இப்பெல்லாம் வங்கிக்கு யரும் காசு எடுக்க போகரதே இல்லை… அதுக்கு தான் ATM இருக்கே… (ATM == Any Time Money ன்னு அப்பா இருக்கார்னெல்லாம் சொலக்கூடாது… இது ஒரு ஸீரியஸ் பதிவு..நிலமையை பார்த்தீங்களா.. இதெல்லாம் சொல்லவேண்டியதா இருக்கு..),,ஹ்ம்..ஹ்ம்… சும்மா கார்டை போட்டோமா.. காசை எடுத்தோமா… ( தெவைப்பட்டா.. mini statement கூட எடுத்து வச்சுக்கலாம்).. அப்புறம் எப்பவாவது நேரம் இருக்கும்போது வங்கிக்கு போய் பாஸ்புக்கை அப்டேட் பண்ணிக்கலாம்… அது கூட வெறும் ஒரு ஆதாரத்துக்கு தான்.. ஏன்னா நம்ம வங்கி கணக்கு வழக்கை internet banking மூலம் இணையதளத்திலேயே பார்த்துகொள்ளலாம்
ஒரு விதத்திலே ATM வசதியும் கூட.. மொத்த்மா ஒரு பெரிய துகையை வீட்டிலெ வச்சுக்கிரது ஒண்ணும் புத்திசாலித்தனம் இல்லை… அப்பபோ தேவைக்கு ஏத்தா மாதிரி withdraw பண்ணுவதே சரின்னு என்னுடைய கருத்து. இப்படி ATM மும் நானும் 3-4 முறை ஒரு மாசத்திலே சந்திச்சுக்குவோம்.. பின்னே.. பால்-பேப்பர் – மளிகை- ஸ்கூல் பீஸ்– அல்லறை சில்லறை செலவு .. ன்னு என்னெல்லாம் இருக்கு… இத்த்னை இருக்க ரெண்டு நாள் முன்னே படிச்ச சேதி.. என்னை கதிகலங்க வச்சது.. சேதி என்னனா.. இனிமேல் (தனியார் வங்கியில்) ATM லிருந்து காசு எடுத்தா.. வங்கிக்கு நாம service fee ங்கிர முறையிலே பணம் கட்டணும்
என்னடா இதுன்னு மனசுக்குள்ளே ஒரு பீதி..சரி.. இது தனியார் வங்கியிலே மட்டும் தான்னு தலைப்பை பார்த்து நினைச்சேன்.. சேதியை மேலும் படிக்கும் போது… ஒருவேளை State bank Groups ல் இருக்கும் வங்கிகளுக்கும் இதுமாதிரி ஏதாவது service fee இருக்குமோன்னு ஒரு சந்தேகம் கிளம்பிச்சு.. அதுக்கு காரனம்.. நான் சிகப்பு கலர்லே கோடுபோட்டிருக்கேனே… அந்த statement தான் காரணம் சந்தேகம் வந்து கூகிள்லே தேடிநதிலெ.. இந்த செய்தியை CNN.IBN மற்றும் NewIndPress லெயும் உறுதி படுத்திட்டாங்க. அடுத்த கட்ட நடவடிக்கையா.. நான் நடையை கட்டினேன்.. எங்கே… அட வங்கிக்குதான்… என்ன ஆனாலும் இதை அவங்க கிட்டே கேட்டு சந்தேகத்தை நிவிர்த்தி செஞ்சுக்கலாம்ன்னு தான்.. பேசி பார்த்ததிலே சில திடுக்கிடும் உணமைகள் தெரிய வந்தது… கவனமா படிங்க… இதெல்லாம் நீங்க கேட்டாதான் சொல்லுவாங்க… இல்லைன்னா… உங்க அக்கவுண்டிலிருந்து கம்முன்னு service fee ஐ அவங்களே எடுத்து… பாஸ்புக்கிலே entry யும் போட்டுகுடுப்பாங்க. |
நான் அறிந்த தகவல் – state bank Group ல் இருக்கும் வங்கிகளுக்கு
- ATM ல் ஒரு நாள் நீங்கள் 15,000/- மட்டுமே எடுக்க முடியும்.. (இதுக்கும் அதிமா எடுக்க முயர்ச்சி பண்னினீங்கன்னா…ATM ..”தரமுடியாது.. பேமானி.. போயிட்டு நாளைக்கு வா”…ன்னு சொல்லும்.
- 6 மாசத்துக்கு 50 ATM transactions செய்ய தான் நமக்கு அனுமதி உண்டு. ( ஒரு வேளை நீங்க இந்த 50 Transactions ஐ 2 மாசத்திலே நடத்திட்டீங்கன்னா…).. 51st transaction லிருந்து 50 /- ருபா Service fee / Transaction fee ன்னு நாம வங்கிக்கு கட்டணும்
- உங்களது ATM கார்ட் ஏதாவது State Bank Group of banks ( SBI, SBT,SBM, SBS… ) ஐ சேர்ந்ததா இருந்தா…நீங்கள் வேறு ஒரு state bank Group ஐ சேர்ந்த வங்கியின் ATM ல் எந்த விதமான extra charges இல்லாமல் பணம் எடுக்கலாம்…..
உதா:— உங்க கிட்டே SBM ன் ATM கார்ட் இருக்கு.. ஆனா .. உங்க வீட்டுப்பக்கத்திலே SBI ன் ATM தான் இருக்கு… இப்படி இருக்கும் பக்ஷத்தில் நிங்கள் தாராளமாக ATM லிருந்து காசு எடுக்கலாம்…. at no extra costs…. ஆனால்….்.
.
- கீழே எழுதியிருக்கும் வங்கிகளின் ATM ல் நீங்கள் உங்கள் கார்டை உபயோகித்தூ பணம் எடுத்தால்… ஒவ்வொரு transaction க்கும் Rs. 25 + 12.24% service t
ax ன்னு கட்டணும்… இது மட்டுமமில்லை…. balance enquiry செய்ய RS 12 + 12.24% service tax கட்டணமும் உண்டுHDFC
UTI
Punjab National Bank
Andhra Bank
Indian Bank
Dena Bank
Co-operative Banks
Uco Bank
Bank of India - நீங்க state bank groups ன் ATM லேயும் எடுக்காம… மேலே பட்டியலில்லருக்கும் வங்கியிலும் எடுக்காம… வேறே வங்கிகளின் ATM ல் காசு எடுத்தால் ஒவ்வொரு transaction க்கும் Rs. 50 + 12.24% service tax ன்னு கட்டணும்…… balance enquiry செய்ய RS 12 + 12.24% service tax கட்டணமும் உண்டு
அதனால மக்கஸ்.. உடனே உங்க வங்கியுடன் தொடர்பு கொண்டு .. அவங்க விதிமுறை என்னன்னு கேட்டு தெரிஞ்சு செயல்படுங்க… அனாவசியமா வங்கி வெப்சைட்லே விவரம் தேடறேன் பேர்வழின்னு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க.. வங்கியிலே நேரடியா போய் கேட்டாலும்… “”” இப்போ இதெல்லாம் உங்களுக்கு விலாவரியா (!!!) விளக்க எங்களுக்கு நேரமில்லை… மத்த்யானதுக்கு மேலே வாங்க..”””… ன்னு தான் சொல்லுவாங்க… ஸோ… உங்க ATM withdrawal slip க்கு பின்னாடி இருக்கும்(24x 7) helpline நம்பருக்கு போண்போட்டு விவரங்கள் கேளுங்க…கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு… சும்மா தூக்கி குடுக்க மனசு வருமா என்ன ? ? ?