பல ஊரிலேயிருந்து வந்து எனகு ஊக்கம் குடுத்த அனைவர்க்கும் நன்றி. இத்தனை ஊரிலிருந்து மக்கள் வந்திருக்காங்க…உபயம் Google Analytics
சகோதரி… Cell Phone வைச்சுக்க கஷ்டப்படுகிறாயா ?
Cell Phone வைச்சுக்க என்ன கஷ்டம் இருக்க போகுதுன்னு தானே யோசிக்கரீங்க..ஆம்பளைங்க எல்லாம் வசதியா Pocketல Vibrate modeல வைச்சு..கூட்டத்துல Phone மணி அடிச்சா..அது அவங்களுடைய Phone தானா இல்லையான்னு சலனப்படாம தெரிஞ்சுப்பாங்க..ஆனா நமக்கு அப்படி இல்லையே..
Pouch வைச்ச Hand bag உள்ளவங்க..பரவாயில்லை.. வசதி தான்..சாதாரண Hand Bag கா இருந்தா.. ஒரு மணி அடிச்சா.. பல கைகள் Handbag கூட ஒரு யுத்தமே நடத்தும்.. கடைசீல.. யாருடைய Phone ணோ அவங்க.. Public Announcement பண்ணுவாங்க..”ஹீ..ஹீ..என்னுது தான்..” அப்பொ தான் கலவரம் அடங்கின மாதிரி இருக்கும்.
தமிழ் நாட்டு கலாச்சார உடை புடவைதான்…மறுக்கலை.. ஆனா கல்லூரி – வேலைக்கு போகும் பெண்களுக்கு வசதி Salwar kameez தான் என்பதையும் மறுக்க முடியாது.அதனால Handbag கூட யுத்தம் பண்ணுவதை avoid பண்ண என் Salwar Kameez க்கு Pocket வெச்சா எப்படி இருக்கும்ன்னு 2003 ல try பண்ணினேன்..இப்பொ எந்த வித யுத்தமும் இல்லாம நிம்மதியா இருக்கேன். Daily wear & Formal Wear Salwar kameezக்கு எல்லாம் இப்பொ Pocket இருக்கு
- இது ஒரு Straight pocket..அதாவது கைய்யை கோணா-மாணா ன்னு திருப்பி கஷ்டப்படவேண்டியது இல்லை
- The opening of the pocket must be atlest 2″ greater than the width of your palm அப்பொ தான் ஜாஸ்தி Elbow-space useபண்ணாமல், அக்கம்-பக்கத்துல இருக்கிறவங்களை முழங்கையால குத்தாம Pocket ல் இருந்து Phone – Keys எடுக்கமுடியும்
- Pocket is placed below the curve of the hips.அதநால் Drees அழகு கெடுவதுக்கு வாய்ப்பே இல்லை
- முக்கியமா.. Trial க்கு ஒரு Kameez (top) க்கு Pocket வைக்கலாம்ன்னு தீர்மானம் பண்ணியாச்சுன்னா…ரொம்ப-பழைய புடவை அல்லது மலிவு விலை (100/- to 150/-)க்கு துணி வாங்கி try பண்ணுங்க….
ஒரு முன்ஜாக்ருதை தான்
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்… Soup சைவமா – அசைவமா?
இந்த சந்தேகம் Vijay TV பார்த்ததுக்கப்புறம் தான் வந்த்தது. நேற்று 24-Dec-2006, Vijay-Tv ல் “நீயா-நானா”..நிகழ்ச்சிய்யை பாதியிலிருந்து பார்த்தேனா….எனக்கு தலைப்பு correct ஆ ஞ்யாபகம் வரலை..கிட்ட-தட்ட இப்படி இருந்தது “நமது உணவு பழக்கங்களின் காரணமாக, சமுதாய-வெறுபாடு காண்கிறோமா?”
அதாவது அசைவம் சாபிடுகிறவங்க “எங்களுடைய உணவில் தான் Balanced diet (B-complex vitamins are found in abundance only in meat products) ” என்றும்…சைவம் சாப்பிடுகிரவங்க “எங்கள் உணவிலும் Balanced diet( spinach & etc for bcomplex vitamins) உண்டு .. அப்படின்னு என்னெனமோ சொல்லிகிட்டே பொனாங்க..
அதில் Hotel Industry ல் அனுபவம் உள்ள ஒரு நபர் (அசைவம் சாப்பிடுகிரவர்) சொன்னார்…..ஹோட்டலில் .. 3-Star; 5-star..any star அசைவம் சமைக்கும் தண்ணீரில் .. அதாவது..அசைவ உணவை வேகவைக்க பயன்படுத்தும் வென்னீரில் தான் Veg-soup பும் செய்கிரார்கள். அதனால்தான் Soupக்கு இருக்கும் தனிபட்ட வாசனை Veg-Soupல் வருகிறது.
இது உண்மையா..தயவு செய்து விஷயம் தெரிந்தவர்கள்– Hotel Industry & Catering Technology ல் அனுபவம் உள்ளவங்க “”உள்ளதை உள்ளபடி”..மறைக்காம சொல்லுங்க.
நான் ஒரு Eggitarian (ie..Vegitarian who eats egg only) எனக்கு அசைவம் சாப்பிடுகிரவங்க கிட்டே எந்த விரோதமும் இல்லை.. Zoology படித்த காரணமோ என்னமோ .. வேட்டுகிறது – அறுக்கிறது பாக்க அறுவெறுப்பு கிடையாது.. TV ல் அசைவ சமையல் பாத்து–அவங்க உபயோக படுத்துகிர Meat க்கு பதில் உருளைக்கிழங்கு போட்டு சமைச்சு இருக்கேன்… (Recipies எல்லாம் நல்லா தான் இருந்துது)..
அசைவம் சாப்பிடுகிற நண்பர்கள் நிறைய பேர் இருக்காங்க. எல்லாரும் ஒண்ணா ஹோட்டல் போவோம்…அவங்க அசைவம் சாபிடுவாங்க.. நானும் – என்னைப்போல சிலரும் கிடைக்கிற சைவ-உணவு ( ஒண்ணும் இல்லைன்னா Soup குடிச்சிட்டு தயிர்-சாதம் சாப்பிட்டு கம்முன்னு இருப்போம்)
ஆக soupஐ தவிர்க்க முடியாது. எங்க வீட்டு பாட்டி ஒரு Strict vegitarian அவங்க Soup – IceCream விட்டா ஹொட்டலில் வேறெதுவும் சாப்பிடமாட்டாங்க… So..This is a Humble request to all my readers ஹோட்டலில் .. 3-Star; 5-star..any star அசைவம் சமைக்கும் தண்ணீரில் .. அதாவது..அசைவ உணவை வேகவைக்க பயன்படுத்தும் வென்னீரில் தான் Veg-soup பும் செய்கிரார்கள்.
இது உண்மையா இல்லையா…உங்களுக்கு தெரிஞ்சா மறைக்காம சொல்லுங்க.. முடிஞ்சா Hotel Industry & Catering Technology ல் அனுபவம் உள்ளவங்க கிட்டே சிரமம் பார்க்காம கேட்டு சொல்லுங்க..
ஹம்..ஹம்.. எங்க பெரிய-பாட்டி Great-Grandmother சொல்லுவாங்க….”அந்த காலத்துல வெளியூர் போனா..ஒரு Special Cooking kit எடுத்து போவாங்களாம்.. அந்த kit ல் ஒரு குட்டியூண்டு கும்முட்டி-ஆடுப்பு.. 2 பாத்திரம் (அரிசி & குழம்பு /ரசம் வைக்க) 3 கரண்டி (அரிசி & குழம்பு /ரசம் & தையிர்), கரி வைக்க ஒரு pouch எல்லாம் இருக்குமாம்.
என்னமாதிரி Eggitarians & Veggitarians க்கு இனிமே இந்த Cooking kit தேடவேண்டியது தானா..இனி இந்த மாதிரி புராதன-வஸ்து எல்லாம் எங்கேன்னு பொயி தேட..(..Even antique shops will not be having it… ஒருவேளை Museum ல் பொயி விசாரிச்சா கிடைக்குமோ…..
..பார்த்தீங்களா..இப்பொவே பெனாத்த ஆரம்பிச்சாசு…பெனாத்தி-பெனாத்தி நான் குத்தாலம் போகரத்து முன்னாடி…..எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.. Veg-Soup saivamaa- asaivamaa..
செருப்பு வாங்கலையோ…செருப்பு..
பிலிடர் கொடுத்த சாபமும் – சாபவிமொசனமும்
தண்ணி பிரச்சனை இல்லாத ஊரே கிடயாது, அப்படின்னு நான் தைரியமாக சொல்லுவேன். என்ன ஒரெ-ஒரு வித்த்யாசம், சில இடத்துல தண்ணி ஜாஸ்தி ஆனதுநால பிரச்சனை (இது மட்டும் இரண்டு வகையான தண்ணீருக்கும் பொருந்தும்)- இன்னும் சில இடத்துல குறைவு அல்லது மிக-மிக குறைந்த அளவிலெ இருக்கரதால் பிரச்சனை.அட..ஓடாதீங்க..நான் அரசியல் பேசல..
எங்க வீட்டு தேவைக்கெல்லாம் போர்வெல் தண்ணி தான். குடிக்க-சமைக்க எல்லாம் 2 நாளைக்கு ஒரு முறை நேரம்-காலம் இல்லாம கண்ட நேரத்துக்கும் நம்ம அரசாங்கத்தின் மிக மிக உயர்ந்த அதிகாரியின் (அதாங்க.. இப்பெல்லாம் தண்ணி திறந்து விடர அந்த புண்யவான்) மனசுக்கு தோணினாப்பொல குழாலெ தண்ணி வரும். தண்ணி வர ஆரம்பிச்சு ஒருமணி நேரத்துலெயே நின்னிடுச்சுன்னா அவருக்கு அவசர வேலை இருக்குன்னு நாம புரிஞ்சுக்கணும். அட்டவணைப்படி நேத்தே நமக்கு வரவேண்டிய தண்ணி 2-நாள் ஆகியும் வரலைன்னா, ஓண்ணு நம்ம area-க்காரர் யாரோ அவரை நல்லா கடுப்பேத்திட்டார் – அதான் மனுஷன் பழி வாங்கரான் ( சி.சி. ..வாங்கரார்….ம்…மரியாதை முக்கியமா இவருக்கு).. இல்லை ஒருவேளை மத்த சில அலுவலகத்துல நடக்கிர மதிரி water-tank ” சாவிய hand-over பண்ணாம குடும்பத்தோட டா-டா பொயிட்டார். ஆனா சில நாள் (அதாவது வருஷத்துல தோராயமா 2-3 நாள்) 4-5 மணிநேரம் எல்லம்கூட தண்ணி வந்துகிடே இருக்கும்.அன்னிக்கி எத்தனை உள்ளங்கள் அவரை வாழ்த்தும் தெரியுமா..அந்த புண்ணியமே அவரோட ௭ தலைமுறையை காப்பாத்தும்.
ஆக இப்படி கிடைக்கற தண்ணீரை சமைக்க ஒரு drum-ல புடிச்சாலும் குடிக்க special-ஆ 4 பாத்திரம் இருக்கு. சும்மா தும்மினாலே டாக்டர் பயமுடுத்தறாங்க. அதனால அந்த தண்ணீர் காயிச்சரத்துக்குன்னே வார்த்த பாத்திரத்துல புடிச்சு – காய்ச்சி – ஆறவச்சு அப்புரம் பில்டர்ல விட்டு.. அப்புறம்தாங்க நாம குடிக்கணும்.அதுக்குள்ள மனுஷன் தோண்டை-தண்ணி வத்தி கண்ணு முழி எல்லாம் பிதுங்கிடும்.
இதையெல்லாம் யோசிச்சு மாசகணக்கா பட்ஜட் போட்டு ஒருவழியா ஆகவாகார்ட் (aquagaurd) போடறதுன்னு முடிவு பண்ணிநோம்.Company காரங்க வந்து fix பண்ணி கொடுத்துட்டும் பொயிட்டாங்க. ஹப்பா…பூதாகாரமா தோட்டத்துல பாதி கிணறு மாதிரி இருந்த 4 தண்ணி காய்ச்சர பாத்திரமும், பிலிடரும் kitchen slab-லெ இருந்து இறக்கி வைச்சா.. kitchen பெருமூச்சு விடற மாதிரி ஒரு பிரமை.
நம்ம mentality தான் தெரியுமே.. எதையுமே சுலபமா தூக்கி-எறிய மனசு வராதே..இன்னிக்கி தேவை இல்லைன்னா என்ன.. யாரு கண்டா எப்பொ இதோட தேவை வரும்.. அப்படின்னு கட்டிகாக்கும் பொக்கிஷங்கள் ஏராளம். கொஞ்சம் உங்க வீட்டு பரண் மேலயும் பாருங்க..(எனக்கு ஒரு suppourtக்கு தான்).ஆக பரண்ல Only Limited Vacancy
தண்ணி-காய்ச்சர பாத்திரம் பெரிசா இருந்ததால.. குட்டி-குட்டி பாத்திரம் எல்லாம் ஸ்வாஹா பண்ணி பரண்ல ஏறிடுச்சு.ஆனா பிலிடர் மட்டும்.. இடிச்ச-புள்ளியாட்டம் எங்களையே மொறைச்சு “”எந்த மூலைல என்ன தள்ளலாம்ன்னு சதி-திட்டமா போடரீங்க.. விடமாட்டேன்..புதுசா ஒருத்தன் வந்துட்டான்னு என்னை ஓரம்கட்ட பாக்கரீங்களா..?..நானும் ஒரு கை பாக்கரேன்..எப்படி சுமுகமா இருகீங்க.”” அப்படீன்னு சொல்லர மாதிரியே இருந்துது.
அது விட்ட சாபமோ என்னமோ..2 நாள் தான் பசங்க எல்லாரும்..ஆக்வாகார்ட்ல தண்ணி பிடிக்கரேன்னு..பாட்டில்லெ தண்ணி இருந்தாகூட அதை கொட்டிட்டு காலி பாட்டிலோட வந்தாங்க . மூணாவது நாள் பாத்தா..ஆக்வாகார்டுக்கு பாட்டில் அர்ச்சனை…(எல்லாம் காலி பாட்டில் தான்).நூல் போலதான் ஆக்வாகார்ட் தண்ணிய கக்கும். அதை வச்ச கண்ணு வாங்காம பாட்டில்லெ பிடிக்கணும். ( அட தண்ணிய வீணாக்ககூடாதில்லெ..)இப்படி எல்லாதுலையும் தண்ணி பிடிச்சு திரும்பி பார்த்தா விட்டலாச்சார்யா படம் போல புதுசா 3-4 காலி பாட்டில் நம்ம சங்கத்துல சேர்ந்திருக்கும்…<
br />
ம்ம்..ம்.. பிலிடர்- நாள் ( அதாங்க .. அந்த நாள் ஞாபகம்) கருப்பு-வெள்ளை சினிமா மாதிரி ஞாபகம் வந்தது. அப்பெல்லாம் காலை -மாலை மட்டும் பிலிடர்லெ தண்ணி விட்டா போதும். வேணுங்கரவங்க அது குழாய்லெருந்து டம்பலெர்லெ எடுத்து குடிப்பாங்க..பிலிடர் என்கிட்டே ..””பாத்தியா… எல்லாம் நான் விட்ட சாபம் தான்.. என்னை ஓரம்கட்டலாம்னு நினைச்சீங்க இல்லே…இப்போ அனுபவீங்க””..அப்படீன்னு சொல்லரமாதிரி இருந்துது. பிலிடர் கிட்டே மானசீகமா மன்னிப்பு கேட்டேன்..மணி அடிச்சாப்போல சாபத்திர்க்கு விமோசனமும் பிலிடரே காட்டிகொடுத்தது
பிலிடர்லெ 2 பாத்திரம் இருக்கும். மேலே உள்ள பாத்திரத்துலெ தண்ணி விட்டா.. கீழே உள்ள பாத்திரத்துலெ சுத்தமான நீர் சேகரிக்கப்படும். அதுலதாங்க குழாய் இருக்கு. நான் அந்த குழாய் இருக்கர பாத்திரத்தை ஆக்வாகார்ட் கீழெ வச்சு சாப-விமோசனம் பெற்றேன்
சாதத்தில் எங்கேடி காரம் — இது சக்கரை செய்த மாயம்
சனி-ஞாயிரு எல்லாம் நல்லா ஊர் சுத்தி , இன்னிக்கி எழுந்திருச்சதே லேட்டு. வீட்டுல பெரியவங்க … அப்படி ஏற-இறங்க ஒரு பார்வை பார்த்து…ஏதொ சொல்லவராங்க.. ஆனா ஒன்னும் சொல்லலை… (இப்பொவே லேட்டு.. இனி இது வேறயா…தப்பிச்சேன்டா சாமி )
காலைல குளு-குளு பொட்டிய (அதாங்க Fridge) திறந்து பார்த்தா 2-வாடிப்போன காரட்,8-சுருங்கி போன பீன்ஸ் , பாதி-கொடமிள்காய் இவ்வளவு தான் இருக்கு. இப்பொ தான் ஒறச்சுது ஏன் அப்படி பாத்தாங்கன்னு..செ..Lunch box Ready பண்ண ஒருவிதமா சம்மாளிக்கலாம்னு காரட்டையும், பீன்ஸெயும் வேகவச்சு , மிச்சம் இருக்கற கொடமிள்காய் கூட சேர்த்து வதக்கரப்பொ , எப்பவோ துருவி வைச்ச தேங்கா நினைவுக்கு வர அதொட 4 பச்சமிளகாய் அரச்சு , உப்பயும் போட்டு , வதக்கின காய்கறி கூட சாதமும் சேர்த்து வாய்ல வச்சா.. காரம் சும்மா ஜிவ்வு நு ஏறுது.
கஷ்டகாலம்ன்னு வந்தா..பட்ட கால்லெயே படும்ன்னு சொல்லற மாதிரி..
…காரம் ஒருபக்கம் – சமயல் சொதப்பிடுத்தே நம்மவருக்கு மத்யான சாப்பாடு இப்படி ஆயிடுச்செங்கற வருத்தம் இன்னொருபக்கம் தாக்க..கண்ணு முந்நாடி இருந்தது.. ,காபி குடிக்கலாம்ன்னு எடுத்துவச்ச சக்கரை தான் (ஆமாங்க… நான் இன்னும் காபி கூட குடிக்கலை).ஏதோ ஒரு தைரியத்துல 2-ஸ்பூண் சக்கரைய அதோட கலந்து… Lunch box pack பண்ணி கொடுத்தாச்சு.
காரம் ஜாஸ்தி ஆயிடுச்சே ன்னு உப்பு போட- அதை சம்மாளிக்க கொஞ்சம் சாதம் சேர்க்க.. ஆகமொத்ததுல கலந்தது நிறைய ஆயிடுச்சு.செரி.. நாம சொதப்பினதை நாமதான் சாப்பிடணும்.. பெரியவங்களுக்கு வேற சமச்சு வச்சேன்.நான் பரிமார வருவதுக்கு முன்னாடி அவங்களே அந்த சொதப்பல்-சாதம் பொட்டுகிட்டாங்க. பிள்ளையாரப்பா..ன்னு நான் நிக்க..எனக்கு ஒரே இன்ப அதிர்ச்சி..””இந்த Mixed Rice ரொம்ப நல்லா இருக்கே.. ஏன் இதை இத்தனை நாள் பண்ணலை..வெங்காயம் இல்லாம உனக்கு Mixed Rice இவ்வளவு நல்லா பண்ணவரும்னு சொன்னதே இல்லயே..இனிமே அடிக்கடி இதை பண்ணு.. ரொம்ப நல்லா இருக்கு”” அப்படின்னு சொல்லி, எனக்கு ஒரே புகழ்மாலை தான்.
இப்பொவே இதை மறக்காம என்னொட Recipie book ல எழுதி வச்சுகணும். இல்லைநா எப்படி பண்ணினேன்ங்கரதை நானே மறந்துடுவேன்
சாயங்காலம் அவரை கூட்டிகிட்டு பிள்ளையார் கொயிலுக்கு பொய் தேங்காய் வடல் போடணும்
எல்லாரும் மறக்காம வந்துருங்கப்பா.. தேங்காய் பொறுக்க. சாமி பிரஸாதம்–மாட்டேன்னு சொல்லகூடாது..ஓகேவா
நீங்களும் ஏதோ 1-2 விஷயத்துல சொதப்பியிருப்பீங்களே..சும்மா சொல்லுங்க.. என்ன ஆச்சு.?.?.?
மலரும் நினைவுகள்
நான் சமீபத்தில தான் Orkut ல சேர்ந்தேன். ஊர் மேயராப்பல வலைதளத்தை மேஞ்சுகிட்டே இருந்தேனா.. அப்பொ.. சித்தலப்பாக்கம் சாதிசனம் கொஞ்சம் பேர் ஒரு கழகம் துவக்கியிருக்கிறத பாத்தேன் . அருமையா இருக்கு. நானும் என்னை அதுல சேத்துக்க சொல்லி விண்ணப்பம் பொட்டு இருக்கேன். அதுல பாருங்க விண்வெளியில இருந்து நம்ம பேட்டையை படம் புடிச்சு பொட்டிருக்கங்க..சூப்பர்..மா. NSN பள்ளிக்கூடம் , வீரபாண்டிய-கட்டபொம்மன் தெரு, லெனின்-தெரு எல்லாம் அப்படியே தத்ரூபமா இருக்கு. பங்களூர்ல உக்காந்து அதெயெல்லம் பார்த்தா, இதோ இப்பவே சித்த்லப்பாக்கம் பொய்டலாமா நு தோணுது.:-(.
wikimapiaல என்ன ஒரு வசதின்னா.. நாமகூட நமக்கு தெரிந்த இடங்களை அதுல சுட்டிக்காட்டி மத்தவங்களுக்கு வழிகாட்டலாம். அப்படியே நாம அந்த தெருல நடந்து பொகிற சுகம்.
நீங்களும் பாருங்க.. பிடிச்சிருந்தா இங்கே வந்து ஒரு வார்த்தை சொந்நீங்கன்னா மனசுக்கு குஶியா இருக்கும்பா .. சொல்வீங்க இல்லே..?..? ( எல்லம் ஒரு நம்பிக்கை தான்)
புரிந்ததும்..புரியாததும்..
கதை படிசீங்க இல்லயா..?.என்ன முழிக்கறீங்க..இங்கே கதை படிங்க. என் புத்திக்கு எட்டியது இவ்வளவு தான்.
நினைவுகள் எல்லாமே ஒரு சுமை மாதிரி. சிலது பஞ்சாட்டம் சொகமா இருக்கும்…சிலது பாறாங்கல்லாட்டம் கனக்கும்..”நினைப்பு தான் பொழப்ப கெடுக்குது ” ன்னு சொல்லுவாங்க இல்லயா?…
அதுமாதிரி நம்ம மனதை ஒரு-நிலை படுத்தாம பொழப்ப கெடுக்கற எந்த நினைப்பும் பாறாங்கல் தான். அதை உடனே இறக்கவில்லை என்றால், அந்த நினைவின் பாரம் நம்மை வாழக்கயில் முன்னேற முடியாம செய்துவிடும்…அப்படி முன்னேற்றத்தை தடுக்கும் நினைப்பு நமக்கு தேவயா..?..”சீ-போ ” ன்னு சொல்லி அப்படிபட்ட நினைப்பை தூக்கிப் பொட்ட உடனே பாருங்க..சுகமான நினைப்புகள் எல்லம் நினைவுக்கு வந்து அப்படியே பஞ்சாட்டம் முன்னெற்ற பாதையில் சிரமம் இல்லாம போகலாம்.என்ன நான் சொல்வது செரிதானே …? ? ?
"தமிழன்" என்று ஒரு சொல்
பொதுவாக “தமிழ்” என்று சொன்னால் நமக்கு “மொழி” என்று தான் தோன்றும்..தவறில்லை.
நானும் அப்படித் தான் நினைத்தேன். அண்மயில் தான் அறிந்தேன்-உணர்ந்தேன்..”தமிழ்” மொழி மட்டுமல்லாது “உணற்வு”ம் கூட. இதை எனக்கு உணற்த்திய திரு.இராம்தாஸ் க்கு நன்றி. தோழரே..தங்களது எண்ண-பதிவு என்னை சற்று ஸ்தம்பித்து பிறகு சிந்திக்கவும். வைத்தது.
பல ஆயிரங்காலங்காலங்களாக நாமனைவரும் பேசி எழுதி படித்து உணர்ண்து களிக்கும் தமிழெனும் அமுதை தனதென்று அபகரித்து நம்போன்ற இனபலரை ஆரியரென்றும் பார்ப்பனரென்றும் இகழ்ன்து .. .. ..
|
வருந்தாதீர் தொழரே..நம்மைப் போல் அந்தணர்கள் பலபேர் உள்ளார்கள். தமிழ்-பெற்றோறுக்கு பிறந்து, தமிழை தாய்மொழியாககொண்டு ஆனால் உலகத்தாரால் மட்டுமல்லாது நம்-இனத்தார் (சக-தமிழர்கள்) மற்றும் நம்-நாட்டாராலும் “தமிழன்” என்று அங்கீகரிக்கப்படாதவர்கள் நாம் (இது எனது கருத்து மட்டுமே).காரணத்தோடு தான் சொல்கிறேன் பொறுமையுடன் படியுங்கள்.
நாம் பொழப்பை தேடி அசலூர் (தமிழ்நாட்டை விட்டு வெளியே) சென்றால் , நம்மை மதராஸி என்று தான் சொல்வார்கள். இது தென்-இந்திய மாவட்டங்களை சேர்ந்த அனைவர்க்கும் பொருந்தும்.இது அவர்களது அறியாமையா அல்லது அறிய விருப்பமில்லயின்மையா என்று ஆராய்ச்சி செய்யும் மனம் இப்பொது இல்லை. வெளிநாட்டில் இப்படி இருக்க தமிழ்நாட்டில் அந்தணர்கள் / பிராமணர்களை “பார்ப்பரன் -பாப்பாத்தி” என்று (ஏளனமாக) பொதுவாக “”பலர்”” சொல்வார்கள். இம்மாதிரி கசப்பான அனுபவங்கள் எனக்கும் பல உண்டு தொழரே..தனிமயில் வருந்தாதீர் அது உடல்நலத்திற்க்கும் மனநலத்திற்க்கும் நல்லதல்ல.
இத்தகைய அனுபவங்களும் , நான் படித்து அறிந்த விஶயங்களும் எனக்கு ஒரே ஒரு எண்ணத்தை தான் வலியுறித்தின. தன்னை-தான் தமிழன் என்று பரைசாற்றுவோருக்கு மறதி கொஞம் இருக்கு. நாமும் அவற்களை போல் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் என்பதை மறந்து விதுகிரார்கள்..அய்யோ பாவம். “”””திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு “””” என்று தமிழிலே சொல்லியிருப்பதை அறிந்தும்-உணர்ந்தும் வெளி நாட்டில் வியற்வை சிந்தி சம்பாதித பணத்தை கொண்டு தமிழ்நாட்டில் வீடு-மனை வைத்து இன்றும் பலர் வாழ்கிரார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். வற்ணாச்ரம – தர்மங்களுடன் உடன்பாடு இல்லை என்று பகிரங்கமாக அறிவித்து…பள்ளி – பல்களைக்க்ழகம் – அலுவலகங்களில் முற்ப்படுத்தபட்ட இனத்தின் காரணமாக அல்ல திறமயின் காரணமாக தான் உயற்ந்து நிற்கிரோம் என்பதை மறந்து விடுகிரார்கள்.
அங்கீகாரம் என்பது எலோருக்கும் ஊக்கத்தை கொடுக்கும். சற்றே நிதானித்து யொசியுங்கள்.. அலுவலகத்தில் நீங்கள் செய்யும் பணிக்கு அங்கீகாரம் இல்லை என்றால் அங்கே மன-அமைதியுடன் பணிகளை தொடர முடியுமா? கல்லூரிக்கு பொய் வரும் பிள்ளைகளின் ஆர்வத்தயும் உழைப்பயும் நிராகரித்தால் (அங்கீகரிக்க மறந்தால்-மறுத்தால்)அவற்கள் மனம் எவ்வளவு சஞ்லப்படும்.சிருவயதில் நீங்கள் தீட்டிய ஒரு அழகான ஓவியத்தை வெறும் ஒரு பாற்வை மட்டுமே பார்த்து.. உங்களை விட மிக சிறியவர்களான தம்பி-தங்கை யின் கிறுக்கல்களை மிகையாக புகழ்ந்த போது கண்டிப்பக இன்றும் நினைவிற்க்கு வரும்.
அந்த நிலமையில் ஒரு பிள்ளைக்கு இருக்கும் ஆதங்கம் தான் இன்று எனக்கும் (திரு.இராம்தாஸ் மற்றும் எங்களை போல் பல்ர்) உள்ளது. பிற தமிழர்களை போல் எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான் – எங்களது தாய்மொழியும் தமிழ் தான். தமிழ் இலக்கணம்-இலக்கியத்தில் முறையான பயிர்ச்சி இல்லையென்றாலும் தமிழில் பேச-படிக்க-எழுத தெரிந்தவர்கள்
தான்.
ஆக தமிழர்களின் மத்தியிலே “தமிழன்” என்ற அங்கீகாரம் கிடைக்காததின் வெளிப்பாடு தான் இந்த(குமுறல்) பதிவு. யாரையும் குறை சொல்லியோ இழிவாக சொல்வதோ இதன் நோக்கம் அல்ல. இதனால் உங்கள் மனது எந்த விதத்திலாவது புண்பட்டிருந்தால் தயவுகூற்ந்து மன்னியுங்கள்.
தமிழுக்கே “செம்மொழி” என்ற அங்கீகாரம் உலகத்தாற்முன் இருக்க… நாங்கள் கோருவதில் முறைகேடு உண்டோ. . . . . . . . . .
தீபாவளி வாழ்த்துக்கள்
கங்கா-ஸ்நானம் செய்து , பலகாரம் சாப்பிட்டு , பட்டஸும் வெடிது முடித்தாகிவிட்டது. களைப்பாகத் தான் இருக்கும். அக்கடா என்று சற்று தலை சாய்க்கலாம் என்றால் பக்கத்து வீட்டு பசங்கள் வைக்கும் பட்டாசும், பல-பலகாரங்கள் உட்கொண்ட நமது வயிறும் பாடாய் படுத்தும்.
பக்கத்து வீட்டுப் பையனை திட்டமுடியாது (நம்து வாண்டுகளும் சேர்ந்து அல்லவா கொட்டம் அடிக்கிரார்கள்).ஆனால் எல்லா பலகாரங்களையும் ருசி பார்த்த நாவிற்க்கும் வயிற்றுக்கும் மிக முக்கியமான ஒன்றை கொடுக்க மறந்து விடுகிரோம் – ” தீபாவளி மருந்து “.
ஆஹா இது சாப்பிட்ட பிறகு நமது வயிறு நம்மை வாழ்த்துவது நன்றே உணரலாம். ( பக்கத்தில் இருப்பவரை கேளுங்கள் – உங்கள் குறட்டை பட்டாசை விட பலமாக இருக்கும்).” தீபாவளி மருந்து ” ல் என்ன ச்வாரஸ்யம் என்றால் இது செய்வது சுலபம், பொதுவாக எல்லாருக்கும் பிடிக்கும். ஆனால் தீபாவளியின் போது மட்டுமே நினைவுக்கு வரும். வருஶத்துக்கு ஒரு தடவை தான் பண்ணுவோம்.
இதே போல் வருஶத்துக்கு ஒரு முறை மட்டுமே செய்யும் இன்னொரு சிற்றுண்டி – காரடயான் நோம்புக்கு (இதை சாவித்ரி நோம்பு என்றும் சொல்வார்கள்) கடவுளுக்கு படைக்கும் “நோம்பு-அடை”.இதை சாப்பிட்டவர்களை கேட்டால் தெரியும் அதன் சுவைய்யை நினைத்தாலே சப்புக்கொட்ட வைக்கும்.
யாரை குறை சொல்வது — செய்துதாருங்கள் என்று கேட்க மறந்து விடுவதையா ? … தினம்-தினம் இருக்கும் வேலை பளுவில் இதுவேற.. என்ற நினைப்பையா ? … நாமே சமயல்க்குறிப்பை வைத்து செய்து தான் பார்ப்போமே.. என்று நினைக்காத நம் சோம்பேரித்தனத்தையா ??? …
இதில் நீங்கள் என்த ரகம் ?. உங்கள் வீட்டில் “தீபாவளி மருந்து” & “நோம்பு-அடை” அடிக்கடி செய்வீர்களா ..செய்வார்களா..செய்யச்சொல்வீர்களா ? ? ?