றங்களும் ஒரு புறம் இருக்க, ஃபின்லாண்டை (Finland) சேர்ந்த ஜெர்ரி ஜலாவா (Jerry Jalava) என்பவர் தனது மருத்துவருடன் கலந்தாலோசித்து (மோதிர) விரலில் USB Drive பொருத்தி உள்ளார். ஒரு நாள் இரவு வேலை முடித்துவிட்டு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு வரும் வழியில், சாலையைக் கடக்க ஓடி வந்த மானோடு மோதிவிட்டார். மோதிய அதிர்ச்சியில் இவரது தோள் பை (Backpack) பைக்கின் அடியில் மாட்டிக்கொண்டது. தோள் பையின் ஒருபக்கம் இவரது இடது தோளிலும், இன்னொரு பக்கம் மோட்டார்சைக்கிளிலும் சிக்கிக்கொண்டது. இதனால் தன்னை முழுவதுமாக மோட்டார்சைக்கிளிலிருந்து அகற்றிக்கொள்ள முடியாமல் கிட்டதட்ட 58 மீற்றர்கள் அதே நிலையில் சறுக்கி – உருண்டார்.
பிறகு தன்னை ஒருமாதிரி நிதானப்படுத்திக்கொண்டு புகைபிடிக்க சிகிரட்டை எடுக்க முயன்ற ஜெர்ரிக்கு வித்தியாசமான உணர்வு. விபத்தின் வலி ஒருபுறம், என்ன நடந்தது என்று புரியாத குழப்பம் இன்னொருபக்கம். “என்ன செய்வது என்று புரியாமல், அவ்வழியே வருபவர்களின் கவனத்தை ஈர்க்க சிறிது நேரம் அலறிக்கொண்டே இருந்தேன்” என்று ஜெர்ரி தனது வலைப்பதிவில் சொல்லுகிறார். இவர் அலறுவதைக் கேட்டு கரிசனம் காட்டிய நண்பர் அருகே உள்ள மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றார்.
விபத்தால் உயிருக்கு எந்தச் சேதாரமும் இல்லை, ஆனால் இடது கையில் மோதிரவிரலில் பாதி சிதைந்துவிட்டது. எப்படி முயற்சித்தாலும் இவ்விரலைச் சரிசெய்ய முடியாது என்று மருத்துவர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். சிதைந்த பாகத்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிவிட்டார். சரி, தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போச்சு என்று ஜெர்ரியின் சம்மத்துடன் சிதைந்த பாகம் அகற்றப்பட்டது. இந்த விபத்து நடந்தது 07.05.2008 இல்.
தான் கணனித்துறையில் தொழிலாற்றுபவர் (Software Developer / Concept Designer) என்று சொன்ன பிறகு சிகிச்சை செய்த மருத்துவர், “அப்படியென்றால் உங்கள் விரலிலேயே “finger drive” (Thumb Drive என்று சொல்ல முடியாதல்லவா) பொருத்திக் கொள்ளுங்களேன் என்று வேடிக்கையாய்ச் சொன்னாராம். விஷயம் வேடிக்கையாய் ஆரம்பித்தாலும் ஜெர்ரி இதைக் குறித்து தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார்.
எப்படியும் சிதைந்த பாகத்திற்குச் செயற்கை விரலை ஒட்டவேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தொப்பி மாதிரி பொருந்திக்கொள்ளுவது போல வடிவமைக்கப்பட்ட செயற்கை விரல்தான் சரியாக இருக்கும்.(.. அதாவது.. பட்டம் விடும் பொழுது நூல் – மாஞ்சா விரலை வெட்டாமல் இருக்க ரப்பராலான விரலை பொருத்திக்கொள்வோமே.. அது போல). வேடிக்கையாய் ஆரம்பித்த யோசனைக்கு வடிவம் குடுத்திருக்கிறார் ஜெர்ரி. இப்பொழுது, USB Flash Drive பொருத்திய விரலுடன் வலம் வருகிறார்.
இதில் Micro SD card மூலம் இவர் தேவையான கோப்புகளைச் சேமித்துக்கொள்கிறார். தற்பொழுது Billix , CouchDBX மற்றும் Ajatus அதில் நிறுவியிருக்கிறார். ” இந்த செயற்கை விரல் நிரந்தரமாக என் கையில் ஒட்டப்படவில்லை. நான் எப்பொழுது வேண்டுமானாலும் இதைக் கழற்றி வைக்க முடியும். என் Flash Drive ஐப் பயன்படுத்தும் பொழுது, அதை விரலிலிருந்து கழற்றி, கணனி / மடிக்கணனியில் மாட்டிவிடுவேன். வேலை முடிந்த பிறகு எடுத்து விரலில் மாட்டிக்கொள்வேன்” என்று ஜெர்ரி சொலுகிறார்.
விரல் துண்டிக்கப்பட்டது சங்கடமான நிகழ்வுதான் என்றாலும், அதையும் ஒரு நல்ல வாய்ப்பெனக் கருதிச் செயற்பட்டிருக்கிறார் ஜெர்ரி. Oppurtunity At The Face Of Adversity என்பதை இவருடைய finger – drive என்றும் நமக்கு நினைவுபடுத்தும்.

முக்கியத்துவம் வாய்ந்த "முக்கியமற்ற தகவல்கள் "

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தமது நகைகள், முக்கியமான பத்திரங்கள் போன்றவைகளை வீடுகளில் வைப்பதில்லை. வங்கியில் பொருட்களைப் பாதுகாக்க பிரத்தியேகமாய் ஒதுக்கப்பட்ட பெட்டியில்தான் (Bank Locker) இவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். இந்த பெட்டியின் ஒரு சாவி உங்களிடமும், மற்றொரு சாவி வங்கி அதிகாரியிடமும் இருக்கும். இப்பெட்டியை திறக்கவேண்டும் என்றால், இரெண்டு சாவியையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டும். இவ்விதம் இரண்டு சாவிகள் இருப்பதும், இருவரின் முன்னிலையில் மட்டுமே அப்பெட்டியை திறக்க முடியும் என்பதே இதன் பாதுகாப்பு முறை.
ஆய்வுகளின்படி இணையத்தில் அதிகமாக பார்வையிடப்படும் தளம் ஒருவரது மின் அஞ்சல்களை பார்க்கச்செய்யும் தளமுவரியே என்று தெரியவந்துள்ளன ( உதா: mail.yahoo.com , hotmail.com, gmail.com, aol.com போன்றவை). இணையதள பயணர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதே இதன் முக்கிய காரணம். அடுத்தபடியாக அதிகம் பார்வையிடப்பட்டும் / பயன்பாட்டில் இருக்கும் முகவரி “Forgot Password” என்று உள்ள “கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்” என்பதாகும். இது மின் அஞ்சல் தளங்களுக்கு மட்டும் அல்ல, Internet Banking தளங்களுக்கும் பொருந்தும்.
வங்கியில் உள்ள பாதுகாப்புப் பெட்டக்கத்திற்கும், சற்றுமுன் சொன்ன ஆய்வுகளுக்கும் என்ன சம்பந்தம்?. உங்கள் பாதுகாப்புப் பெட்டகத்தின் சாவியை ஊரார் பார்வையில் படும்படி சாவிக்கொத்தில் தொங்க விடுவீர்களா?, மாட்டீர்கள் தானே !. அதேபோல் உங்கள் கடவுச்சொல்லையும் யாருடனும் பகிர்ந்துக்கொள்ள முன்வரமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் வங்கிப் பெட்டகத்தின் சாவியை சோப்பில் (soap) பிரதி எடுப்பது போல், உங்களிடம் பேச்சுக் குடுக்கும் சாக்கில், சதாரணமாய் தோன்றும் விவரங்களை சேகரித்து உங்களது கடவுச்சொல் இல்லாமலே உங்கள் பயணர் கணக்கை ஊடுருவுபவர்களும் உண்டு.
பேச்சுவாக்கில் உங்களிடம் கேட்க்கப்படும் முக்கியமான கேள்விகள்.

  1. என்னை எங்கள் வீட்டில் ராகவன் என்பதை செல்லமா Rocks ன்னு சொல்லுவாங்க.. உங்களுக்கு என்னங்க செல்லப்பேரு. சும்மா ஜாலியா தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்.
  2. காதல் / பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா?.. முதன் முதலில் அவரை எங்கு சந்தித்தீர்கள்?
  3. இன்று எனக்கு பிறந்த நாள் (நாமும் வாழ்த்து செய்தி அனுப்புவோம்), உங்க பிறந்த நாள் எப்பங்க?
  4. பல நாட்களாய் இணையத்திலே பேசுகிறோமே.. இது 9834585234 என் தொலைப்பேசி எண், உங்களுடையதை நானும் பத்திரப்படுத்திக் கொள்கிறேன்.
  5. இந்த முகவரியில் உங்களிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் நான் என்ன செய்ய? இதல்லாமல் வேறு முகவரி வைத்திருக்கிறீகளா?
  6. கலிபோர்னியாவுக்கு வந்து 10 வருடமானாலும், எனக்கு இன்னமும் ஆட்டோகிராப் படத்தில் வரும் முதல் பள்ளிக்கூடம் நினைவில் இருக்கு. உங்களுடைய ஆரம்பப் பள்ளிக்கூடம் எங்க, கிராமத்திலேயா?
  7. எனக்கு நீல நிறம்ன்னா ரொம்பவும் பிடிக்கும். உங்களுக்கு பிடித்தமான நிறம் எது?
  8. பூனை / நாய் / கிளி வளர்க்கிறீங்களா.. என்ன பெயர்?

இம்மாதிரி அல்லது இது போன்ற கேள்விகளை கடைசியாக இணையத்தில் எங்கு பார்த்தீர்கள் என்ற நினைவு இருக்கிறதா? இதே கேள்விகளை சற்று மாற்றியமைத்து சொல்கிறேன், நினைவுக்கு வருகிறதா பாருங்கள்

  1. Your favourite Nick Name.
  2. Where did you first meet your spouse
  3. Your Date of Birth
  4. Last four digits of your Telephone number
  5. Your alternate email id.
  6. Your first school / teacher’s name / best friend’s name
  7. Your favourite Color
  8. Name of your pet

இவை அனைத்தும் “கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்” என்ற சுட்டியை பயன்படுத்தும்போது, இதிலிருந்து ஏதேனும் ஒன்று உங்கள் பார்வைக்கு வைக்கப்படும். பயணர் கணக்கு துவங்கும் போது அக்கேள்விக்கு நீங்கள் அளித்த பதிலும், இப்பொழுது கொடுக்கும் பதிலும் ஒன்றாக இருந்தால், உங்கள் கடவுச்சொல்லை மாற்றியமைக்க அனுமதி தரப்படும். அதாவது, நேரடியாக உங்களது கடவுச்சொல்லை பயன்படுத்தாமலேயே உங்கள் பயணர்கணக்குகளை இம்மாதிரி களவாளப்படும் அபாயம் உண்டு.
அறிமுகம் கிடைத்த நண்பரைக் குறித்து தெரிந்துக்கொள்ள எல்லொருக்கும் ஆர்வம் இருக்குமே!. இதெல்லாம் சராசரியாக எல்லாரும் கேட்கும் கேள்விகள் தானே, இப்படி கேட்பது எப்படி தவறாகும்?. இம்மாதிரி கேட்பவர்களை எப்படி தவறானவர்கள் என்று நினைக்கலாம்? யதார்த்தமாய் கேட்கப்படும் கேள்விகளுக்கு இம்மாதிரி உள்குத்து வைத்து பார்ப்பது தவறல்லவா?.. என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம். நியாயமான பேச்சு!, நம்பிக்கையை நிலைநிறுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி!, தவறேதும் இல்லை.
ஆனால் சற்று யோசித்து செயல்படுங்கள் என்பதே என் கருத்து. சில நேரங்களில் நீங்களே உங்கள் கடவுசொல்லை மறக்கும் வாய்ப்பு உண்டு. ஞாபகமறதி என்பது 6 – 60 வரை எல்லோருக்கும் வரும். அம்மாதிரி சந்தர்பங்களில், எப்பொழுதும் நம் நினைவில் இருக்கும் விஷய்ங்களை இம்மாதிரி இலகுவான கேள்விகள் மூலமாக பதித்து, கடவுச்சொல்லை மாற்றி அமைப்பதற்கு பயன்படுத்தலாம். எச்சரிக்கை என்பது இம்மாதிரி கேள்விகளுக்கு பதில் சொல்லும் பொழுது, கடவுசொல் – பக்கத்தில் பதிந்திருக்கும் பதிலை சொல்லாமல், மாற்றி சொல்லுங்கள் என்று தான்.
உதா: கடவுசொல் பக்கத்தில், ஆரம்ப பள்ளியின் பெயர் என்ற இடத்தில் முதலாம் வகுப்பு படித்த பள்ளியை குறிப்பிட்டிருந்தால், நண்பர்கள் கேட்கும் பொழுது பத்தாவது படித்த பள்ளியின் பெயர் சொல்லாமே.
Better Safe Than Sorry / கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்று சொல்வதைப்போல், தகவல்கள் திருட்டுப்போன பிறகு அடித்துக்கொள்வதை விட, எச்சரிக்கையாக இருப்பது தானே புத்திசாலித்தனம்.

Virtual Assistant (பாகம் 4.2) – VA Profile

பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2

முந்தைய பதிவிலே ஒரு VA Profile ன் அவசியமும், அதுகு தேவையான நுட்ப்பங்களும் சொல்லியிருந்தேன். உங்களுக்கு blogs ஐ website ஆக மாற்றி அமைத்து உபயோகப்படுத்துவதில் சங்கடமாக இருந்தால் ( email ல் ஒரு வாசகர் கேட்டத்து போல.. ), free webdomain வழங்கும் தளங்களை பயன் படுத்தலாம். ஆந்த வரிசயில் Freewebs.com, geocities, googlepages போன்ற தளங்களில் சுலபமா website அமைக்கலாம்.. அவங்க வழங்கும் editors நம்ம தேவைக்கு போதுமானது ( unless you are seriously considering website development as a prospective VA job)
இனி, உங்க VA Profile url ல் என்ன என்ன விஷ்யங்கள் இருக்கவேண்டுங்கிர பட்டியலை பார்ப்போமா….

முக்கிய பக்கங்கள்

  1. Home Page / About Me
  2. சில பேர் ரெண்டெயும் தனி தனி பக்கமாக வெளியிடுவாங்க.. அதாவது முக்கிய திற்மை மற்றும் அதை சார்ந்த விவரங்கள் home page லேயும் , பெயர் , படிப்பு , திறமை ( skill information) ..ஐ about me பக்கங்களில் போடலாம்….

    அதுக்காக… நான் பிறந்தது மாயவரம் , வளந்தது ஐய்யனாவரம், படிச்சது பல்லாவரம் , ன்னு வள வள ன்னு இல்லாம சொல்லவந்ததை மட்டும் சரியா சொல்லி சாப்ட்டர் க்ளோஸ் பண்ணணும்… clients உங்க autobiography படிக்க வரலை

    இன்னொரு விஷயம்… இந்த இண்டர்வியூ அப்ப்ளிகேஷண் மாதிரி ( word document)
    Name :- Mr. abc
    Date of birth: 1 Jan 1978
    Age : 32 yrs 3 months
    Fathers name
    Mothers name ( என்ன கல்யாணத்துக்கா ஜாதகம் எழுதறீங்க…. )
    இது உங்க virtual Bio Data..
    ….இந்த மாதிரி மார்ஜின் போட்ட tabular data presentation குடுக்காதீங்க. Give the information as a structured paragraph.

  3. Services
  4. இதிலே என்ன மாதிரி வேலைகள் செய்ய உங்களை அணுகலாம்ன்னு ஒரு பட்டியல்… உதா:-
    Graphic Designer .. Logos, banners, letterhead
    Documentaion work .. copywriting, editing, proofreading
    WebReserch …. Datamining, data consolidation, online research ( இதிலே உங்க தனிப்பட்ட துறைய்யை சேர்த்துகிட்டா இன்னும் நல்லது…. உதா: – Biotech research , Statistical Reserch , Cultural Reserch)

  5. Demo / Gallery/ Prev work
  6. எந்த ஒரு client ம்.. முதலில் பார்க்கிரது இங்கே தான். இது முதல் முறை அதனால Prv work ன்னு குடுக்க ஒண்ணுமே இல்லை ( DONOT give information about your office work you are presently doing..) ன்னு நினைச்சா
    கர்ப்பனை குதிரைய்யை தட்டி விடுங்க… Graphic designers .. சும்ம 5 -10 logo டிசைன், 4-5 letter head ன்னு போட்டு விடுங்க.. (மற்றவங்களுக்கு… உங்க துறை சார்ந்ததா செய்து விவரங்கள் குடுங்க….ஒவ்வொருத்தருக்கும் இது வேறுபடலாம்)

  7. Contact Me
  8. முந்தைய பதிவிலே VA க்கு மட்டுமே தனிப்பட்ட மெயில் create பண்ண சொல்லியிருந்தேன் இல்லையா… அத முகவரிய்யை குடுப்பது தான் உகந்தது.. உங்க தனி நபர் தொலைப்பேசி எண்ணோ.. வீட்டு விலாசமோ குடுக்காதீங்க… அப்படி கேக்குரவங்க கண்டிப்பா clients ஆ இருக்க மாட்டாங்க… உங்க கூட பேசியே ஆகணும்ன்னு லந்து பண்ணரவங்களுக்கு Instant messenger லே voice chat பண்ணுங்க ( MY phone companz charges for overseas calls, I cannot accept your call, let us talk via skzpe, yahoo ன்னு சொல்லி கழண்டுக்கர வழிய்யை பாருங்க)

    விருப்பப்பட்டா.. உங்க messenger ID யும் குடுக்கலாம்.. ஆனால் நீங்க எந்த time zone (India – GMT+5.30) இருக்கீங்கங்கிரதை மறக்காம சொல்லிடுங்க.. கூடவே ஒரு டிஸ்கியும் போடுரது நல்லது… அதாவது “Owing to the difference in time zone, please allow 1 business day (24hrs) towards receiving the response”ன்னு..

    Punctuality ன்னு ஒண்ணு எங்கேயோ சொன்னாமாதிரி ஞ்யாபகம் வருதா… அது இங்கிருந்து தான் ஆரம்பிக்குது… சொன்ன மாதிரி 24 மணிநேரத்துக்குள்ளே சம்பந்தப்பட்டவருக்கு பதில் போடுங்க… helps build reputation.

Optional பக்கங்கள் / விவரங்கள்
இதை தன பக்கத்திலும் குடுக்கலாம் அல்லது சைடு-பார் லேயும் குடுக்கலாம்… ஆனா என்ன… கசாமுசான்னு கூடையிலே அள்ளி போட்டது மாதிரி இல்லாம.. பார்க்கிரவங்க கண்ணுக்கு organized ஆ குடுக்கணும்.

  • Links to other profiles ( எந்தெந்த தளங்களில் நீங்கள் உங்களை VA ஆக அறிமுகப்படுத்தியிருக்கீங்க…. Your V
    A profile at other freelancing sites … )— மற்ற freelancing sites ன் விவரங்கள் வரும் பதிவுகளில் தரப்படும்.
  • Currency convertor – இப்போ நீங்க இண்டர்நாஷணல் லெவெல்லே வேலைக்கு அப்பளை பண்ணணும்… இந்த சுட்டி உங்களுக்கும், உங்க clinets க்கும் உபயோகமா இருக்கும்
  • Feeds & links … தொழில் / தறமை சார்ந்த பதிவுகள் , வலைத்தளங்களுக்கான சுட்டி / feeds…. ( திறமைக்கு சம்பந்தமே இல்லாத்த பிளாக்கெல்லாம் சுட்டி குடுக்கரது நல்லதில்லை… professional touch போயிடும்…)
  • Your blog ..இது.. உங்கள் சாய்ஸ்… உங்க clients க்கு என்ன மாதிரி உங்களை Present பண்ண விருப்பறீங்க… இண்டர்வியூக்கு க்கு போகும்போது.. நல்லா ஐயர்ண் பண்ணின டிரஸ் தானே போட்டுகிட்டு ஜ்ம்முனு போவீங்க.. அதே மாதிரி உங்க சொந்த வலைப்பூவும் ஒரு impression கிரியேட் பண்ணணும்… (உங்க வலைப்பதிவுகளில் இப்படி இரு தொரணை இல்லைன்னு உங்களுக்கே தோணிச்சுன்னா…. Time to act professional… get yourself a new blog that maintains decency and decorum… அதுக்காக… personal experiences எழுதக்கூடாதுன்னு சொல்லலை… ஒரு dignity maintain பண்ணணும்ன்னு சொல்லறேன் )

இது எல்லாமே ஒரு rough draft தான். அவங்க அவங்க திறமைக்கு ஏற்றா மாதிரி விவரங்கள் , டெமோ எல்லாம் வேறுபடலாம்.

நீங்க ஒரு VA ஆக எல்லா திறமையும், தகுதியும் உள்ளவர்ன்னு உங்களுக்கே முழுமையா நம்பிக்கை வரணும்.. (அப்போ தானே அடுத்தவங்களை கண்வின்ஸ் பண்ண முடியும்).. அதுக்கு முதல்கட்ட home work… உங்க Profile விவரங்களை MSWord லே பதிவுபண்ண முயர்ச்சி பண்ணுங்க…
Do your own research, find out more about your field of work , Present them as to how a client can use your skills…

இத்தனையும் பண்ணி word லே Profile ரெடி பண்ணிட்டீங்கன்னாலே… நீங்க பாதி-VA.

( தொடரும்…. )
பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2

Virtual Assistant (பாகம் 4.1) – VA Profile

பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2

டந்த 3 பாகத்திலே நாம் பார்த்த விஷங்களை ஒரு ரிவிஷண் மாதிரி பார்க்கலாமா..

  1. Virtual Assistance எந்த குறிப்பிட்ட துறைய்யையும் சார்ந்து இல்லை.
  2. உங்களுடைய திறமைய்யை இணையதாளம் மூலமாக செயல்ப்படுத்தி இன்னொருவருக்காக சில பல வேலைகள் செய்ய ஆர்வம் உண்டு என்றால் …. உங்களுக்கு Virtual Assistant ஆகும் தகுதி உண்டு.
  3. ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது… punctuality ரொம்பவே முக்கியம்… “திங்கள் கிழமை pdf file அனுப்பறேன்”.. ன்னு சொல்லும்போது… அது உங்களுடைய நேரப்படியா… அல்லது உங்கள் client ன் நேரப்படியா…ன்னு தெளிவுபடுத்தி.. கரெக்ட்டா மெயில் பண்ணணும்
  4. இது நான் சொல்லாமலேயே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்… Broad band Internt connection மிகவும் தேவை…

இனிமேல் நீங்கள் செய்யவேண்டியது.. நீங்கள் ஒரு Virtual Assistant என்று மார்க்கெட்டிலே உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக்கணும்… கிட்ட தட்ட… புதுசா கடை போடறா மாதிரி தான்… என்ன கடை – எங்கே இருக்கு – என்னமாதிரி சாமான் எல்லாம் உங்க கடையிலே கிடைக்கும்… இந்த மாதிரி விஷயங்கள் தான் உங்க VA Profile ம் சொல்லணும்

VA Profile ஐ 3 பாகமா பிரிக்கலாம்

  1. ஒரு VA Profile அமைக்க தேவையான நுட்ப்பங்கள்
  2. VA Profile எப்படி இருக்கவேண்டும் (structure and content)
  3. நம்முடைய VA Profile எப்படி மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது

இப்போ.. ஒரு VA க்கான எல்லா தகுதியும் (திறமை) உங்ககிட்டே இருக்கு, தடையில்லா இண்டர்னெட் வசதியும் இருக்கு, VA சாந்த வேலை செய்ய போதிய நேரமும் உங்க கிட்டே இருக்கு… இனிமே என்ன வேலைக்கு அப்பளை பண்ண வேண்டியது தான்…ன்னு நீங்க நினைச்சீங்கன்னா… அது மிகப்பெரிய strategic blunder.

ஏன்னா… You are going to work in the capacity of a Virtual Assistance. (இந்த வாக்கியத்தை யாராவது கரீக்ட்டா டமில்லே டிரான்ஸ்லேட் பண்ணி குடுங்கப்பா… பிளீஸ்).. அப்படி இருக்கும்போது… உங்களுக்கு Virtual Presence இருக்கணும். அதாவது இணையத்தில் உங்களுக்குன்னு ஒரு முகவரி இருக்கும்ன்னு Prospective Clients எதிர்பார்பாங்க… உங்களுடைய Homepage ன்னு வச்சுக்குவோமே !!

உடனே… domain Name ரெஜிஸ்டர் பண்ணவோ.. காசு குடுத்து டொமைன் வாங்கவோ கிளம்பிடாதீங்க…. பதிவெழுதறேன் பேர்வழின்னு இணையத்திலே இங்குட்டும் அங்குட்டும் சுத்தறீங்க இல்லே….கவனிச்சு பார்த்தோம்ன்னா.. நமக்கு தேவையான Resources எல்லாமே இலவசமா கிடைக்குது… ( அதான் பிளாகரும் வோர்ட்பிரெஸ்ஸும்… பிளாக் வாங்கலியோ பிளாகு…ன்னு போட்டி போட்டு விதரணம் பண்ணிகிட்டு இருக்காங்களே !!! ).

பிளாக் ( வலைப்பூ) வை பதிவெழுத மட்டும் தான் பயன்படுத்த முடியும்ன்னு நீங்க நினைச்சா.. it is time to think out of the box. பின்னூட்ட பகுதிய்யை தூக்கிட்டு, ஒரு பக்கத்துக்கு ஒரு பதிவு மட்டுமே காட்டும் படி செட்டிங்க்ஸ் பண்ணிட்டோம்னா… blog becomes your webpage..

சரி… இப்போ உங்களுடைய webpage url (அல்லது VA Profile page) தையாரா இருக்கு ( இதுக்காக சிரமம் எடுத்து ஒரு பிரத்தியேக வலைப்பு create பண்ணி அதை Virtual Assistance க்காக மட்டுமே பயன்படுத்துங்க..தொழில் பிக்கப் ஆனப்புறம் வேணா… தொழில் சம்பந்தபட்ட பிரத்தியேக பதிவுகளுக்கு இதை உபயோகப்படுத்தலாம்… அதுக்கு முன்னாடி.. வேண்டாம்)

இந்த VA Profile உங்களுடையது மட்டுமே.. நீங்க உங்களை எப்படி அறிமுகப்படுத்த போறீங்கங்கிரது தான் அடுத்த கட்டமான …. “ஐயா !.. நானும் இந்த வேலைக்கு அப்பளை பண்ணியிருக்கேன்.. சாம்பிள்குக்கு http://www.your_VA_Profile_url.com ஐ பார்க்கவும்” ன்னு சொல்லும்போது… clients க்கு ஒரு interest வரும்.. உங்களுடைய திறமை அவங்க வேலைக்கு உகந்ததான்னு வந்து பார்
த்து சரியா இருந்தா… ஒருவேளை உங்களுக்கே அந்த வேலையும் கிடைக்கலாம். )

இன்னும் ஒரு சின்ன ஆனால் முக்கியமான விஷயம்.. VA சாந்த செயல்களுக்கு பிரத்தியேகமா இரு gmail account ம் கிரியேட் பண்ணிக்கோங்க.. (gmail ன்னு ஏன் குறிப்பிட்டு சொல்லறேன்னா.. )இனிமேல் நீங்க பல online applications உபயோகப்படுத்த வேண்டியிருக்கும்… பெரும்பாலான online applications ஐ gmail கூட ஒருமைப்படுத்தியிருக்காங்க (integrate). இதனால் in the long run… ரொம்பவே உபயோகமா இருக்கும்.

அடுத்த பாகத்தில்….. பிரிவு 4.2 லே VA Profile எப்படி இருக்கவேண்டும் (structure and content) ஐ பார்க்கலாம்.

(தொடரும்…)
பாகம்1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4.1 | பாகம் 4.2

ஈ — பெயர் வந்த கதை, பாட்டி சொன்னது !!!

மொய்ச்ச பண்டத்தை திங்காதேன்னு பெரியவங்க சொன்னா சின்னப்பசங்க கேக்கமாட்டங்கன்னு எங்க பாட்டி ஒரு கதை சொல்லுவாங்க.. அது “ஈ” க்கு எப்படி ஈ-ன்னு பெயர் வந்ததுன்னு ஒரு கதை.. அந்த கதையிலெ ஒரு ஈ எங்கெல்லாம் போய், யார் யார் கிட்டே எல்லாம் “என் பெயர் என்ன ? ?”… ன்னு கேட்டுச்சாம்.. கடைசீயிலே ஒரே ஒரு மிருகம் தான் சரியா சொல்லிசாம்.. அப்போ கதை கேப்போமா !!!

..ஒரு நாள் தூங்கி எழுததும்.. நம்ம “ஈ” க்கு அதனுடைய பெயர் மறந்து போச்சு..
அப்போ.. ஒவ்வொருத்த்ரா பார்த்து “என் பெயர் என்ன ??? ” ன்னு கேட்டுச்சாம்.. !!

யார் யார் கிட்டேயெல்லாம் கேட்டுச்சு தெரியுமா ? ? ?
இதோ சொல்லறேன்.. கவனமா கேளுங்க..

அக்கம் பக்கம் பார்த்ததிலே..
பக்கத்திலெ இரு கன்னுகுட்டி இருந்துச்சாம்
அது கிட்டே போய்..என்ன சொல்லிச்சு தெரியுமா ? ? ?

கொழ கொழ கந்னே..
கன்னும் தாயே …. ( இது அம்மா பசு )
கன்னு மேய்க்கும் இடையா .. ( இது மாடு மேய்க்கும் பைய்யன்)
இடையன் கைய் கோலே…..(இது மாட்டுக்கார பைய்யன் கைய்யிலே இருக்கும் கோல்)

கோல் இருக்கும் கொடி மரமே … (இது கொடி மரத்திலே மேலே கட்டி வச்சிருப்பங்களே !)
கொடி மரத்தின் மீது இருக்கும் கொக்கே …( இது அந்த் கொடிமரத்திலே இருக்கும் கொக்கு )
கொக்கு வாழும் குளமே

குளத்தில் இருக்கும் மீனே
மீன் பிடிக்கும் வலையா… ( இது மீன் பிடிக்க வலைப்போட்டவர்)
வலையன் கைய் சட்டி… ( இது அவர் மீன் சமைச்சு சாப்பிட வச்சிருக்கும் சட்டிப்பானை)

சட்டி செய்யிர கொசவா… (இது சட்டிப்பானை எல்லாம் செய்து கொடுப்பவர்)
கொசவன் குண்டெடுக்கும் மண்ணே… ( சட்டி- பானை எல்லாம் பண்ண அவர் மண் எடுக்கும் இடம்)

மண்ணில் வளரும் புல்லே
புல்லு தின்னும் குதிரே…
என் பேயர் என்ன.. ? ? ?

அப்போ குதிரை தான்… உன் பெயர் “ஈஈஈஈஈ”…. ன்னு சொல்லிச்சாம்

இப்போ தெரியுதா.. ஒரு ஈ.. எங்கெல்லாம் சுத்திட்டு வந்திருக்குன்ன்னு..
அதனாலதான் சொல்லரது.. “ஈ” மொய்ச்ச பண்டத்தை சாப்பிடக்கூடாதுன்னு..
என்னா.. இப்போ புரிஞ்சுதா..

எழுதினா தப்பு இருக்கும்ன்னு.. சொல்லி காட்டியிருக்கேன்..
கேக்கும்போது.. அவங்க அவங்க பாட்டி குரலை கற்பனை பண்ணி கேக்கணும்..
அப்போ தான்.. “உம்”.. கொட்டுவீங்க !!!

தீபாவளி கலாட்டா – பாகம் 2 (ஸ்வீட்டும் மருந்தும்)

தீபாவளின்னாலே.. புது துணிக்கப்புரம் நினைவுக்கு வருவது ஸ்வீட்ஸ்-காரம் தான் ( குட்டீஸ்… உங்களுக்கெல்லாம் பட்டாசு தான் பர்ஸ்ட்ன்னு ஆண்டிக்கு தெரியும்…அடுத்த பதிவு உங்களுக்கு தான் ஓகேவா !!). போன பதிவிலே சொன்ன மாதிரி .. நொறுக்குத்தீனி பண்ணரதுக்கும் வீட்டிலே பெரியவங்க அஜெண்டா போட்டாங்க (.ஹூஹ்ம்… நான் இல்லை… நான் அஜெண்டா போடலை…துணிமணிக்கு அஜெண்டா போட்டு சொதப்பினதே இன்னும் மறக்கலை…இன்னொரு அஜெண்டா பொட எனக்கு தெம்புமில்லே.. நான் இந்த விளையாட்டுக்கே வரலை)..அப்படீன்னு மனசு சொன்னாலும்.. பெரியவங்க பேச்சை பண்டிகை நிமித்தமா தட்ட முடியாம போச்சு

எல்லாருக்கும் பிடிச்ச குலொப்ஜாமுன் ,தனிப்பட்ட விருப்பதுக்கு ரவாலட்டு, மாலாடு , தேங்காய் பர்பி,7-கப் கேக், எல்லாம் ஸ்வீட்ஸ் வகையிரா… காரதுக்கு ரிப்பண் பகோடா , மிக்சர், முள்-முறுக்கு ( முத்துஸரம் ன்னு கூட சிலர் சொல்லுவாங்க), கோட்பளே ( இது கர்னாடகா ஸ்பெஷள்… வளையாட்டம் ரவுண்ட் ரவுண்டா பண்ணி எண்ணையிலே பொரிச்செடுக்கணும்).. மிச்சம் மீதி மாவு இருந்தா அது என் பொண்ணு முறுக்கு சுத்த புக் பண்ணிட்டா… அவளே முறுக்கு சுத்துவாளாம்… (சமீபத்திலே ஒரு கல்யாணத்திலே open kitchen லே 3 பாட்டி முறுக்கு சுத்துரதை பார்த்து களாஸ் demo எல்லாம் நின்னு நிதானமா பார்த்திருக்கா.. அதான்)

இதெல்லாம் செரிக்க icing on the cake மாதிரி தீபாவளி மருந்தும் பண்ணணும்.. யாரும் என் கிட்டே ரெசிபியெல்லாம் கேக்காதீங்க… எனக்கு தெரியாது.. எனக்கு தெரிஞ்சதெல்லாம் குலாப்ஜாமுன் தான்.. க்விக்-அண்ட்-ஈஸி.. நான் பொதுவாவே ஜாமுன் கோலி-ஸைசுக்கு தான் பண்ணுவென்.. என் பசங்களுக்கு 2-3 ஜாமுன் கப்பிலே போட்டு.. சொபாலே உட்காந்து… ஸ்பூண்லே (க்ஷீரா சொட்டாம) சாப்பிடுர பொறுமையெல்லாம் கிடையாது .. கிச்சணுக்கு வந்திட்டு போகும்போதெல்லாம் ஆளுக்கு ரெண்டு ஜாமுன் லபக்-லபக் ன்னு போட்டுக்குவாங்க..இத்னாலே பைய்யன் சட்டையெல்லாம் ஒரே பிசு-பிசு… ஜாமுன் பெருசா இருந்தா..க்ஷீரா (sugar syrup) சட்டைக்கு தான் .. ஸொ… கோலி ஸைசுக்கு பண்ண ஆரம்பிச்சேன்… அவனுக்கும் சாப்பிட confortable ஆ இருக்கு.. எனக்கும் தீபாவளி துணியிலே க்ஷீரா கொட்டுமே ( சொட்டுமே..)ன்னு பயமில்லாம இருக்கலாம்.

இந்த முறை அத்தை க்ளீனா சொல்லிட்டாங்க… குட்டி-குட்டி ஜாமுனெல்லாம் விருந்தாளிகளுக்கு குடுக்க சங்கடமா இருக்காம்.. ஸோ.. 2 செட் பாண்ணணும்… ஒண்ணு.. customised size (என் பசங்களுக்கு).. இன்னொண்ணு…கொஞ்சம் பெரிய சைஸ்.. கல்யாண வீட்டிலே குடுக்கரா மாதிரி… வருஷத்துகு ஒரு முறை தானேன்னு நானும் சரின்னுட்டேன். 3 நாள்ன்னு அஜெண்டாலே பொட்டது… 5 நாளாச்சு எல்லாம் பண்ண… ரிப்பண் பகோடா நல்லா பொரிஞ்சு வர நேரத்திலே காஸ் ஜகா வாங்கிடுச்சு – புது சிலிண்டர் போட்டும் பர்ணர் சரியா எரியலை -.. எல்லாத்தையும் கழட்டி.. க்ளீன் பண்ணி.. மறுபடியும் first லேயிருந்து ஆரம்பிச்சு (இந்த கலாட்டாலே பாதி-வெந்த பகோடா ஈஈஈன்னு இளிக்க.. எனக்கு சுர்ர்ர்ன்னு கோவம் வர)..ஜாமுன் பண்ணும் போதே… பாதிக்கு மேலே காணாம போக ( வேறேன்னா… எல்லாம் வாண்டுகள் திருவிளையாடல் தான்).. அப்புறம் ரெண்டும் தூங்கினப்புறம் ராத்திரி11.00 – 12.30 fresh batch பண்ணி…ஒளிச்சு வச்சு … எண்ணையிலே பொரிக்கும் போது.. ” எனக்கு பார்க்கணும்… எனக்கு பார்க்கணும்ன்னு ரெண்டும் காஸ் பக்கத்திலே வந்து எட்டி பார்க்க — அத்தைக்கு BP ஏற – முத்துஸரம் சிவந்து போக..கூடவே என் கண்ணும் சிவக்க… நிலமையை புரிஞ்சுகிட்டு.. மாமா ரெண்டு பேரையும் 3 மணி நேரம் டாடா கூட்டிகிட்டு போய் சாயங்காலம் வீடு வந்து சேர்ந்தாங்க.. அதுக்குள்ளே ஒரு வழியா தீபாவளி மருந்தை தவிர மத்ததெல்லாம் பண்ணி டப்பா-டப்பாவா போட்டு உயரமான ஷெல்பிலெ வச்சு – ஹப்பாடான்ன
ு உட்கார்தோம்..

ஒரு 1 மணிநேர பிரேக்குக்கப்புறம் ராத்திரி டின்னர் ஆரம்பிக்கணும்.. இனிமே எதுவானாலும் நாளைக்கு தான்ன்னு முடிவெடுத்தோம். இதுவரை நடந்தெதெல்லாம் வெறும் ட்ரைலர்தான்னு அப்போ எனக்கு தேரியாம போச்சு… எனக்காக ஒரு முழு படம் அடுத்த நான் காத்திருக்குன்னு எப்பவும் குறி சொல்லர கவுளி.. இன்னிகின்னு தீபாவளி ஹாலிடேஸ்க்கு போயிடுச்சு போல

அடுத்த நாள் அம்மா என்ன பண்ணுவாங்கன்னு தெரிஞ்சுக்க ரெண்டுபேருக்கும் curiosity. ஆனா இதுவரை பண்ணின கலாட்டாவாலே கேட்க்க ஒரு பயம்.. சப்பொர்ட்க்கு பாட்டியை பார்க்க… அவங்க “ஹூம்.. என்ன தீபா.. அப்போ இன்னிக்கி தீபாவளி மருந்தோடா நாம லாலா-கடையை முடிச்சிடலாமா ? ? ?”… ன்னு சொல்லி பசங்களுக்கு ஹிண்ட் குடுக்க.. ..”அய்யே.. அந்த மருந்து பண்ணரதிலே என்ன இருக்கு”ன்னு ரெண்டும் விளையாட போயிட்டாங்க… நானும் சரின்னு இஞ்சியெல்லாம் கழுவி – தோலெடுத்து .. போடவேண்டியதெல்லாம் போட்டு ( அதான் சொன்னேனே…டைரெக்ஷண் எல்லாம் அத்தை தான்.. ) அரைச்சு – கிண்டி கிண்டி கை வலிக்க ஆரம்பிச்சிடுச்சு. ஒரு லெவெலுக்கு மேலே என்னாலே சுத்தமா கிண்டவே முடியலை… ( பாவம் வயசான்வங்களை எவ்வளவு தான் வேலை வாங்கிரது)…தோள்பட்டை ரிலாக்ஸ் பண்ணும்பொது என் மைக்ரோவேவ்…”என்ன தீபா.. இந்த ஹை-டெக் யுகத்திலே இன்னும் உருளி-சட்டுகம்ன்னு கிண்டிகிட்டு இருக்கே.. glass bowl லே போட்டோமா… மைக்ரோவேவ் பண்ணினோமா…ன்னு பண்ணியிருந்தா இதுக்குள்ளே பண்ணிய்ருக்கலாமே…”” ன்னு பேசராமாதிரியே இருந்துது…. .. டெண்ஷண் தலைக்கு ஏறி… மைக்ரோவேவ் பேசராமாதியே இருந்தது.. கடாய் + சட்டுகம்.. “அப்போ நாங்க இனிமே வேண்டாமா..”ன்னு மூஞ்சியை தொங்க போட்ட மாதிரி ஒரு பிரமை..I am defenitly hallucinating

ஆஹா… இப்படியும் செய்யலாமே !! ( செய்யலாமா…ன்னு யோசிக்கவே தோணலை)..ன்னு எல்லாத்தையும் பவுளிலே கொட்டி 3 min வச்சேன்.. சூப்பரா திரண்டு வந்தது.. அடடா… கை நோகாம மருந்து கிண்டிடலாம்…ன்னு 3 -3 மினிட்டா வச்சா ரொம்ப நேரமாகுதே.. 5 மினிட் வச்சா.. சீக்கிரம் தீபவளி லேகியம் பண்ணிடலாம்ன்னு ஒரு பேராசையிலே 7 மினிட்ன்னு செட் பண்ணிட்டேன்.. அன்னேரம் பார்த்த்து கிச்சனுக்கு வந்த அத்தை.. என்னமா பண்ணரே ன்னு கேட்க்க.. நான் எனக்கு வந்த brain wave ஐ பெருமையா சொல்லா… “இதை மைக்ரொவேவ்லே பண்ணினா சரியா வருமா… பண்ணினவங்க யாராச்சும் சொன்னாங்களா ? ?”ன்னு க்ராஸ் கொஷ்டிண் கேட்க… “செய்து தான் பார்ப்போமே எல்லாத்துக்கும் பர்ஸ்ட்-டைம்ன்னு ஒண்ணு இருக்கில்லே “”… ன்னு நான் என் தரப்பு வாதத்தை வைக்க… அவங்க சிவாஜி(கணேசன்) ரேஞ்சுக்கு மோவய்கட்டையை தடவி.. “ஹ்ம்.. முதல் முறையா முயர்ச்சி பண்ணரே.. ஒரேடியா 7 min எல்லாம் வேண்டாம் 2 – 3 மினிட் குடு.. போது.. பார்த்து பார்த்து செய்யல்லாம் ” “…. ( அனுபவம் பேசுகிரதே.. ஆனா யாரு கேக்கரா…).. “3 மினிட் ன்னா ரொம்ப லேட்டாகும்… 5 மினிட் வைக்கறேன்… சீக்கிரம் முடிஞ்சுடும்.. ஒண்ணும் டெண்ஷணாகாதீங்க…”ன்னு தைரியம் (!!!!!) சொல்லி 5 மினிட் க்கு வச்சேன்… அங்கே தான் பிடிச்சது வினை

5 மினிட்டுக்கப்புறம் மைகிரோவேவ் தன் வேலை முடிஞ்சதுன்னு என்னை கூப்பிட.. நானும் ஆசை ஆசையா போனேன்… நான் 2 மணி நேரமா கிண்டின தீபாவளி மருந்து.. நல்லாதான் திரண்டு வந்தது.. ஆனா.. கரிஞ்சு-கரிக்கட்டையா தீஞ்சு போயிடுச்சு… இதை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரதுக்குள்ளே… தீஞ்ச் வாசனை மூக்கை துளைக்க (நேத்து வரை ஸ்வீட்-காரம் கம கமன்னு இருந்த வீடு).. எல்லாரும் “என்ன ஆச்சு.. என்ன ஆச்சு ன்னு ” கேட்டுகிட்டே கிச்சண் பக்கம் வர… (தீஞ்ச மருந்தை) பவுளேந்தி நான் பரிதாபமா நின்னுகிட்டிருந்தேன்.

“பாட்டி அப்பவே சொன்னாங்கப்பா .. 2 -3 மினிட் போதும்ன்னு.. ஆனா அம்மா தான் கேக்கலை”ன்னு ரெண்டு வாண்டும் உள்ளது உள்ளபடியே ஒளிவு மறைவு இல்லாம
அவர் ஆபீஸிலிருந்து வந்ததும் நடந்ததெல்லாம் ஒண்ணு விடாமா ஒப்பிச்சாச்சு.. ( என் பசங்க பொய்யே சொல்லமாட்டங்க… )…எனக்கு அடடா.. நாம adventerous ஆ எடுத்த ஒரு முயர்ச்சி இப்படி backfire ன்னு வருத்தம்.. 2 மணி நேரமா கிண்டி-கிண்டி வந்த தோள் வலி … சக்கரை – நெய் – இஞ்சி .. பொருளெல்லாம் பாழாபோச்சேன்னு ஆதங்கம்.. எல்லாம் ஒட்டுமொத்தாமா தாக்க… rest of the day கம்முன்னு இருந்தேன்…எதுவும் பேச எனகிட்டே தெம்பில்லே…

வேறேன்ன… அடுத்தநாள் மறுபடியும் கடைக்கு போய் 200gms இஞ்சி வாங்கி.. எல்லாம்.. ரிபீட் டெலிகாஸ்ட் (மைனஸ் மைரோவேவ்)… கடாய் அண்ட் சட்டுகம் கம்பனியே கதின்னு கிண்டியே செஞ்சோம் (பரிதாபமா இருந்த என்னை பார்த்து அத்தையும் மாமாவும் turn-by-turn அப்பப்போ கிண்டி குடுத்தாங்க)..ஆக… டம்மி க்ளியர் பண்ண சர்வரோக நிவாரிணியா இருக்கும் இந்த மருந்தை 2 முறை பண்ணி தீபாவளிக்கு ஆயத்தமானோம்…

மருமகள்ஸ்… பிளீஸ்.. இனிமே வீட்டிலே பெரியவங்க ஏதாவது சொன்னா…(அத்தை 2 மினிட் போதும்ன்னு சொன்னதை கேட்டிருந்தா… ) அதை மொத்தமா நிராகரிக்கரதுக்கு முன்னாடி.. ஒரு டிரையல் குடுத்து பாருங்க.. இல்லைன்னா.. என் கேஸ் தான்.. அடுத்த பதிவு குட்டீஸ் ஸ்பெஷல்.. அதான் .. பட்டாசு – மத்தாப்பூ- ராகெட் எல்லாம் உண்டு

தீபாவளி கலாட்டா – பாகம் 1 ( புது துணி பரபரப்பு)

தீபாவளிக்கு முன்னாடி நானும் ஒரு பதிவாவது போடணும்ன்னு தலை கீழா நின்னு பார்த்துட்டேன்.. எங்கே.. நாம ஒண்ணு நினைச்சா.. வேறே ஒண்னு நடக்குது. சொன்னா நம்ப மாட்டீங்க , கடந்த 3 வாரமா.. நான் பிளான் பண்ணின agenda லே ஒண்ணு கூட நான் நினைச்சா மாதிரி .. நினைச்ச நேரத்திலே நடக்கலை.. என்னமோ எல்லா வேலையும் பொழுது போக-போக.. “நீ என்ன task பிளான் பண்ணரது… அதை நாங்க என்ன அது படியே நடக்கிரது”.. ன்னு ஒரே முறண்டு.

போன வீக்கெண்டு எல்லாருக்கும் புது துணி எடுக்கலாம்ன்னு “பிளான்” பண்ணின்னேன்.. ஏதோ நாம காசு / கார்ட் எடுத்துகிட்டு போனோமா.. பசங்களுக்கும் – பெரியவங்களுக்கும் – எங்க ரெண்டு பேருக்கும் புது துணி எடுத்துகிட்டு வந்தோமான்னு இருந்தா … ஒரே மூச்சில் வேலை முடிஞ்சிருக்கும்… அட அது கூட பரவாயில்லை… shopper’s stop மாதிரி ஒரே கடையிலே… பாண்ட்-ஷர்ட்.. புடவை .. ப்சங்களுக்கு பாஷன் பாஷனா டிரெஸ்ன்னு இருந்தா.. 4 மணி நேரம் AC லே காத்துவாங்கிக்கிட்டே மத்தியத்துக்குள்ளே textile shopping முடிச்சிடலாம்ன்னு நினைச்சேன்…{4 மணி நேரம்ன்னு வாய்யைபொளக்காதீங்க… 6 பேருக்கு 4 மணி நேரம் ரொம்ப கம்மி.. அதுவும் 3 லேடீஸ் ( என் பொண்ணையும் சேர்த்து தான் சொல்லறேன்)}… Man proposes God disposes ங்கிரதுக்கு சரியான அர்த்தம் இந்த தீபாவளிக்கு தான் கத்துகிட்டேன்)}

டிபன் முடிச்சு 9.00 மணிக்கு டிரஸ் வாங்க போலாமா.. ன்னு சொன்னது தான் தாமதம்… ஒரே கஜமுஜ-கஜமுஜன்னு எல்லாரும் ஒரே நேரத்திலே பேச ஆரம்பிச்சுட்டங்க.. அப்போ ஒண்ணும் புரியலை… எல்லாரும் சொல்லரதை கேட்டதும்.. “புரியாமலேயே இருந்திருக்கலாம்”ன்னு தோணிடுச்சு… ஏன் தெரியுமா… Family-Mall ( அதாங்க… அடுடைஸ்மெண்ட்லெல்லாம் சொல்லுவாங்களே… “குடும்பத்தார் அனைவருக்கும் ஒரே இடத்தில் வித-விதமாக துணி ரகங்கள்”…) போலாம்ன்னு என் அபிபராயம்.. ( போனோமா.. வாங்கினோமா.. வந்தோமான்னு இருக்கலாமே… அலைச்சல் குறையுமே ன்னு எனக்கொரு நப்பாசை).. அத்தைக்கு அங்கே புடவை நல்ல தரமானதாக இல்லைன்னு ஒரு அபிபிராயம்… மாமாவுக்கு அங்கே exorbitant rates ன்னு ஒரு நெருடல்,, என்னவருக்கோ..” இப்போ தானே டிஸ்கஷண் ஆரம்பிச்சிருக்கீங்க… ஒரு டிஸிஷனுக்கு வாங்க .. அப்புறம் நான் பேசறேன்” .. ங்கிர தோரணையிலே Economic times லே மூழ்கிட்டார்… இனிமே காது கிட்டே அலாரம் கிளாக் வச்சா தான் கேக்கும்

பசங்க ரெண்டு பேருக்கும் Family-Mall வேண்டாம் னு சொல்லணும்ன்னு கண்ணுலேயே ரகசிய ஒப்பந்தம் போட்டுகிட்டா மாதிரி எனக்கொரு பிரமை… பெரிய மனுஷியாட்டம் என் பொண்ணுடைய ஜஸ்டிபிகேஷண்… அனிதா- பிரியா- நதாஷா எல்லாம்.. MG Road லே இருக்கிர கடையிலே வாங்கிநதை பத்தி இவகிட்டே சொல்லியிருக்காங்க… அதான் போண்ணுக்கு பிரெண்ட்ஸ் வாங்கின கடையிலே தானும் வாங்கணும்ங்கிர மோகம்… இதெல்லாம் குத்தம்ன்னு சொல்ல முடியுமா சொல்லுங்க…( அம்மா… ரொம்ப சாரிம்மா..என் பிரெண்ட்சொன்ன கடையுடைய location ஐ தொலச்சிட்டு .. அப்பெல்லாம் மொபைல் கூட இருக்கலை.. போண் போட்டு.. “ஏய் நீ சொன்ன கடை எங்கே தான் இருக்கு…தேடி தேடி ஓஞ்சு போய்ட்டேன்”… ன்னு பிரெண்ட் கிட்டே சொல்ல கூட முடியலை….அதனால நான் உன்னை எவ்வளவெல்லாம் அலையவிட்டிருப்பேன்.. இது நான் மானசீகமா எங்கம்மாவுக்கு)

பொண்ணு இப்படின்னா.. Lee Cooper தான் வேணும்ன்னு இன்னொரு குறல்… அதிலே புதுசா என்னமோ வந்திருக்காம்.. ( என்னமோ தெரியலை.. எனக்கென்னமோ எல்லாமே நீலம் / கறுப்பு கலர்லேயே தான் தெரியுது… இந்த ப்ளூ வேறே.. அந்த ப்ளூ வேறேன்னு எப்படி தான் பிரிச்சு பார்க்க மூளைய டிரையின் பண்ணிகிராங்களோ…!!! ) இதிலே பாதி சாமர்த்தியம் கெமிஸ்ட்ரியிலே இருக்க கூடாதா… எனக்கு அதுவே பேரிய தீபாவளி-கிப்ட்டா இருக்குமேடா…ன்னு சொல்லணும்ன்னு நுணிநாக்கு வரை வந்தது.. அப்புறம் வேண்டாம்ன்னு விட்டுவிட்டேன்.. அய்யோ ப
ாவம்.. எதுக்கு பண்டிகைக்கு பிளான் பண்ணும் போது அவன் மூடை கெடுக்கணும்…இன்னொரு நாள் பார்த்துக்கலாம்ன்னு அத்தை பக்கம் திரும்பினேன்

அவங்க சொல்லரதுக்கு முன்னாடியே எனக்கு கவுளி சொல்லிடுச்சு.. அவங்களுக்கு எப்பவும் போகும் “ஆஸ்தான ஜவுளிக்” கடைக்கு தான் போகாணும்.. கவுளி சொன்னது சரியாத்தான் இருந்துது.ஆக டிஸ்கஷண் முடியவே 11.30 ஆச்சு ( பாதி நாள் இங்கேயே காலி.. இதிலே நான் துணி வாங்கிகிட்டு வந்தப்புறம் 2 ஸ்வீட்டாவது பணிடணும் ன்னு agenda லே எழுதினது ஞ்யாபகம் வந்தது.. எங்கே.. போகிர போக்கை பர்த்தா இந்த ஒரு வேலையே நடந்தா போதுன்னு இருக்கும் போல இருக்கே…) சரி இனிமே எங்கே சமச்சு- சாப்பிடரது.. போகிர வழியிலே woody’s லே சாப்பிட்டு purchase முடிச்சுக்கலாம்ன்னு முடிவாச்சு.. இதிலே என்ன விஷேஷம்ன்னா.. நாங்க புடவை- சல்வார் கமீஸ் – ஜீன்ஸ் – டீ ஷர்ட் ன்னு பிசியா இருக்கும்போது அப்பாவும்- பிள்ளையும் ( அதான் என் மாமனாரும், என்னவரும்…) நீங்க பாருங்க.. நாங்க சும்மா அப்படி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கறோம்ன்னு சொன்னாங்க..சரி ன்னு ஒவ்வோண்னா செலெக்ட் பண்ணி திரும்பி பார்த்தா.. ரெண்டு பேரும் ஆளுக்கொரு பைய்யோட நிக்கராங்க.. என்னானு கேட்டா.. நாங்க எங்களுக்கு டிரெஸ் எடுத்தாச்சு.. நீங்க தான் லேட்ன்னு நக்கல் வேறே…

இது agenda லெ பிளான் பண்னின (பல விஷயத்திலே ) வெற்றிகரமா ஒரே நாளில் நிறைவேறிய ஒரு விஷம் தான்.. ஸ்வீட்டு – காரம் படுத்தின பாட்டை அடுத்த பதிவிலே சொல்லறேன்.. எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.. பத்திரமா பட்டாசு வெடிங்க.. டையாபெட்டீஸ் / பிரெஷர் இருக்கிரவங்க.. சொல்லாம கொள்ளாம ஸ்வீட்- காரம் எல்லாம் கண்ட மேனிக்கு சாப்பிடாதீங்க.. கட்டுப்பாடோட இருங்க.. பண்டிகையும் அதுவுமா.. எதுக்கு வயிரு அப்சட்டாகி – நீங்களும் அப்சட் ஆகணும்…. இல்லையா… ஸோ… Take Care – Be safe தீபாவளி வாழ்த்துக்கள்

கசாமுசான்னு இருக்கும் Google talk ஐ ஒழுங்குப்படுத்தலாம் வாங்க….!

ம்ம மாதிரி வலையே மேஞ்சுகிட்டிருக்கரவங்களுக்கு Google talk ரொம்ப முக்கியமானது. text -chat & voice chat க்கு மற்ற messengers ஐ விட clarity ரொம்ப நல்லா இருக்கு. அது மட்டும்மில்லை.. யாருடைய பெயரும் நாம manual ஆ contact list சேர்க்கவேண்டிய கட்டாயமும் இல்லை.. gmail உபயோகிப்பவருடன் தொடர்ந்து சில மெயில் பரிமாற்றம் இருந்தால்.. அவர் தானாகவே நம்ம contact list லே இருப்பார். கூகிளின் இந்த வசதி… உபயோகமாகவும் இருக்கு… பல நேரத்திலே உபத்திரமாகவும் இருக்கு

  1. யாருகிட்டே பேசரோம்ன்னு தெளிவா இருக்க…
  2. உதா:- ஏதோ ஒரு அவசர விஷயதுக்கு நம்ம மெயில்-ஐடி யை வீட்டிலே அம்மா / அப்பா… தூரத்து சித்தப்பாவின் – நண்பருக்கு குடுதிருப்பாங்க.. நம்ம நண்பர்கள் பட்டியலில் காலேஜில் 3 வருஷம் லூட்டியடிச்ச நண்பருக்கும் ஒரே பெயரா இருக்கும்.. நம்ம கஷ்டகாலதுக்கு “என்ன.. மாப்பிளே… வீக்கெண்ட் ஜோரா ! ! !”.. ன்னு மெசேஜ் (நண்பருக்கு பதிலா..) பெரியவருக்கு போய் ,.. அப்புறம் goof up மண்டையிலே உறைக்க… ஹீஹீ.. “சாரி..அங்கிள்.. அது என் பிரெண்டுக்கு அனுப்பினது“…ன்னு நீங்க நெளிஞ்சு-வளைஞ்சு சொல்லணும்.. இந்த மெஸெஜை பார்த்து… அவரும் ” (கண்றாவி…) பரவாயில்லே தம்பி..”.. னு சமாதானம் சொல்ல… அப்புறம் ஒவ்வொரு முறையும் நீங்க ” யாருப்பா ஆண்லைன்லே.. நம்ம தோஸ்தா… இல்லை.. அப்பா-பிரெண்டா”.. ன்னு குழம்பணும்.

    இந்த மாதிரி இக்கட்டான சூழ்னிலையிலிருந்து உங்களை நீங்களே காப்பத்திக்கணும்ன்னா …. contact list ல் தெரியும் பட்டியலில் “என்ன – பெயர்- இருந்தா-உங்களுக்கு- identify – பண்ண- வசதியா- இருக்குமோ— அந்த-பெயரை-போட்டு-வச்சுக்கலாம்”… எப்படின்னு சொல்லறேன்.. கேட்டுக்கோங்க.

    கூகிள் மெயிலில் signin பண்ணின உடனே இதை மாதிரி பார்க்கலாம். contact list ல் இருப்பவர்களின் default name தான் தெரியும்.. சில நேரத்திலே பெயர் இல்லாமல்.. வெறும் மெயில்ID மட்டும் கூட இருக்கலாம் … அதுவும் சிலர் charming_guy200@ gmail.com, rest_is_best@ gmail.com , fast_and _furious@gmail.com…. னெல்லாம் id வச்சிருப்பாங்க… இப்படி இருதா… அது spam ஆ… இல்லே… நம்ம நண்பர்தானா ன்னு சட்டுனு சொல்ல முடியுமா…. அப்படியே முடியை பிச்சுக்க வேண்டியது தான்…
    படத்திலே சொல்லியிருக்கரா மாதிரி… contact-details —- Edit contact information ஐ க்ளிக்கி Name லே… உதா: .. லக்ஷ்மி – college friend … இன்னொருத்தருக்கு… லக்ஷ்மி — அம்மா’s friend ன்னு குடுத்தா… யாருகிட்டே பேசறோம்ன்னு தெளிவா தெரிஞ்சுக்கலாம்… நீங்க இங்கே மாற்றம் செஞ்சது… உங்களுக்கு மட்டும் தான் தெரியும்..சம்பந்தபட்டவருடைய chat window ல் தெரியாது…

    ( psst.. psst.. XYZ- காண்டாமிருகம்… ன்னு போட்டாலும் அவருக்கு தெரியாது… நான் சொன்னேன்னு மட்டும் சொல்லாதீங்க… ஓகேவா.. !!!).. பெயரோட.. வேறு ஏதாவது விவரம்… (அவர் சாட்க்கு வரும்போது நீங்க ஞ்யாபகம் வச்சிருப்பீங்கன்னு எதிர்ப்பாக்கும் விவரங்கள்)… இருந்தா.. அதை NOTES லே எழுதி வச்சுக்கலாம்… அவர் சாட்டுக்கு வரும்போது… (பிட்-அடிச்சு).. எனக்கு எல்லாம் ஞ்யாபகம் இருக்குங்கிரா மாதிரி காட்டிக்கலாம்… இதை விட impress பண்ண வேறே நல்ல வழி இருக்கிரதா எனக்கு தெரியலை

  3. நீங்க பிசியா இல்லையான்னு உங்க contacts க்கு தெரியப்படுத்த
  4. எல்லா நேரத்திலேயும் நாம எல்லா நண்பர்கள் கூட சாட் பண்ண முடியாது… ஒருத்தர் (client க்கூட இருக்கலாம்) கிட்டே முக்கியமா பேசிகிட்டிருப்போம்.. அப்போ நண்பர்கள் கிட்டேயிருந்து ping வரும்…
    பதில் எதுவும் சொல்லலைன்னா.. அவர் தப்பா நினைச்சுக்கலாம்.. அதுக்கு தான் கூகிள் custom message னு ஒண்ணு தந்திருக்காங்க… படத்திலே காட்டியுருக்காரா மாதிரி… custom message ஐ க்ளிக்கி எழுதலாம்

  5. தொந்தரவு செய்யும் contact ஐ ஒதுக்கி வைக்க…
  6. சில பேர் இருப்பங்க… உங்களை Online ன்னு பார்த்த உடனையே… ping பண்ணுவாங்க… உங்க status message என்னன்னு கூட பார்க்கிர பொறுமை இருக்காது.. இல்லே… BUSY / Meeting in progress ன்னு status message போட்டிருந்தாலும்.. “என்ன… ரொம்ப பிசியோ !!! ” ..ன்னு மெசேஜ் பண்ணுவாங்க… ….. எல்லாம் உங்க மேலே இருக்கிர அன்பினாலே தான்…..ஒரே அன்புத்தொல்லை தான் போங்க.. “இப்போ பேச முடியாது”ன்னு சொன்னா.. தப்பா கூட எடுத்துக்கலாம்… இதிலே… “எவண்டா இவன்.. எப்போ online வந்தாலும் சாட் பண்ணரான்.. சே.. எனக்கு இப்போ இவன்கூட சாட் பண்ண இஷ்டமே இல்லை… ஒரே கஷ்டமா இருக்கு…”ன்னு நீங்க நினைக்கிரவங்களும் இருக்கலாம் ….. ஸோ… அப்படி இருக்கிரவங்களை சமாளிக்க தான் “BLOCK” option

    Google talk -settings-General ல் Hide offline contacts ல் இருக்கும் tick mark ஐ எடுத்து விட்டால்.. offline ல் இருக்கும் friends பெயர் gtalk ல் தெரியும் அந்த நபரின் பெயரை right click செய்து…. block ன்னு குடுத்தா போதும்… அவருடைய பட்டியலில் உங்க பெயர் எப்பவுமே offline லே தான் தெரியும்… இதை செய்யும் போது சம்பந்தப்பட்ட நபர் offline லே இருக்காரான்னு பார்த்து செய்யரது உத்தமம்… இல்லைன்னா… உடனே உங்க inbox லே… “ஏண்டா என்னை block பண்ணினே “ன்னு மெயில் வர வாய்ப்பிருக்கு…ஏன்னா… அவர் online லே இருக்கும் போது block பண்ணினா…. உங்க பெயர் online ன்னு வந்த உடனையே… offline ன்னு காட்டும்… மனுஷர் உஷாராயிடுவார்..

    அப்புறம் சாவகாசமா… google talk – settings – block list – ல் அவர் பெயரை செலெக்ட் செய்து மறக்காம unblock செய்திடுங்க… எப்பப்பாரு googletalk ஏ கதின்னு கடக்கிரவர்…. தொடர்ந்து 2-3 வாரமா online வரலைன்னா… சிருசா சந்தேகம் வருமில்லையா… அதுக்கு தான்

  7. யாருகூட என்ன பேசினோம்ன்னு மறந்து போச்சா,… நோ டெண்ஷன்… use chat Archive
  8. இதுக்கு உங்க gtalk – settings – chat – “save chat history to my Gmail Account”… selected ஆ இருக்கா பாருங்க.. அப்படி இருந்தா..

    உங்க Gmail – inbox லே இருக்கும் contact ன் பெயருக்கு மேலே mouse வச்சா.. ஒரு குட்டி டப்பா காட்டுமே… அதிலே recent conversations ஐ க்ளிக்கினா… சமீபத்திலே நீங்க text-chat பண்ணின அத்தனை விஷயமும் அதிலே இருக்கும்… இதோட இன்னொரு பிரதி அவர் கிட்டேயும் இருக்கும்.. ஸோ.. ஏதாவது சொல்லிட்டு.. நான் -சொல்லவே இல்லைன்னு பொயெல்லாம் சொல்ல முடியாது…

    ஏதாவது முக்கியமான நபர்கிட்டே பேசரீங்கன்னா… அவரோட நீங்க செய்த recent conversations ஐ ஒரு முறை பார்த்துகிரது நல்லது… for continuity sake… பேசும் போது குறிப்பெடுக்க மறந்து போன விவரம் – சுட்டி – போண் நம்பர் எல்லாம் கூட அப்புறமா இதிலிருந்து மீட்டுக்கலாம்

கூகிள் டாக்கில் இருக்கும் சூட்ஷமத்தை நல்லா வெளிச்சம் போட்டு கட்டியாச்சு.. இதனாலே நீங்க யாருகிட்டேயாவது மாட்டிகிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லை…சிக்கிக்கிரதும் , தப்பிக்கிரதும் உங்க சாமர்த்தியம்… என்னை வம்புக்கு இழுக்காதீங்க.. நான் வெறும் ஒரு announcer தான் 🙂

கூட்டணியால் வளந்த கலை… நிழர்ப்படக் கலை இன்று உலக நிழற்படக்கலை தினம் ( World Photography Day)

ம்ம புகைப்படகலை நடுவர்கள் ஆகஸ்ட் மாத போட்டிக்கான முடிவை அறிவிச்சதை எல்லாரும் பார்த்திருபீங்க.. இதை விட ஒரு நல்ல தருணம் இந்த முடிவை அறிவிக்க அவங்க தேற்ந்தெடுத்திருக்க முடியாது.. ஏன்னா இது… புகைப்பட வாாாாாரம்….ஏன்னா…. இன்னைக்கி தான் உலக நிழற்பட நாள் (World Photography day — Aug 19)…

இதுக்கு காரணம் புகைப்பட கலையை நடைமுறை வாழ்க்கையின் அம்சமாக்கிய பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Louis – Jacques-Mande Dagurre ஆவார்.

Degurre ஒரு ஓவியர்… அவர் Opera க்கெல்லாம் பின்னணி-ஓவியங்கள் வரைபவர். படங்களின் நடுவே ஒளி ஊடுருவிச் செல்வதை பார்த்து ரொம்பவும் பிரமித்து போனார்.. அந்த நொடியில் படங்கள் ரொம்பவும் அழகாகவும் வித்தாயசமாகவும் காணப்பட்டதை உணர்ந்தார். அந்த க்ஷணத்தை எப்படியாவது பத்திரப்ப்டுத்த வேண்டும்.. அதுக்கு என்ன வழின்னு தேட ஆரம்பித்தார்…

கிட்டதட்ட இதே காலகட்டத்தில் தான் ( 1825-1830) Joseph Nicéphore Niépce ம் (புகைப்படகலை… ன்னு இப்பொ நாம சொல்லறோமே. …அதை குறித்து ) ரொம்ப தீவிரமா ஆராச்சி செய்து வந்தார்… இந்த கலைக்கு அவர் குடுத்த பெயர் heliography … அதாவது “sun writing”… Degurre & Niépce .. கூட்டணி (1829) தான் புகைப்பட கலையின் ஆத்திச்சூடியையே நமக்கு தந்தது…

இது ஒரு வித்தியாசமான கூட்டணி… Degurre .. ஒரு ஓவியர்… Niépce புத்தகங்கள் – செய்த்தித்தாள் அச்சிடுபவர்… ஒருத்தருக்கு நிறம்-ஒளி-நிழல் போன்ற விஷயத்தில் பாண்டித்தியமென்றால்… இன்னொருவருக்கு கெமிகல்-கலவை-தன்மை-அச்சிடும் முறை ( படத்தை பிரிண்ட் பண்ணணுமில்லே!!!)… இதிலெல்லாம் உஸ்தாத்… ரெண்டு பேருக்கும் ஒரே ஆரவம்… திருப்புமுனை சாதனைகள் எதிர்பார்க்க கூடியது தானே….

ஆரம்ப காலத்திலே அவங்களுக்கும் ரொம்பவும் சவாலா அமைஞ்ச விஷயம்… exposure time … Niépce .. அவருடைய முதல் படத்துக்கு 8 மணி நேரம் exposure time குடுத்தார்ன்னா… நம்ப முடியுதா… ? ? ?இதனாலே… அவரால் கட்டிடம்-மரம் தான் படம் புடிக்க முடிஞ்சுது.. மனுஷங்களை படம்பிடிக்க முடியலை…. 8 மணி நேரம் எவன் போஸ் குடுப்பான்…

ஒரு கடைவீதியை படம் எடுத்தார்… அங்கே இருக்கும் கட்டிடம் – மின்கம்பம் இதெல்லலாம படத்திலே இருந்தது… மனுஷங்க இல்லை.முதல் permanent photograph ஐ எடுத்தவரும் இவர் தான்..பக்கதிலே இருப்பது 1826 ல் அவர் எடுத்த ஒரு புகைப்படம் ்

Degurre & Niépce .. கூட்டணக்கு பின் Degurre முதன்முதலில் ஒரு மனிதனை வெற்றிகரமாக படமமெடுத்தார். இதுக்கு அவர் எடுத்துகுட்ட exposure time 30 நிமிஷம் ன்னு சொல்லறாங்க…படத்தை க்ளிக்கி பாருங்க… ஒரு உருவம் தெளிவா தெரியும்.. ரொம்ப உயரத்திலிருந்து எடுத்த மாதிரி இருக்கு படம்

இவர் தான் Daguerreotype. ன்னு படமெடுக்கும்்மும் முறையை தந்தவர்…. அந்த காலத்திலே இது பெரும் பரபரப்பை உண்டாக்கியது… இன்னிக்கும் photo printing & developing பண்ணரவங்க ( விஷ
யம் தெரிஞ்சவங்க) கிட்டே கேட்டு பாருங்க… பக்கம்-பக்கமா சொல்லுவாங்க

ரெண்டு பேரும்.. உன் – டெக்னிக் பெரிசா… இல்லை என் – லெக்னிக் பெரிசான்னெல்லாம் சண்டைபோடாமல்… அவங்க – அவங்க research findings ஐ பகிந்துகிட்டதால் தான் இன்னிக்கி நம்மாலெயும் ஏதோ மத்தவங்களுக்கு காட்டுகிரமாதிரி – போட்டிகு அனுப்புர மாதிரி படங்கள் எல்லலாம எடுக்க முடியுது

இது வெறும் ஆரம்ப காலம் தான்.. அப்புறம் படிப்படியா… pin-hole camera லிருந்து முன்னேறி… Film Camera... அப்புறம் இன்னிக்கி digital camera ன்னு பலபேர் புகைப்பட துறையிலே ஆர்வமா இருக்காங்க… சிலபேருக்கு இது வெறும் பொழுதுபோக்கு…( சில பேருக்கு உண்மையிலேயே… இந்த கலை மேல் ஆர்வம்… ஆனால் பல பேருக்கு…நானும் தான்… பிலிம் தான் இல்லையே…. பிரிண்ட் போடுற காசு மிச்சம்..ங்கிர வசதி.. அதனால ஆரவம்)… இன்னும் சில பேருக்கு புகைப்பட கலை & கேமரா தான் அன்னதாதா…. இவங்களை நாம என்னைக்குமே கிண்டல் பண்ண கூடாது…

ஸோ… எல்லா புகைப்பட ஆர்வலர்களுக்கும் இந்த நாள் நினைவில் வச்சிருக்கவேண்டியதில்லையா.. அத்னால் தான் இந்த பதிவு.. எல்லாருக்கும் HAPPY WORLD PHOTOGRAPHY DAY.. க்ளிக்-க்ளிக்-க்ளிக்…:D