இந்த சந்தேகம் Vijay TV பார்த்ததுக்கப்புறம் தான் வந்த்தது. நேற்று 24-Dec-2006, Vijay-Tv ல் “நீயா-நானா”..நிகழ்ச்சிய்யை பாதியிலிருந்து பார்த்தேனா….எனக்கு தலைப்பு correct ஆ ஞ்யாபகம் வரலை..கிட்ட-தட்ட இப்படி இருந்தது “நமது உணவு பழக்கங்களின் காரணமாக, சமுதாய-வெறுபாடு காண்கிறோமா?”
அதாவது அசைவம் சாபிடுகிறவங்க “எங்களுடைய உணவில் தான் Balanced diet (B-complex vitamins are found in abundance only in meat products) ” என்றும்…சைவம் சாப்பிடுகிரவங்க “எங்கள் உணவிலும் Balanced diet( spinach & etc for bcomplex vitamins) உண்டு .. அப்படின்னு என்னெனமோ சொல்லிகிட்டே பொனாங்க..
அதில் Hotel Industry ல் அனுபவம் உள்ள ஒரு நபர் (அசைவம் சாப்பிடுகிரவர்) சொன்னார்…..ஹோட்டலில் .. 3-Star; 5-star..any star அசைவம் சமைக்கும் தண்ணீரில் .. அதாவது..அசைவ உணவை வேகவைக்க பயன்படுத்தும் வென்னீரில் தான் Veg-soup பும் செய்கிரார்கள். அதனால்தான் Soupக்கு இருக்கும் தனிபட்ட வாசனை Veg-Soupல் வருகிறது.
இது உண்மையா..தயவு செய்து விஷயம் தெரிந்தவர்கள்– Hotel Industry & Catering Technology ல் அனுபவம் உள்ளவங்க “”உள்ளதை உள்ளபடி”..மறைக்காம சொல்லுங்க.
நான் ஒரு Eggitarian (ie..Vegitarian who eats egg only) எனக்கு அசைவம் சாப்பிடுகிரவங்க கிட்டே எந்த விரோதமும் இல்லை.. Zoology படித்த காரணமோ என்னமோ .. வேட்டுகிறது – அறுக்கிறது பாக்க அறுவெறுப்பு கிடையாது.. TV ல் அசைவ சமையல் பாத்து–அவங்க உபயோக படுத்துகிர Meat க்கு பதில் உருளைக்கிழங்கு போட்டு சமைச்சு இருக்கேன்… (Recipies எல்லாம் நல்லா தான் இருந்துது)..
அசைவம் சாப்பிடுகிற நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க. எல்லாரும் ஒண்ணா ஹோட்டல் போவோம்…அவங்க அசைவம் சாபிடுவாங்க.. நானும் – என்னைப்போல சிலரும் கிடைக்கிற சைவ-உணவு ( ஒண்ணும் இல்லைன்னா Soup குடிச்சிட்டு தயிர்-சாதம் சாப்பிட்டு கம்முன்னு இருப்போம்)
ஆக soupஐ தவிர்க்க முடியாது. எங்க வீட்டு பாட்டி ஒரு Strict vegitarian அவங்க Soup – IceCream விட்டா ஹொட்டலில் வேறெதுவும் சாப்பிடமாட்டாங்க… So..This is a Humble request to all my readers ஹோட்டலில் .. 3-Star; 5-star..any star அசைவம் சமைக்கும் தண்ணீரில் .. அதாவது..அசைவ உணவை வேகவைக்க பயன்படுத்தும் வென்னீரில் தான் Veg-soup பும் செய்கிரார்கள்.
இது உண்மையா இல்லையா…உங்களுக்கு தெரிஞ்சா மறைக்காம சொல்லுங்க.. முடிஞ்சா Hotel Industry & Catering Technology ல் அனுபவம் உள்ளவங்க கிட்டே சிரமம் பார்க்காம கேட்டு சொல்லுங்க..
ஹம்..ஹம்.. எங்க பெரிய-பாட்டி Great-Grandmother சொல்லுவாங்க….”அந்த காலத்துல வெளியூர் போனா..ஒரு Special Cooking kit எடுத்து போவாங்களாம்.. அந்த kit ல் ஒரு குட்டியூண்டு கும்முட்டி-ஆடுப்பு.. 2 பாத்திரம் (அரிசி & குழம்பு /ரசம் வைக்க) 3 கரண்டி (அரிசி & குழம்பு /ரசம் & தையிர்), கரி வைக்க ஒரு pouch எல்லாம் இருக்குமாம்.
என்னமாதிரி Eggitarians & Veggitarians க்கு இனிமே இந்த Cooking kit தேடவேண்டியது தானா..இனி இந்த மாதிரி புராதன-வஸ்து எல்லாம் எங்கேன்னு பொயி தேட..(..Even antique shops will not be having it… ஒருவேளை Museum ல் பொயி விசாரிச்சா கிடைக்குமோ…..
..பார்த்தீங்களா..இப்பொவே பெனாத்த ஆரம்பிச்சாசு…பெனாத்தி-பெனாத்தி நான் குத்தாலம் போகரத்து முன்னாடி…..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. Veg-Soup saivamaa- asaivamaa..