Tamil Archive

6th Sense Technology – நாம் சுவாசிக்கும் உலகை டிஜிட்டல் உலகுடன் இணைக்கும் ஆறாம்-அறிவின் தொழில்நுட்பம்

இந்நாள் வரை கணனியம் (Computing.. not necessarily directly refer to computer) சார்ந்த எல்லாச் செயல்பாடுகள் நடைபெறும் டிஜிட்டல் உலகும், நாம் சுவாசிக்கும் (அதாவது பஞ்சேந்திரியங்களுடன் உறவாடும்) "நிஜ" உலகும் தனிதனியே இயங்குகின்றன. டிஜிட்டல் முறையில் தகவல்களை (கணனி)திரையிலும், அன்றாட வாழ்வில் காகிதங்களிலும், நாம் பார்க்கும் காட்சிகளிலும், படிக்கும் புத்தகங்களிலும், ஸ்பரிசிக்கும் பொருட்களிலும் தகவல்கள் குவிந்துகிடக்கின்றன. இவ்விரு உலகிற்கும் இடைவெளி நாளுக்கு நாள் குறைந்துகொண்டு தான் வருகிறது. Pocket PC / Blackberry / iPhone

உள்ளங்கையில் உலகம் – கைப்பேசியில் இணையம்

தொழில்நுட்பம் வளர வளர, நம் "தேவை"களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குளிர்சாதனப் பெட்டியும், தொலைக்காட்சிப் பெட்டியும் "வசதி உள்ளவர்கள்" வாங்கும் பொருட்களாக இல்லாமல், " அத்யாவசியம்" என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி அவசியம் என்றிருந்த காலம் மாறி ஒவ்வொருவருக்கும் கைப்பேசி அவசியம் என்பதும் 'நாம் வாழும் இந்த' காலத்தின் கட்டாயமே என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை. இதே வழக்கில் பார்த்தோமேயானால், இணையத்தொடர்பும் நம் வாழ்க்கை முறையும் பின்னி-பிணைந்து உள்ளது. இணையமும் –

Windows Security – நேரமிருந்தால் பாதுகாப்பு நிச்சயம்.

தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கு மட்டுமே "அத்தியாவசியம்" என்றிருந்த கணனி, இன்று, எல்லா துறையில் இருப்பவர்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. அலுவலகங்களில் மட்டுமல்லாமல், வீடுகளிலும், கல்விமையங்களிலும் கணனியின் பங்கை (கற்றுக்கொள்ள மட்டும் அல்ல, பிரயோகிப்பதிலும் கூட) அலட்சியப்படுத்த முடியாது. செலவு செய்து பொருட்களை வாங்கிக்குவித்தால் மட்டும் போதுமா, அவைகளை முறையே பாதுக்காக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை உணர வேண்டும். இது சாதாரண மேசை – நாற்காலியானாலும் சரி, கணனி போன்ற உயர்தர பொருட்களானாலும் சரி. Microsoft Security Essentials Genuine

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்கள் – பல கேள்விகள், சில விளக்கங்கள்

"மாங்காய்க்குப் புளிப்பே இல்லை, கீரையில் மண் வாடை வருகிறது, மாம்பழத்தில் மருந்தின் சுவை உள்ளது" என்றெல்லாம் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவற்றில் சிலதை நாமும் அனுபவித்திருக்கிறோம். கடைக்காரரிடம் காரணம் கேட்டால், "விவசாயம் செய்பவர்கள் கண்ட கண்ட மருந்தைத் தெளிக்கிறார்கள், இயற்கை உரம் பயன்படுத்துவதில்லை, அதனால் தான் பழைய சுவை ஏதும் காய் மற்றும் பழங்களுக்கு இருப்பதில்லை" என்று சொல்வார்கள். சிந்தித்துப் பார்த்தால் அவர் சொல்வதும் ஓரளவு உண்மை தான். பயிரின் உற்பத்தித் திறனைப் பெருக்க, இரசாயனக் கலவைகளை,

சந்தைக்குப் போகணும் – கார்டு குடு

சந்தைக்குப் போகணும், காசு குடு; ஆத்தா வைய்யும்", என்று பறட்டையிடம் கெஞ்சும் சப்பாணியின் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. வாரம் ஒரு முறை கூடும் சந்தையில் என்னவெல்லாம் வாங்கவேண்டும் என்று வாரம் முழுவதும் பட்டியலிட்டு, சிறுகச் சிறுகச் சேமித்து, காசைக் கடைக்காரரிடம் கைமாறும் முன்னே, நூறு முறை எச்சில் தொட்டு எண்ணிய பிறகே கொடுப்பது என்று இருந்தது அந்தக் காலம். காலச் சக்கிரம் சுழல, பணப் புழக்கமும், அதன் பரிமாணங்களும் மாறின. இன்று வர்த்தகங்களின் பெரும் பகுதி

இதயம் – உள்ளே இருப்பதை வெளியே தாங்கிய குழந்தை

இதயம்", வயதுக்கு ஏற்ப வித விதவிதமான எண்ணங்களை நம்முள் வரச் செய்யும் உறுப்பு. காதலர்களுக்குக் கிளர்ச்சியையும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கொழுப்பையும் (Cholesterol) நினைவுப்படுத்தும். துக்கம் நெஞ்சை அடைக்கும் பொழுது, "இதயம் வெடித்து விடும்போல உள்ளதே" என்று புலம்பச் செய்வதும் இதுவே. இப்படி வெறும் இரத்தமும் சதையும் கொண்ட இந்த உறுப்பு நம்மை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது. ஆனால், நெஞ்சுக் கூட்டுக்குள் "பத்திரமாக" இருக்க வேண்டிய இதயம், "உடலுக்கு வெளியே" உள்ளபடி இருந்தால் எப்படி இருக்கும்? ஆமாம்,