வாஷிங்டனில் திருமணம்

..ஹா..ஹா…ஹாச்சூ..பிடி பிடி.. ஏன்டா ரெண்டு நிமிஷம் ஒழுங்கா ஸ்டூல் புடிக்க முடியாதா?.விளயாடரத்துக்கு அவள்ளவு அவசறம்..ம்ம்…
செரி..என் வேலை ஆச்சு..நீ கிளம்பு….
டடே என்னோட அடுத்த பதிவ படிக்க வந்துடீங்களா?..வாங்க..வாங்க.

அது ஒண்ணுமில்லைங்க.. கார்த்திகை தீபம் வருதில்ல.. பரண் மேலெருந்து சுத்தம் செய்யிரதுக்காக விளக்கு எடுத்தேன்..அதான் நீங்க கேட்ட ஹாச்ச்சு. எடுத்தது விளக்கு தான்.. ஆனா..ஜோதியாடம் கண்ணுல பட்டது நான் படிச்சு இல்லை வயிருவலிக்க சிரிச்சு ..அப்புறம்..தினசரி வாழ்க்கைல மறந்து போன திரு.சாவி (சா.விஸ்வநாதன்) எழுதிய “வாஷிங்டனில் திருமணம்”

அதை எழுதும் போது திரு.சாவி. அமேரிக்கா போய் வாஷிங்டன், ந்யூயார்க் எல்லம் நிஜமாவே போய் பார்த்தாரா எல்லாம் எனக்கு தெரியாது, ஆனா..மறுபடியும் இந்த புத்தகத்தை படிக்க-படிக்க..முதல்ல சிரிச்சதைவிட இன்னும் அத்திகமாவே நல்லா சத்தம்போட்டு சிரிச்சேன்..ராத்திரி 10 மணிக்கு. வீட்டுல இருக்கறவங்க எல்லாம் ஒருமாதிரி பாக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நம்மில் பலபேர் இந்த புத்தகத்தில இருக்கற பெரும்பாலான இடங்களை பார்த்திருப்பொம்..Washington DC ,NewYork, Wisconsin Avenue, National Art Gallery..etc. இந்த புத்தகத்தை முழுசா ரசிக்க ஒரே வழி.. தனியா உக்காந்து..கண்ணு வார்த்தைகளை படிக்க-படிக்க… மனசுக்குளே.. அப்பிடியே அதை சினிமா படம் போல பார்க்கவும்.

முயர்ச்சி பண்ணுங்க..இவ்வளவும் செஞ்சதுகப்புறமும் உங்களுக்கு சிரிப்பு வரலைனா சொல்லுங்க.. நான் என் பேரை தீபா விலேருந்து பாதீ ன்னு மாத்தி வச்சுகிறேன்.
நான் ரொம்ப ரசித்த சில வரிகள்:-

கேதரின்-லோசனா நட்பு ” நாளொரு டிரஸ்ஸும்-பொழுதொரு பவுடரு”மாக வளர்ந்தது
லோரிட்ட சொல்கிராள் :- ஒரு டப்பா நிறைய டாஞ்சூர் “ரோட்-டஸ்ட்” கொண்டு வரணும்
மணப்பெண் தாலி கட்டி கொள்வதற்க்கு முன்னால் அவள் “ரூப்-ஸாரி” கட்டிகொள்கிறாள்
போடோமாக் நதியை குறித்து :- போடா மக்கு நதியா…
மஹாலிங்கம் – ஜம்புலிங்கம் மாதிரி அமேரிக்காவிலே ஆப்ரஹாம் லிங்கம் விசேஷ்ம் போலிருக்கு

இன்னும் பல இருக்கு.. பட்டியல் பொட்ணும்னா முழு கதையும் எழுதணும்.
>
சாவியின் வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்தது கொபுவின் சித்திரங்கள்.
இந்த கதை பிரசுரமான வருஷம் உங்கள் யாருக்காவது தெரிஞா கண்டிப்பா சொல்லுங்க..பதிவுல சேத்துக்கரேன்.